மேலும் அறிய

Minister Ma.Su: தமிழ்நாட்டில் 1,200 மருத்துவ சீட்டுகள் பறிபோகுதா? அமைச்சர் தகவலால் அதிர்ச்சி...

முதுநிலை மருத்துவ இடங்கள் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பால், தமிழ்நாட்டில் சுமார் 1,200 மருத்துவ இடங்கள் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

முதுநிலை மருத்துவ படிப்புகளில், மாநில அரசுகளுக்கென தனி ஒதுக்கீடு கூடாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு, மாநில உரிமைகளுக்கு எதிராக உள்ளதால், அந்த தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என, அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பு என்ன.?

எம்.பி.பி.எஸ் தவிர, முதுநிலை மற்றும் மருத்துவ மேற்படிப்புகளில், மாநில அரசுகள் தங்களுக்கென தனி ஒதுக்கீட்டை வைத்துக்கொள்ளக் கூடாது எனவும், அனைவரும் இந்தியாவில் வசிப்பதால், மாநிலங்கள் தங்களுக்கென ஒதுக்கீடு வைத்துக்கொள்வது, அரசியல் சட்டத்தின் 14-வது பிரிவுக்கு எதிரானது என வழக்கு ஒன்றில், உச்சநீதமன்ற 3 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு நேற்று(29.01.25) தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும், மருத்துவ இடங்களை வாழ்விட அடிப்படையில் ஒதுக்கீடு செய்வதை சட்டம் அனுமதிக்காது எனவும், அதனால், அனைத்து முதுநிலை மருத்துவ இடங்கள் மற்றும் மேற்படிப்பு இடங்களை அகில இந்திய அளவில் பொதுவானதாக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

69% இட ஒதுக்கீட்டிற்கு பாதிப்பு

தமிழ்நாட்டில் முதுநிலை மருத்துவ படிப்பிலும் 69% இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுகிறது. இந்த நிலையில், உச்சநீதிமன்றம் தற்போது அளித்துள்ள தீர்ப்பு, அனைத்து முதுநிலை மருத்துவ இடங்களையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு சென்றுவிடும். அப்படி இருக்கும் பட்சத்தில், தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் 69% இட ஒதுக்கீடு முறை செல்லுபடியாகாது. இது, தமிழ்நாடு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், போதிய மருத்துவ நிபுணர்கள் இல்லாத நிலையை உருவாக்கும். அதனால், பொதுமக்களுக்கு உயர் சிகிச்சை கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படும்.

தமிழ்நாட்டில் 1,200 மருத்துவ இடங்கள் பறிபோகும் - அமைச்சர்

இப்படிப்பட்ட சூழலில், இன்று(30.01.25) இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால், தமிழ்நாட்டில் சுமார் 1,200 மருத்துவ இடங்கள் பறிபோகும் நிலை உருவாகும் என்ற அதிர்ச்சிகர தகவலை தெரிவித்துள்ளதார். இதனால், தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் 69% இட ஒதுக்கீட்டு முறையை பாதிக்கும் என்றும், மாநில உரிமைகள் பறிபோகும் எனவும் தெரிவித்தார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு - அமைச்சர்

