மேலும் அறிய
தமிழகத்தில் கடந்த ஆண்டு 24 ஆயிரம் தீ விபத்துக்கள்: சைலேந்திரபாபு பேட்டி
தமிழகத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் 24 ஆயிரத்திற்கும் அதிகமாக தீவிபத்து குறித்த அழைப்புகள் வந்ததாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

FIRE_ACCIDENT
சென்னை அம்பத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் சைலேந்திரபாபு பல்வேறு தகவல்களை பகிர்ந்தார். அப்போது அவர் கூறுகையில்,

‛‛தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் 31 ஆயிரம் மீட்பு அழைப்புகளையும், 24 ஆயிரம் தீ விபத்து அழைப்புகளையும் சந்தித்துள்ளதாகவும், மீட்பு பணியின் போது 3 தீயணைப்பு வீரர்கள் உயிர் இழந்ததாகவும் வேதனை தெரிவித்த சைலேந்திரபாபு, தீயணைப்பு துறையின் முக்கியமான பணி பொதுமக்களுக்கு தீ விபத்துக்களை பற்றியும் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி விலக்க வேண்டியது என்றும், அந்தப் பணியின் அடிப்படையில் விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















