மேலும் அறிய

திமுக அரசு பொறுப்பேற்ற பின் 1000-வது கும்பாபிஷேகம்.. சென்னை காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்..

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத்துறை தனது நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள தொன்மையான கோவில்களில் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு  பணிகளை மேற்கொண்டு வருகிறது. கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆகம விதிப்படி கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். அதன்படி, கும்பாபிஷேகம் நடைபெறாத கோவில்களை கண்டறிந்து கும்பாபிஷேகம் நடத்தும் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த 26 மாதங்களில் இந்து சமய அறநிலையத்துறை இந்த பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இந்து சமய அறநிலையத்துறையின் வரலாற்றில் ஒரு மைல் கல்லாக 1,000-வது கும்பாபிஷேகம் சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் இன்று (10-ஆம் தேதி) கோலாகலமாக நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பங்கேற்று கும்பாபிஷேக விழாவை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.  தொடர்ந்து காலை 7 மணிக்கு கலச புறப்பாடும், 7.30 மணிக்கு அனைத்து கோபுரங்கள் மற்றும் இராஜகோபுரத்திற்கு திருக்குட நன்னீராட்டு விழாவும்  நடைபெற்றது.  இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று  சாமி தரிசனம் செய்தனர்.

கும்பாபிஷேக விழாவில் கௌமார மடம், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள்.  சிவநெறிச் செம்மல் கே.பிச்சை குருக்கள், சிவபுரம் கல்வி அறக்கட்டளை நிறுவனர் ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார், திருக்கயிலாய பரம்பரை வேளக்குறிச்சி ஆதீனம் சீர்வளர்சீர் சத்ய ஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள், பழநி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சிவாச்சாரியார் செல்வ சுப்பிரமணிய குருக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது எல்லார்க்கும் எல்லாம்" என்ற #DravidianModel ஆட்சியில் அனைத்துத் துறைகளும் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக @tnhrcedept-இன் செயல்பாடுகள் அனைத்திலும் சிறப்பாக இருக்கின்றன. 5000 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துக்களை இரண்டு ஆண்டு காலத்தில் மீட்டது திமுக அரசு. இன்றைய நாள், 1000-வது கோயில் குடமுழுக்கு விழாவை மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோயிலில் நிகழ்த்தியிருக்கிறது இந்து சமய அறநிலையத்துறை. இறைநம்பிக்கையாளர் அனைவரும் போற்றும் இணையற்ற ஆட்சியாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. இதற்குக் காரணமான அமைச்சர் @PKSekarbabu அவர்களையும் - அதிகாரிகளையும் - அலுவலர்களையும் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்!. இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க

Aditya L1: கெட் ரெடி..! ஆதித்யா எல் 1 விண்கலத்தை வெற்றிகரமாக அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்ற இஸ்ரோ.. அதிகாலை சம்பவம்

CM Stalin: அமெரிக்க அதிபர் பைடனை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின்.. ஜி20 மாநாட்டில் நடந்தது என்ன?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GT vs KKR LIVE Score: டாஸ் போடுவதில் தாமதம்; மேட்ச் நடக்குமா நடக்காதா? அகமதாபாத்தில் என்ன நடக்குது?
GT vs KKR LIVE Score: டாஸ் போடுவதில் தாமதம்; மேட்ச் நடக்குமா நடக்காதா? அகமதாபாத்தில் என்ன நடக்குது?
Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
Lok Sabha Election 2024 LIVE: ஆந்திராவில் 75 சதவீதம், தெலங்கானாவில் 61.16 சதவீதம்.. வெளியான வாக்குப்பதிவு சதவீதம்..!
ஆந்திராவில் 75 சதவீதம், தெலங்கானாவில் 61.16 சதவீதம்.. வெளியான வாக்குப்பதிவு சதவீதம்..!
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Ramdoss : மோடியின் சர்ச்சை பேச்சு எஸ்கேப்பான ராமதாஸ் முஸ்லீம் குறித்து பேசியது சரியா?Pondichery : பாண்டிச்சேரியில் 1 நாள்...150 ரூபாய் PACKAGE இத்தனை இடங்களா?Felix Gerald Arrest :  கணவரை தேடிய மனைவி போலீஸ் வேனில் Felix திடீர் திருப்பம்KPY Bala :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GT vs KKR LIVE Score: டாஸ் போடுவதில் தாமதம்; மேட்ச் நடக்குமா நடக்காதா? அகமதாபாத்தில் என்ன நடக்குது?
GT vs KKR LIVE Score: டாஸ் போடுவதில் தாமதம்; மேட்ச் நடக்குமா நடக்காதா? அகமதாபாத்தில் என்ன நடக்குது?
Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
Lok Sabha Election 2024 LIVE: ஆந்திராவில் 75 சதவீதம், தெலங்கானாவில் 61.16 சதவீதம்.. வெளியான வாக்குப்பதிவு சதவீதம்..!
ஆந்திராவில் 75 சதவீதம், தெலங்கானாவில் 61.16 சதவீதம்.. வெளியான வாக்குப்பதிவு சதவீதம்..!
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
En Kalloori Kanavu : என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? முழு விவரம் இதோ!
என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? விவரம்
Rahul Gandhi Marriage : எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
Watch Video: இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
Dhanush :  நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Dhanush : நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Embed widget