கரூர்: 14 வயது சிறுமி கர்ப்பமான வழக்கு - இளைஞர் உள்பட 3 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை
கரூரில் பாலியல் தொல்லை - சிறுமி கடத்தப்பட்ட வழக்கில், தாய், தந்தை, மகன் உள்ளிட்ட மூன்று பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை. இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு இந்த நீதிமன்றம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கரூரில் பாலியல் தொல்லை - சிறுமி கடத்தப்பட்ட வழக்கில், தாய், தந்தை, மகன் உள்ளிட்ட மூன்று பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை.
கரூர் நகர காவல் சரகம், கரூர் சின்னாண்டாங்கோவிலிலில் வசித்து வரும் இந்து தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த சிறுமி கரூரிலுள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தபோது, கரூர் ஆத்தூர் பிரிவில் தனது பெற்றோருடன் வசித்து வரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த கௌசிக்குமார் (எ) கௌசிக் என்பவர் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி 14 வயதுடையவர் என்று தெரிந்தும் அவரை காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்வதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி அவரை ஏமாற்றி கடந்த (29.09.2021)-ல் சிறுமியை திருப்பூருக்கு அழைத்து சென்று அங்குள்ள புத்து மாரியம்மன் கோவிலில் வைத்து, சிறுமி என்று தெரிந்தும் கௌசிக்குமாருக்கு அவரின் தாய் மற்றும் தந்தை திருமணம் செய்து வைத்துள்ளனர்.
மேலும் சிறுமியை கௌசிக்குமார் தந்தையான சரவணன் தங்கியிருந்த வாடகை வீட்டிற்கு அழைத்து சென்று தங்க வைத்தும், அப்போது கௌசிக்குமார் சிறுமியை பலமுறைபாலியல் ரீதியாக சிறுமியை துன்புறுத்தியுள்ளார்., இந்நிலையில் தனது மகள் வீட்டிற்கு வராததால் பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காத காரணத்தால் கடந்த 4.10.2021 அன்று கரூர் நகர காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.
அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட கரூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 09.10.2021 அன்று கௌசிக்குமார் கைது செய்து சிறையிலடைத்துள்ளனர். மேலும் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேற்படி சிறுமியை மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவ அலுவலர் சிறுமி 5 வாரம் கர்ப்பமாக உள்ளார் என கண்டறியப்பட்டடது.
கரூர் நகர கோட்ட துணை கண்காணிப்பாளர் இந்த வழக்கினை விசாரணை மேற்கொண்டதில் சிறுமி என்றும் பாராமல் திருமணம் செய்து பாலியல் ரீதியாக துன்புறுத்திய இளைஞர் கெளசிக்குமார் (எ) கெளசிக் உட்பட திருமணம் செய்து வைத்த தாய் சுமதி மற்றும் தந்தை சரவணன் உட்பட்ட மூன்று பேருக்கு இன்று மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி நசீமாபானு மூவருக்கும் போஸ்கோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும்., குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது., இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நான்கு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு இந்த நீதிமன்றம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கரூர் தனியார் கல்லூரியில் குட்கா சாப்பிட்ட மாணவரை பேராசிரியர்கள் கண்டித்ததால் மூன்றாவது மாடியில் இருந்து தற்கொலை முயற்சி.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த கொடையூர் பகுதியில் தனியார் (வள்ளுவர்) அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரி அமைந்துள்ளது. இரு பாலர் பயிலக்கூடிய இந்த கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்
இந்த கல்லூரியில் லாலாபேட்டை அடுத்த பில்லபாளையம் பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவரின் மகன் அரவிந்த் சபரி (வயது 18) பிபிஏ முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். கல்லூரி வளாகத்தில் மாணவர் குட்கா (ஹான்ஸ் பாக்கெட்) சாப்பிட்டதாக கூறப்படுகிறது. கல்லூரி பேராசிரியர்கள் அவரை கண்டித்ததால் மேலும் பெற்றோரை அழைத்து வந்தால் மட்டுமே கல்லூரிக்குள் வர வேண்டும் என கல்லூரி நிர்வாகம் கூறியதால், அச்சத்தில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்தார்.
அப்போது அதிர்ஷ்டவசமாக கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள தென்னை மரத்தின் மட்டையில் மோதி மாணவர் கீழே புல் தரையில் விழுந்ததில், கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மாணவர் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தகவல் அறிந்த அரவக்குறிச்சி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.