மேலும் அறிய

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே முதன்மையானது - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

ஆலோசனை கூட்டம் நாளை மற்றும் நாளை மறுநாள் மேலும் சில குழுக்களுடன் ஆலோசனை நடத்திய பின்பே நல்ல முடிவு எடுக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் தனியார் பள்ளி மாணவர்களுக்கான கட்டணம் நிர்ணயம் செய்தல் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் உயர்கல்வித்துறை (கூடுதல்) செயலாளர் அபூர்வா, அரசு தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி ஆகியோர் பங்கேற்றனர். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதாவது, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது நடத்த வேண்டும் என்பது தொடர்பாக அனைத்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், மாணவர்களின் எதிர்காலம் முக்கியம் என்றாலும் கூட மாணவர்கள் உடல் நலம் அதைவிட முக்கியமானது என்பதால் நன்று ஆலோசித்து மட்டுமே எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம். 

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே முதன்மையானது - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

இது தொடர்பாக முதலமைச்சர் முக ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தியபின்பு அவரின் அறிவுறுத்தபடி முடிவுகள் எடுக்கப்படும். இந்த ஆலோசனை கூட்டம் நாளை மற்றும் நாளை மறுநாள் மேலும் சில குழுக்களுடன் ஆலோசனை நடத்திய பின்பே நல்ல முடிவு எடுக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்தார். பள்ளிக் கட்டமைப்பு என்பது நகர்ப்புறங்களில் ஒரு மாதிரியாகும், கிராமப்புறங்களில் ஒரு மாதிரியாகவும் உள்ளது. அதன் சீர்திருத்தம் குறித்தும் கொரோனா காலங்களில் எப்படிப்பட்ட கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்பது தொடர்பான ஆலோசனையும் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.  

12-ஆம் வகுப்பு மாணவர்கள் நேரடியாக தேர்வு எழுத வருவதில் சிக்கல் உள்ளது! மாணவர்கள் தேர்வுக்கு வந்தாலும் கூட அதனால் வீட்டில் உள்ளவர்களையும், மற்ற மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே முதன்மையானது - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக மற்ற மாநிலங்களில் எப்படிப்பட்ட நிலை கையாளப்பட்டுள்ளது என்பதை ஆராய செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும், அதன் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார். நீட் தேர்வு & சிறப்பு வகுப்பு தொடர்பாக எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை! நீட் தேர்வுக்கு விலக்கு குறித்து முடிவு எடுக்கப்பட்ட பின்னரே, தேர்வு குறித்து விவாதிக்கப்படும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

களை கட்டும் மாட்டுச்சந்தை... விற்பனை அமோகமாக நடப்பதால் தஞ்சை விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி
களை கட்டும் மாட்டுச்சந்தை... விற்பனை அமோகமாக நடப்பதால் தஞ்சை விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி
எதிர்பார்த்திருக்கும் வேலைவாய்ப்பு... விரைவில் அறிவிப்பு வெளியாகலாம்: ரெடியாக இருங்க
எதிர்பார்த்திருக்கும் வேலைவாய்ப்பு... விரைவில் அறிவிப்பு வெளியாகலாம்: ரெடியாக இருங்க
Ashta Varahi: அஷ்ட வராஹி சுவாசினி பூஜை - இவ்ளோ பலன்கள் இருக்கா? எப்போது? எப்படி கொண்டாட வேண்டும்?
அஷ்ட வராஹி சுவாசினி பூஜை - இவ்ளோ பலன்கள் இருக்கா? எப்போது? எப்படி கொண்டாட வேண்டும்?
பேராவூரணியில் பரபரப்பின் உச்சம்... காய்கறிகளைக் கொட்டி வியாபாரிகள் போராட்டம்: பின்னணி என்ன?
பேராவூரணியில் பரபரப்பின் உச்சம்... காய்கறிகளைக் கொட்டி வியாபாரிகள் போராட்டம்: பின்னணி என்ன?

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai : மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
ஃபிஃபா உலகக்கோப்பை இறுதி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- வெளியான அதிரடி அறிவிப்பு!
ஃபிஃபா உலகக்கோப்பை இறுதி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- வெளியான அதிரடி அறிவிப்பு!
Monsoon Bills: பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
அதிக மைலேஜ் கிடைக்கணுமா? பெட்ரோலை நிரப்ப பெஸ்ட் டைம் எது? அறிவியல் உண்மைகள்!
அதிக மைலேஜ் கிடைக்கணுமா? பெட்ரோலை நிரப்ப பெஸ்ட் டைம் எது? அறிவியல் உண்மைகள்!
10 தேசிய விருதுகளை வாங்கி குவித்த தமிழ் திரைத்துறை.! தனுஷ், ஜி.வி.பிரகாஷை பாரட்டிய சிஎம் விஜய்
10 தேசிய விருதுகளை வாங்கி குவித்த தமிழ் திரைத்துறை.! தனுஷ், ஜி.வி.பிரகாஷை பாரட்டிய சிஎம் விஜய்
National Awards: தேசிய விருதா? சோப்பு டப்பாவா? புரட்டி எடுக்கும் நெட்டிசன்ஸ், என்ன இருக்குன்னு இதுக்குலா அவார்ட்?
தேசிய விருதா? சோப்பு டப்பாவா? புரட்டி எடுக்கும் நெட்டிசன்ஸ், என்ன இருக்குன்னு இதுக்குலா அவார்ட்?
R S Bharathi :
"விஜய்க்கு ஆபத்து வந்தா... அதுக்குக் காரணம் ஆதவ் அர்ஜுனாதான்!" -அலர்ட் செய்யும் ஆர்.எஸ்.பாரதி
R. B. Udhayakumar : ஜனநாயகன் படம் வெளியீட்டிற்கு அரசு விடுமுறையா.? அமைச்சர் புஸ்ஸி ஆனந்தை போட்டுத்தாக்கும் ஆர்.பி.உதயகுமார்
ஜனநாயகன் படம் வெளியீட்டிற்கு அரசு விடுமுறையா.? அமைச்சர் புஸ்ஸி ஆனந்தை போட்டுத்தாக்கும் ஆர்.பி.உதயகுமார்
Embed widget