மேலும் அறிய

திருவண்ணாமலை அண்ணாமலை கோயிலில் குவிந்த பக்தர்கள்! ஐப்பசி மாத உண்டியல் காணிக்கை மட்டும் இவ்வளவா?

உலகப் புகழ்பெற்ற திருக்கோயிலான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மாதந்தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

பஞ்சபூத தலங்களில் அக்னித்தளமாக விளங்கக்கூடியது திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலாகும். அண்ணாமலையார் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சிவனே மலையாக காட்சி அளிக்கிறார். மலையை சுற்றிலும் 14 கிலோமீட்டர் கிரிவலப்பாதை அமைந்துள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில்:

பௌர்ணமி நாட்களில் வெளிநாடு, வெளி மாநிலம், வெளி மாவட்டம், வெளியூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்த நிலையில் ஐப்பசி மாதத்திற்காக பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நாள் 30ம் தேதி தொடங்கி 31ம் தேதி நிறைவடைந்தது. இதில் தொடர்ச்சியாக விடுமுறை நாட்கள் என்பதாலும் பக்தர்களின் கூட்டம் திருவண்ணாமலையில் அலைமோதியது. கிரிவலம் வரக் கூடிய பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலை நகரின் வெளி சுற்றுவட்ட சாலையில் 9 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. 

திருவண்ணாமலை அண்ணாமலை கோயிலில் குவிந்த பக்தர்கள்! ஐப்பசி மாத உண்டியல் காணிக்கை மட்டும் இவ்வளவா?

குவிந்த பக்தர்கள்:

ஐப்பசி பௌர்ணமி இரவில் இருந்து ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வதற்காக திருவண்ணாமலைக்கு பேருந்துகள் மூலம் வந்தனர். இதில் ஆந்திராவை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கார், வேன் மட்டுமின்றி பேருந்துகளில் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்தனர். வாகனம் நிறுத்தும் இடங்களில் பெரும்பாலும் ஆந்திர மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வாகனங்கள் அதிகளவில் இருந்தது.

பக்தர்கள் கோவில் உள்ளே சென்று கூட்ட நெரிசலில் இல்லாமல் சாமி தரிசனம் செய்வதற்காக ராஜகோபுரம்,அம்மணி அம்மன் கோபுரம், திருமஞ்சன கோபுரம், பேகோபுரம், ஆகிய நான்கு கோபுரம் நுழைவாயிலிலும் இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் கோவிலில் பணிபுரியும் கோவில் ஆட்களும் மற்றும் தன்னார்வலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். மேலும் பௌர்ணமி இரவில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர். பௌர்ணமி முடிந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து கிரிவலம் சென்றனர்.

திருவண்ணாமலை அண்ணாமலை கோயிலில் குவிந்த பக்தர்கள்! ஐப்பசி மாத உண்டியல் காணிக்கை மட்டும் இவ்வளவா?

கோயில் காணிக்கை:

இந்நிலையில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கையை மாதந்தோறும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் எண்ணுவது வழக்கம். அதன்படி, ஐப்பசி மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, அண்ணாமலையார் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் நடைப்பெற்றது. கோயில் இணை ஆணையர் ஜோதி முன்னிலையில் நடந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில், நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது, கோயில் உண்டியலில் 2 கோடியே 24 லட்சத்து 41 ஆயிரத்து 224 பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

மேலும், 188 கிராம் தங்கம், 1.224 கிலோ கிராம் வெள்ளி ஆகியவற்றையும் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும், வெளிநாட்டு கரன்சிகளும் உண்டியலில் செலுத்தப்பட்டிருந்தது. பின்னர், உண்டியல் காணிக்கை எண்ணிக்கை முடிந்ததும், அந்த தொகை உடனடியாக அண்ணாமலையார் கோயில் கணக்கில் வங்கியில் செலுத்தப்பட்டது. அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, சமீபகாலமாக உண்டியல் காணிக்கை மாதந்தோறும் 2 கோடியை நெருங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"எனக்கு அஜெண்டா இருக்கு" திருமாவுக்கு பறந்த கடிதம்.. ரகசியத்தை உடைத்த ஆதவ் அர்ஜுனா!
"அடுத்த ஆட்சி வேற மாறி இருக்கும்" ஸ்கெட்ச் போடும் இபிஎஸ்!
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்Allu Arjun Vs Revanth Reddy : ”வெறும் சினிமாக்காரன்..நாட்டுக்கா போராடுனாரு?”ரேவந்த் vs அல்லு அர்ஜுன்!Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"எனக்கு அஜெண்டா இருக்கு" திருமாவுக்கு பறந்த கடிதம்.. ரகசியத்தை உடைத்த ஆதவ் அர்ஜுனா!
"அடுத்த ஆட்சி வேற மாறி இருக்கும்" ஸ்கெட்ச் போடும் இபிஎஸ்!
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
"யப்பா" - 2 MATHS PERIOD: அமித்ஷாவின் ரியாக்ஷனை வைத்து மோடியை கலாய்த்த பிரியங்கா காந்தி
TN Rain Alert: உருவாகிறது..குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டில் மழை இருக்கா?
TN Rain Alert: உருவாகிறது..குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டில் மழை இருக்கா?
உங்களுக்கு நான் இருக்கேன்: இபிஎஸ் போடும் கணக்கு; நிர்வாகிகளுக்கு கொடுத்த அட்வைஸ்
உங்களுக்கு நான் இருக்கேன்: இபிஎஸ் போடும் கணக்கு; நிர்வாகிகளுக்கு கொடுத்த அட்வைஸ்
Premalatha Vijayakanth:
Premalatha Vijayakanth: "விஜய் முதலில் தன்னை நிரூபிக்கட்டும்” ”வாய்சவடால் மட்டும் இருக்கக்கூடாது” -பிரேமலதா விஜயகாந்த்.
Embed widget