Adani Paytm Deal: பேடிஎம் பங்குகளுக்கு ஸ்கெட்ச் போட்டாரா அதானி? வெளியானது அதிகாரப்பூர்வ தகவல்!
Adani Paytm Deal: Paytm நிறுவனத்தின் பங்குகளை அதானி குழுமம் வாங்க பேச்சு வார்த்தை நடத்தியதாக ஆங்கில ஊடகங்களில் செய்திகள் வெளியானதையடுத்து இரு நிறுவனங்களும் விளக்கம் அளித்துள்ளன.
![Adani Paytm Deal: பேடிஎம் பங்குகளுக்கு ஸ்கெட்ச் போட்டாரா அதானி? வெளியானது அதிகாரப்பூர்வ தகவல்! Adani Paytm Deal Adani Group Denies Reports Claiming Gautam Adani Talks with Vijay Shankar Sharma Buy Stake Adani Paytm Deal: பேடிஎம் பங்குகளுக்கு ஸ்கெட்ச் போட்டாரா அதானி? வெளியானது அதிகாரப்பூர்வ தகவல்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/29/2018facd03abd2a2ca187bb6773b34991716975161910102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Paytm இன் பங்குகளை வாங்குவதற்கு Paytm நிறுவனர் விஜய் சங்கர் சர்மாவுடன் அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி பேச்சுவார்த்தை நடத்துகிறார் என்ற செய்திகள் ஆங்கில ஊடகங்களில் வெளியானது. அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி Paytm இன் தாய் நிறுவனமான One 97 Communications இன் பங்குகளை வாங்க உள்ளதாக பெயரிடப்படாத ஆதாரங்களை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியானது.
இந்த செய்திகள் குறித்து Paytm நிறுவனம் மறுப்பு தெரிவித்த பிறகு, அதானி குழுமமும் தங்களது தரப்பில் இருந்து மறுப்பு தெரிவித்துள்ளனர். அதானி குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் தனியார் ஊடக ஏஜென்சிக்கு அளித்த பேட்டியில் "இந்த ஆதாரமற்ற பொய்யான தகவலை நாங்கள் திட்டவட்டமாக மறுக்கிறோம். இது முற்றிலும் தவறானது மற்றும் பொய்யானது" தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே வெளியான செய்திகளில் Paytm நிறுவனர் மற்றும் சி.இ.ஓ., விஜய் சேகர் சர்மா நேற்று அதாவது மே 28ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள கௌதம் அதானியின் அலுவலகத்தில் ஒரு ஒப்பந்தத்தின் இறுதிகட்ட பேச்சுவார்த்தைகளை முடிக்க அவரை சந்தித்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. இப்போது இரு நிறுவனங்களும் இந்த தகவலை மறுத்தது மட்டும் இல்லாமல், இந்த தகவல் திட்டமிட்டு பரப்பப்பட்ட, ஆதாரமற்ற மற்றும் உண்மைக்குப் புறம்பான தகவல் என்று கூறியுள்ளனர்.
செய்தி அறிக்கையின்படி, பங்குச் சந்தையில் One 97 Communications-ஐச் சார்ந்த விஜய் சேகர் ஷர்மா 19 சதவீத பங்குகளை வைத்திருக்கிறார். இது பங்குச் சந்தையில் பங்கு ஒன்றின் நேற்றைய இறுதி விலை ரூபாய் 342 அடிப்படையில் மொத்த மதிப்பு ரூபாய் 4,218 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)