மேலும் அறிய

Anbumani: 5 ஆண்டில் 170+ பட்டாசு ஆலை தொழிலாளர்கள் பலி; இதுதான் காரணம்; சாடிய அன்புமணி

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் 18 பேர் உயிரிழப்பு: ஐந்தாண்டுகளில் 170-க்கும் மேற்பட்டோர் சாவு -பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்.

திமுக ஆட்சியில்  மட்டும் 170-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலை தொழிலாளர்கள் விபத்துகளில் சிக்கி உயிரிழந்துள்ளதாக அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:

’’விருதுநகர் அருகே வச்சக்காரப்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று மாலை ஏற்பட்ட பயங்கர விபத்தில் 18 தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்தக் கொடிய விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அப்பாவித் தொழிலாளர்களின் உயிரிழப்புக்கு காரணம் என்ன?

வச்சக்காரப்பட்டி வனஜா பட்டாசு ஆலையில் குறுகிய அறையில் அதிக தொழிலாளர்கள் பணி செய்ததும், பாதுகாப்பற்ற முறையில் வீரியம் மிக்க வெடி மருந்துகள் பயன்படுத்தப்பட்டதும்தான் இந்த விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.  இது அப்பட்டமான விதிமீறல் ஆகும். இத்தகைய விதிமீறல்களை திமுக அரசு கண்டு கொள்ளாதது தான் அப்பாவித் தொழிலாளர்களின் உயிரிழப்புக்கு காரணம் ஆகும். இந்த விபத்துக்கு திமுகதான் பொறுப்பேற்க வேண்டும்.

ஒரே பட்டாசு ஆலையை ஒன்றுக்கும் மேற்பட்டோருக்கு குத்தகைக்கு விடுவதால், ஒரே நேரத்தில்  4 பிரிவினர் அளவுக்கு அதிகமாக பட்டாசு தயாரிக்க முயல்வது, நாள் கூலிக்கு பதிலாக, உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஊதியம் வழங்கும் முறை கொண்டு வரப்பட்டிருப்பதால் தொழிலாளர்கள் மிகவும் வேசமாக பட்டாசு தயாரிப்பது ஆகியவைதான் விபத்துகளுக்கு காரணமாகும்

இந்த ஆபத்தான முறைகளை தடுக்க வேண்டும்; கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும் என்று  திமுக அரசை பாட்டாளி மக்கள் கட்சி பல முறை வலியுறுத்தியுள்ளது. ஆனால், அடி முதல் நுனி வரை அனைத்து நிலைகளிலும் ஊழல் ஊடுருவியுள்ள  திமுக அரசின் நிர்வாகத்தில்  விதிமீறல்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை.  திமுகவின் இந்த  தீய நடவடிக்கைகளால் தான் அப்பாவிகளின் உயிரிழப்புகள் தொடர்கின்றன.

5 ஆண்டில் 170+ உயிரிழப்புகள்

2025-ஆம் ஆண்டில் விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 16 பட்டாசு விபத்துகள் நடந்தன. அவற்றில்  37 பேர் உயிரிழந்தனர். நடப்பாண்டில் இதுவரை நடந்த பட்டாசு ஆலை விபத்துகளில்  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25-ஐ தாண்டியுள்ளது. இன்றைய விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.  திமுக ஆட்சியில்  மட்டும் 170-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலை தொழிலாளர்கள் விபத்துகளில் சிக்கி  உயிரிழந்துள்ளனர். 

வச்சக்காரப்பட்டி பட்டாசு ஆலை விபத்தில் காயமடைந்து உயிருக்கு போராடும் தொழிலாளர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த மருத்துவம் அளிக்கப்பட வேண்டும். தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வீதமும், காயமடைந்தோருக்கு  தலா ரூ.5 லட்சம் வீதமும் இழப்பீடு வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் பட்டாசு ஆலை விபத்துகளைக் கட்டுப்படுத்த புதிய கொள்கைகள் வகுக்கப்படும்’’.

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

கள்ளுக்கான தடையை மறு ஆய்வு செய்ய கோரி மனு.. உள்துறை முதன்மைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு !
கள்ளுக்கான தடையை மறு ஆய்வு செய்ய கோரி மனு.. உள்துறை முதன்மைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு !
கண் எதிரே பதராகிப்போன 60 நாள் பயிர்! கண்ணீரில் கிராமம் - அதிரடி நடவடிக்கை எடுக்குமா அரசு?
கண் எதிரே பதராகிப்போன 60 நாள் பயிர்! கண்ணீரில் கிராமம் - அதிரடி நடவடிக்கை எடுக்குமா அரசு?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
சிவப்பு பட்டு, சாமந்தி பூ அலங்காரத்தில் தேவி! காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் தங்கத் தேர் உற்சவம் - முழு விவரம்!
சிவப்பு பட்டு, சாமந்தி பூ அலங்காரத்தில் தேவி! காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் தங்கத் தேர் உற்சவம் - முழு விவரம்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget