மேலும் அறிய

Manipur: சரின்னு சொல்லுங்க; ரூ.10 கோடி மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் ரெடி! - மணிப்பூருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்

மணிப்பூர் மாநில முதலமைச்சர் பைரேன் சிங்கிற்கு  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மணிப்பூரில் தற்போது நிலவி வரும் சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு உதவிடும் பொருட்டு 10 கோடி ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைத்திட ஒப்புதல் வழங்கிடக் கோரி மணிப்பூர் மாநில முதலமைச்சர் பைரேன் சிங்கிற்கு  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதனை பலரும் பாராட்டி வருகின்றனர். 

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், ” தற்போதைய சூழ்நிலையின் காரணமாக 50,000-க்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு சில அத்தியாவசிய பொருட்களின் தேவை அதிகரித்து வருவதாகவும் தனது கவனத்திற்கு வந்ததாகத் தெரிவித்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இந்த இக்கட்டான நேரத்தில், சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான தார்பாலின் விரிப்புகள் படுக்கை விரிப்புகள், கொசுவலைகள் அத்தியாவசிய மருந்துகள், சானிட்டரி நாப்கின்கள் மற்றும் பால் பவுடர் போன்ற தேவையான நிவாரணப் பொருட்களை வழங்குவதன் மூலம் மணிப்பூர் மாநிலத்திற்கு உதவிகளை வழங்கிடத் தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என்றும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த பொருட்கள் முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் தேவைப்பட்டால் அவற்றை விமானம் மூலம் அனுப்பிவைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த மனிதாபிமான உதவிக்கு மணிப்பூர் மாநில அரசின் ஒப்புதலை வழங்குமாறு தாம் கேட்டுக்கொள்வதாகவும், மேலும், இது தொடர்பாக எடுக்கப்படவேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தெரியப்படுத்தவும் கோரியுள்ளார். இதன் மூலம் தமிழ்நாடு அரசின் அதிகாரிகள் மணிப்பூர் மாநில அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொண்டு நிவாரணப் பொருட்களை விரைவாக அனுப்ப இயலும் என்றும்” முதலமைச்சர் அந்த  கடிதத்தில் தெரிவித்துள்ளார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Temperature: கத்திரி வெயில் முடிந்தாலும் வெப்பம் தணியவில்லையே.. சென்னையில் 107 டிகிரி! அவதியில் மக்கள்!
Chennai Temperature: கத்திரி வெயில் முடிந்தாலும் வெப்பம் தணியவில்லையே.. சென்னையில் 107 டிகிரி! அவதியில் மக்கள்!
TN School Reopening: இரண்டு நாட்கள்தானே! ஒரேடியா ஜூன் 10ஆம் தேதிக்கு மாற்றலாமே! பள்ளிகள் திறப்பில் எழும் கோரிக்கை!
TN School Reopening: இரண்டு நாட்கள்தானே! ஒரேடியா ஜூன் 10ஆம் தேதிக்கு மாற்றலாமே! பள்ளிகள் திறப்பில் எழும் கோரிக்கை!
"எனக்கு ஏன் திருமணம் செய்யல”; குடிபோதையில் அண்ணனை வெட்டி குப்பையில் புதைத்த தம்பி
MS Dhoni Fan: கவலைப்படாதே! ஆப்ரேஷனை நான் பாத்துக்கிறேன் - கிரவுண்டில் ரசிகருக்கு தோனி சொன்ன தைரியம்!
MS Dhoni Fan: கவலைப்படாதே! ஆப்ரேஷனை நான் பாத்துக்கிறேன் - கிரவுண்டில் ரசிகருக்கு தோனி சொன்ன தைரியம்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Annamalai bjp meeting : ANTI-அண்ணாமலை GANG... பாஜகவில் விரிசல்? கமலாலயம் EXCLUSIVEModi at Kanyakumari : விவேகானந்தர் vs மோடி.. அதே மூன்று நாட்கள்! கன்னியாகுமரி தியானம்!Amit Shah vs VK Pandian : ”ஒடிசாவை தமிழன் ஆள்வதா?” பற்றவைக்கும் அமித்ஷா! டார்கெட் VK பாண்டியன்!Mayiladuthurai Skeleton : செப்டிக் டேங்கில் எலும்புக்கூடு.. மயிலாடுதுறையில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Temperature: கத்திரி வெயில் முடிந்தாலும் வெப்பம் தணியவில்லையே.. சென்னையில் 107 டிகிரி! அவதியில் மக்கள்!
Chennai Temperature: கத்திரி வெயில் முடிந்தாலும் வெப்பம் தணியவில்லையே.. சென்னையில் 107 டிகிரி! அவதியில் மக்கள்!
TN School Reopening: இரண்டு நாட்கள்தானே! ஒரேடியா ஜூன் 10ஆம் தேதிக்கு மாற்றலாமே! பள்ளிகள் திறப்பில் எழும் கோரிக்கை!
TN School Reopening: இரண்டு நாட்கள்தானே! ஒரேடியா ஜூன் 10ஆம் தேதிக்கு மாற்றலாமே! பள்ளிகள் திறப்பில் எழும் கோரிக்கை!
"எனக்கு ஏன் திருமணம் செய்யல”; குடிபோதையில் அண்ணனை வெட்டி குப்பையில் புதைத்த தம்பி
MS Dhoni Fan: கவலைப்படாதே! ஆப்ரேஷனை நான் பாத்துக்கிறேன் - கிரவுண்டில் ரசிகருக்கு தோனி சொன்ன தைரியம்!
MS Dhoni Fan: கவலைப்படாதே! ஆப்ரேஷனை நான் பாத்துக்கிறேன் - கிரவுண்டில் ரசிகருக்கு தோனி சொன்ன தைரியம்!
Breaking News LIVE: தமிழ்நாட்டிற்கு கூடுதலாக உதவி தேர்தல் அலுவலர்கள் நியமனம் - இந்திய தேர்தல் ஆணையம்
Breaking News LIVE: தமிழ்நாட்டிற்கு கூடுதலாக உதவி தேர்தல் அலுவலர்கள் நியமனம் - இந்திய தேர்தல் ஆணையம்
Delhi Temperature: டெல்லியில் 52.3டிகிரி செல்சியஸ்: கடும் வெப்ப அலை வீசும் என வானிலை மையம் எச்சரிக்கை
Delhi Temperature: டெல்லியில் 52.3டிகிரி செல்சியஸ்: கடும் வெப்ப அலை வீசும் என வானிலை மையம் எச்சரிக்கை
Adani Paytm Deal: பேடிஎம் பங்குகளுக்கு ஸ்கெட்ச் போட்டாரா அதானி? வெளியானது அதிகாரப்பூர்வ தகவல்!
Adani Paytm Deal: பேடிஎம் பங்குகளுக்கு ஸ்கெட்ச் போட்டாரா அதானி? வெளியானது அதிகாரப்பூர்வ தகவல்!
IAF Agniveer Recruitment: விமானப் படையில் வாய்ப்பு; ரூ.40 ஆயிரம் சம்பளம்- அக்னிவீர் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
விமானப் படையில் வாய்ப்பு; ரூ.40 ஆயிரம் சம்பளம்- அக்னிவீர் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Embed widget