(Source: ECI/ABP News/ABP Majha)
இனி அனைத்து வகை பயணிகளும் படுத்து ஓய்வெடுக்கலாம்: சென்னை விமான நிலையத்தின் அசத்தல் அப்டேட்!
விமான நிலையத்தில் அனைத்து போக்குவரத்துப் பயணிகளும் சிறிது ஓய்வெடுக்க வசதியாக இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பொதுவாக விமான பயணத்தில் விமானத்திற்காக காத்திருப்பது அல்லது இணைப்பு விமானம் வரும் வரை காத்திருப்பது என்பது சர்வ சாதாரணமாக நடக்கும் ஒரு நிகழ்வாகும் .
மேகமூட்டம் அதிகப்படியான காற்று போன்ற காரணிகளால் விமானத்திற்காக காத்திருக்க வேண்டி இருக்கிறது. இவ்வாறான நிலைமையில் ஓய்வெடுக்கும் அறைகளில் எவ்வளவு நேரம் தான் இருக்க முடியும்.
இதில் சர்வதேச விமானத்தில் முதல் வகுப்பு செல்லும் பயணிகளுக்கு காத்திருப்பு அறைகளில் கை கால்களை நீட்டி ஓய்வெடுப்பதற்கான வசதிகள் இருக்கும். அதே நேரத்தில் மூன்றாம் வகுப்பு பயணிகள் காத்திருப்பதற்கு உட்கார்ந்து கொள்ள மட்டுமே இருக்கும்.
இந்த பிரச்சினைகளை சரி செய்யும் விதமாக சிறிய அளவிலான ஸ்லீப்பிங் பேடுகளை சென்னை விமான நிலையத்தில் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்கள். இந்த திட்டம் ஜப்பானிய ரயில்வே நிலையங்களில் பயன்படுத்தப்படுகிறது.
இத்தகைய சிறிய அளவிலான படுக்கும் அமைப்பு கொண்ட பேடுகள் முதன் முதலில் மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்குப் பிறகு இப்போது சென்னை விமான நிலையத்தில் இத்தகைய வசதி அறிமுகம் செய்து வைக்கப்பட்டிருக்கிறது.
விமான நிலையத்தில் அனைத்து போக்குவரத்துப் பயணிகளும் சிறிது ஓய்வெடுக்க வசதியாக இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இத்தகைய ஓய்வு எடுக்கும் படியான படுக்கும் வசதி கொண்ட சிறிய அளவிலான ரேக் போன்ற இந்த பேடுகள்,ஓய்வு எடுப்பதற்கு வசதியாகவும் பயணத்தை இழந்து விடாமல் இருப்பதை உறுதி செய்கிறது.
விமான நிலையத்தை பொறுத்த வரை இடத்தின் தேவை அதிகமாக இருக்கிறது. ஆகையால் இடத்தின் மதிப்பு அதிகம். இதனால் அங்கு பெரிய அளவில் அறைகளைக் கட்டி, அந்த அறைகளில் படுக்கையை அமைத்து, அதற்கு உகந்த வாடகையை நிர்ணயம் செய்யும்போது, அது இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்பு பயணிகள் பயன்படுத்த முடியாத அளவிற்கு பெரிய தொகையை கொண்டிருக்கின்றது.
அதே நேரம் சர்வதேச விமானத்திற்கு பயணப்படும் பொழுது அல்லது ட்ரான்சிஸ்ட் என சொல்லப்படும் வேறு விமானத்தில் பயணிப்பதற்காக காத்திருக்கும் காலத்திலோ இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்பு பயணிகள் செலவு செய்ய முடியாத அளவு இருக்கும் ஓய்வு அறைகளை கவனத்தில் கொண்டு மாற்று ஏற்பாடாக இந்த படுக்கும் வகையிலான சிறிய பேடுகள் மிக சௌகரியமாக ஓய்வினை தரும் என்பதில் ஐயமில்லை.
இது ரயில்களில் இருக்கும் படுக்கையை விட சற்று பெரிதாகவும் தூங்குவதற்கான சௌகரியமான அமைப்பையும் கொண்டிருக்கிறது. நான்கு கேப்சல்கள் ஒன்றாக இணைத்தபடி, நான்கு படுக்கைகளை கொண்ட இந்த பேடுகள் சென்னை விமான நிலையத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு வரும் வரவேற்பை பொறுத்து, இத்திட்டமானது மிக அதிக எண்ணிக்கையில் கொண்டு வரப்படும்.
இதன் மூலம் குறைந்த இடத்தில் நிறைய பயணிகள் தங்கள் கை கால்களை சௌகரியமாக நீட்டி அடுத்த பயணத்திற்கு தயாராவதற்கு முன்பு ஒரு குட்டி தூக்கத்தை போட்டு விடலாம்.
பொதுவாக விமான நிலையங்களில் பயணிகள் காத்திருப்பு அறை தவிர அவர்கள் ஓய்வெடுக்கும் அறையும் தயார் நிலையில் இருக்கும்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சரி செய்யும் வகையிலும் அவர்கள் குறித்த மணி நேரம் வரை ஓய்வெடுக்கும் வகையிலும் இந்த ஸ்லீப்பிங் பேடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.