மேலும் அறிய

Covai: தென்மாவட்டங்களுக்கு ரயில் இயக்க வலியுறுத்தி 33 இயக்கங்கள் கோவையில் ரயில் மறியல் போராட்டம்..!

தந்தை பெரியார் திராவிடர் கழகப்  பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார். இதில், திரளான நிர்வாகிகள, இயக்கவாதிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர்.

கோவை மாவட்ட ரயில் நிலையம் முன் தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் கழகம், மே 17 இயக்கம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ், எஸ்.டி.பி.ஐ. , இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு வணிகர் பேரவை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,  உள்பட 33 அமைப்புகள் ஒன்று சேர்ந்து இன்று  (சனிக்கிழமை, டிசம்பர் 3) மாலை 4 மணிக்கு  ரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளனர்.

இதற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகப்  பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார். இதில், திரளான நிர்வாகிகள, இயக்கவாதிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர்.

இதுகுறித்து தந்தை பெரியார் திராவிடர் கழகப்  பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- மத்திய அரசு காசில்லாமல் பயணிக்க, காசிக்கு  ரயில் விடுகிறது. ஆனால், இங்குள்ள மக்கள் காசு கொடுத்து பயணிக்க தயாராக இருக்கக் கூடிய ராமேஸ்வரம், மதுரை, பழனி, திருச்செந்தூர், தென்காசி உள்ளிட்ட நகரங்களுக்கு ரயில் விட மத்திய அரசு மறுக்கிறது. தமிழ் நாட்டிலேயே தொழில் நகரமான கோவையில் வெளி மாவட்டங்களைச் சோ்ந்த மக்கள் ஏராளமானோா் வசித்து வருகின்றனா். குறிப்பாக தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களைச் சோ்ந்த மக்கள் இங்கு அதிகம் வசித்து இங்குள்ள தொழிற்சாலைகளில் பணி புரிகின்றனர்.
 இங்கு தங்கியுள்ள வெளி மாவட்ட மக்கள் தங்களது சொந்த ஊா்களுக்குச் செல்ல அரசுப் பேருந்துகளையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. தற்போது, பொள்ளாச்சி ரயில் பாதை சீரமைப்புப் பணிகள் முடிவடைந்து ரயில்கள் இயக்கம் தொடங்கியுள்ளது.

இந்த நிலையிலும், கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களுக்கு ரயில் போக்குவரத்து இதுவரை தொடங்கப்படவில்லை. கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக தென்மாவட்டங்களுக்கு ரயில் பயணம் தொடங்கப்பட்டால், கோவையில் தங்கியுள்ள வெளி மாவட்ட மக்களில் பல லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள். மேலும், தொழில் நகரமான கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் வர்த்தகமும்  பெருகும். ரயில்வே துறைக்கும் நல்ல வருவாய் கிடைக்கும். இப்படியான பல்வேறு  கோரிக்கையை முன்வைத்து, இந்த ரயில் மறியல் போராட்டம் நடக்கிறது. இதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவ்வாறு தந்தை பெரியார் திராவிடர் கழகப்  பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK VS PMK:
"வேறு வேலை இல்லை" அனல் பறக்கும் அரசியல் களம்.. முதலமைச்சர் கோபத்தின் பின்னணி ?
Fengal Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.!  எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.! எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
Sabarimala Temple: சபரிமலை கோயிலில் எத்தனை பேர் சாமி தரிசனம்? எவ்வளவு வசூல் தெரியுமா..?
சபரிமலை கோயிலில் எத்தனை பேர் சாமி தரிசனம்? எவ்வளவு வசூல் தெரியுமா..?
தம்பியை கொன்ற அண்ணனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
தம்பியை கொன்ற அண்ணனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK VS PMK:
"வேறு வேலை இல்லை" அனல் பறக்கும் அரசியல் களம்.. முதலமைச்சர் கோபத்தின் பின்னணி ?
Fengal Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.!  எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.! எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
Sabarimala Temple: சபரிமலை கோயிலில் எத்தனை பேர் சாமி தரிசனம்? எவ்வளவு வசூல் தெரியுமா..?
சபரிமலை கோயிலில் எத்தனை பேர் சாமி தரிசனம்? எவ்வளவு வசூல் தெரியுமா..?
தம்பியை கொன்ற அண்ணனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
தம்பியை கொன்ற அண்ணனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Watch Video: அல்லு அர்ஜூன் இருந்த மேடையிலே ரசிகரை கழுத்தைப் பிடித்து தள்ளிய பவுன்சர்!
Watch Video: அல்லு அர்ஜூன் இருந்த மேடையிலே ரசிகரை கழுத்தைப் பிடித்து தள்ளிய பவுன்சர்!
கல்லூரி மாணவர்களே... அரிய வாய்ப்பு: மாதாமாதம் ரூ.10 ஆயிரம் நிதியுதவி- அரசு அழைப்பு
கல்லூரி மாணவர்களே... அரிய வாய்ப்பு: மாதாமாதம் ரூ.10 ஆயிரம் நிதியுதவி- அரசு அழைப்பு
கொத்தமல்லி விற்றவர் டூ  சூப்பர் ஸ்டார் பட வில்லன் - கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர் யார்?
கொத்தமல்லி விற்றவர் டூ சூப்பர் ஸ்டார் பட வில்லன் - கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர் யார்?
Embed widget