மேலும் அறிய

Food Safety Raid: சேலம் மாநகரில் 33 ஹோட்டல்களில் தரமற்ற முறையில் 182 கிலோ சிக்கன் பறிமுதல்

இரவு வரை இந்த சோதனையானது தொடர்ந்து நடைபெற உள்ளது என சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் கதிரவன் பேட்டி.

நாமக்கல் மாவட்டத்தில் சவர்மா சாப்பிட்டு 14 வயது சிறுமி உயிர் எழுந்தார். நாமக்கல் மாவட்டம் முழுவதும் சவர்மா உணவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள உணவு கடைகளில் தரமான உணவுகள் தயாரிக்கப்படுகிறதா என்றும், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் காலாவதியான உணவுகளை அளிப்பதற்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டிருந்தது. அதன்படி சேலம் மாநகர பகுதிகளில் உள்ள சாரதா கல்லூரி சாலை, புதிய பேருந்து நிலையம், அழகாபுரம், பேர்லாண்ட்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் உணவகங்களில் சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கதிரவன் மற்றும் மாநகராட்சி சுகாதார அலுவலர் தலைமையில் குழுவினர் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது தரமற்ற முறையில் இருந்த சவர்மா மற்றும் சிக்கன், மட்டன் உள்ளிட்ட 182 கிலோ இடையிலான உணவுப் பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் உள்ள உணவகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. தரமற்ற உணவுகள் விற்பனை கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். 

Food Safety Raid: சேலம் மாநகரில் 33 ஹோட்டல்களில் தரமற்ற முறையில் 182 கிலோ சிக்கன் பறிமுதல்

சேலம் மாநகரப் பகுதிகளில் இன்று ஒரே நாளில் 30க்கும் மேற்பட்ட கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனையில் சேலம் மாநகரப் பகுதியில் உள்ள இருவதற்கும் மேற்பட்ட பிரபலமான கடைகளில் பழைய மற்றும் சுகாதாரமற்ற முறையில் உணவு பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதில் 182 கிலோ சிக்கன் மற்றும் மட்டன், 17 கிலோ சமைத்து வைக்கப்பட்டிருந்த அரிசி சாப்பாடு, 18 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், 500 கிராம் மயோனிஸ், 300 கிராம் உணவு நிறைவூட்டி, 2 கிலோ சவர்மா சிக்கன் உள்ளிட்டவைகளை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அவற்றை உடனடியாக அளித்தனர். மேலும் 10க்கும் மேற்பட்ட கடைகளுக்கு தரமற்ற உணவுகள் வைத்திருந்ததற்கான விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. 

Food Safety Raid: சேலம் மாநகரில் 33 ஹோட்டல்களில் தரமற்ற முறையில் 182 கிலோ சிக்கன் பறிமுதல்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் கதிரவன், சேலம் மாவட்டத்தில் சவர்மாவிற்கு தடை என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை. உணவகங்களில் தரமற்ற உணவுப் பொருட்கள் வைத்திருப்பது மற்றும் தரம் மற்ற உணவுகளை தயாரிக்கிறார்களா என ஆய்வு செய்து வருகின்றோம். சவர்மா என்பது மாலை நேரங்களில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் உணவு. எனவே இரவு வரை இந்த சோதனையானது தொடர்ந்து நடைபெற உள்ளது என்றார். உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி இரண்டு வகையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஒன்று உடனடியாக அபராதம் விதிப்பது மற்றொன்று உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து இந்த இரண்டு நடவடிக்கைகளும் தரமற்ற உணவுகள் தயாரிப்பவர்கள் மீது எடுக்கப்படும். சவர்மா தயாரிக்கும் உணவுகங்களில் வாடிக்கையாளர்கள் அதிகம் வருவதால் முறையான வகையில் சமைக்காத சவர்மாக்களை வழங்குவதால் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது. ஒருமுறை சவர்மா மிஷினில் இருந்து வெட்டி எடுத்துவிட்டால் அதன் உள்பகுதியால் உள்ள சிக்கன் 25 நிமிடங்களுக்கு மேலாக நெருப்பில் வேக வேண்டும். ஆனால் உணவகங்களில் வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக சவர்மா தயாரித்துக் கொடுப்பதால் சிக்கனில் உள்ள கிருமிகள் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Embed widget