Electricity : விவசாயிகளின் சாகுபடிக்காக மும்முனை மின்சாரம் வழங்கும் நேரம் அறிவிப்பு - தமிழ்நாடு அரசு
விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும் நேரம் குறித்து சுற்றறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும் நேரம் குறித்த சுற்றறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. டெல்டாவில் ஒவ்வொரு துணைமின் நிலையத்திலும் 2 பிரிவு பிரிக்கப்பட்டு மும்முனை மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, டெல்டா மாவட்டங்களில் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் இரண்டு ( குரூப் 1,குரூப் 2 ) பிரிவுகள் பிரிக்கப்பட்டு
மும்முனை மின்சாரம் வழங்கப்பட உள்ளது. டெல்டா பகுதிகளில் குரூப் 1 குரூப் 2 இரண்டு பகுதிகளுக்கும் காலை நேரத்தில்
8.30 மணியிலிருந்து 2.30 மணி வரை 6 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
டெல்டா மாவட்டங்களில் இரவு நேரத்தில் குரூப் 1 பகுதிக்கு நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையிலும்,குரூப் 2 பகுதிக்கு இரவு 11 மணியிலிருந்து காலை 5 மணி வரையிலும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. டெல்டா அல்லாத மாவட்டங்களில் ஒவ்வொரு துணைமின் நிலையத்திலும் குரூப் 1 பகுதிக்கு காலை 9 மணியில் இருந்து 3 மணி வரைக்கும், இரவு நேரத்தில் 10 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரைக்கும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்டா அல்லாத மாவட்டங்களில் குரூப் 2 பகுதிக்கு காலை 9:30 மணியில் இருந்து மதியம் 3.30 மணி வரைக்கும், இரவு நேரத்தில் 10 மணியிலிருந்து விடியற்காலை 4 மணி வரைக்கும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.