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால், அரசு மருத்துவர்கள் மற்றும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், பாதிப்புக்குள்ளாகும் இட ஒதுக்கீடு மற்றும் மாநில உரிமைகளை நிலைநாட்ட, முதுநிலை மருத்துவ மாணவர சேர்க்கை தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN TVK Cabinet : 8 முடியவே முடியாது.. 5 அமைச்சர் தான்.! அதிமுக மாஜிக்களிடம் லிஸ்ட் கேட்ட முதலமைச்சர் விஜய்
8 முடியவே முடியாது.. 5 அமைச்சர் தான்.! அதிமுக மாஜிக்களிடம் லிஸ்ட் கேட்ட முதலமைச்சர் விஜய்
ADMK: காய் நகர்த்தும் எடப்பாடி பழனிசாமி! கலக்கத்தில் சிவி சண்முகம்! அதிமுக-வில் நடப்பது என்ன?
ADMK: காய் நகர்த்தும் எடப்பாடி பழனிசாமி! கலக்கத்தில் சிவி சண்முகம்! அதிமுக-வில் நடப்பது என்ன?
''முதல்வர் விஜய் தீவிர முருக பக்தர்; எங்கள் இருவருக்கும் என்ன உறவு?'' ராதன் பண்டிட் வெற்றிவேல் ருசிகரம்!
''முதல்வர் விஜய் தீவிர முருக பக்தர்; எங்கள் இருவருக்கும் என்ன உறவு?'' ராதன் பண்டிட் வெற்றிவேல் ருசிகரம்!
‘மு.க. ஸ்டாலினின் மூளை' வியூகம் வகுத்த சபரீசன்
‘மு.க. ஸ்டாலினின் மூளை' வியூகம் வகுத்த சபரீசன்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Delhi Bus Gang Rape|டெல்லியில் மீண்டும் நிர்பயா! பேருந்தில் நேர்ந்த கொடூரம் கூட்டு பாலியல் வன்கொடுமை
வெள்ளை அறிக்கை விரைவில்!ஆட்டத்தை தொடங்கிய விஜய்பதற்றத்தில் திமுக
சுக்குநூறான அதிமுக? EPS vs SP வேலுமணி! முற்றும் மோதல்
MA Siddique IAS | நிதித்துறை 'சிங்கம்'விஜய்யின் LIFESAVER..யார் இந்த சித்திக் IAS?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
''முதல்வர் விஜய் தீவிர முருக பக்தர்; எங்கள் இருவருக்கும் என்ன உறவு?'' ராதன் பண்டிட் வெற்றிவேல் ருசிகரம்!
''முதல்வர் விஜய் தீவிர முருக பக்தர்; எங்கள் இருவருக்கும் என்ன உறவு?'' ராதன் பண்டிட் வெற்றிவேல் ருசிகரம்!
Gold Silver Rate May 15th: ஆஹா.! மாலையிலும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.! ஒரே நாள்ல இவ்வளவு குறைவா.? இப்போ எவ்வளவு.?
ஆஹா.! மாலையிலும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.! ஒரே நாள்ல இவ்வளவு குறைவா.? இப்போ எவ்வளவு.?
காங்கிரஸுக்கு 2 அமைச்சர்கள்; புதிய வரலாறு- சொன்னதை செய்த விஜய்: மாணிக்கம் தாகூர் பெருமிதம்
காங்கிரஸுக்கு 2 அமைச்சர்கள்; புதிய வரலாறு- சொன்னதை செய்த விஜய்: மாணிக்கம் தாகூர் பெருமிதம்
NEET UG: அடுத்தாண்டு முதல் ஆன்லைனில் நீட் தேர்வு; இனி முறைகேடு இருக்காது- மத்திய அமைச்சர் உறுதி!
NEET UG: அடுத்தாண்டு முதல் ஆன்லைனில் நீட் தேர்வு; இனி முறைகேடு இருக்காது- மத்திய அமைச்சர் உறுதி!
Premalatha vs Vijay : முகத்தை மூடிக்கொண்டு முதல்வர் வீட்டிற்கு வந்தவர் யார்.? விஜய்யை விடாமல் மீண்டும் துரத்தும் பிரேமலதா
முகத்தை மூடிக்கொண்டு முதல்வர் வீட்டிற்கு வந்தவர் யார்.? விஜய்யை விடாமல் மீண்டும் துரத்தும் பிரேமலதா
பெட்ரோல் கொடுத்த 'ஷாக்'! உலக நாடுகளை விட இந்தியாவில் பாதிப்பு குறைவா? மத்திய அரசு அதிரடி விளக்கம்
பெட்ரோல் கொடுத்த 'ஷாக்'! உலக நாடுகளை விட இந்தியாவில் பாதிப்பு குறைவா? மத்திய அரசு அதிரடி விளக்கம்
TN TVK Cabinet : 8 முடியவே முடியாது.. 5 அமைச்சர் தான்.! அதிமுக மாஜிக்களிடம் லிஸ்ட் கேட்ட முதலமைச்சர் விஜய்
8 முடியவே முடியாது.. 5 அமைச்சர் தான்.! அதிமுக மாஜிக்களிடம் லிஸ்ட் கேட்ட முதலமைச்சர் விஜய்
Tamilnadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(16-05-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Tamilnadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(16-05-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Embed widget