மேலும் அறிய

Yercaud Bus Accident: ஏற்காடு பேருந்து விபத்து - பேருந்து ஓட்டுநர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

அதிவேகமாக பேருந்தை ஓட்டியது, அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்துதல் உள்ளிட்ட ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம் மாவட்டம் ஏற்காடு பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று மாலை 5 மணி அளவில் தனியார் பேருந்து 70 பயணிகளுடன் சேலம் நோக்கி புறப்பட்டது. இந்த பேருந்தை சேலத்தைச் சேர்ந்த மணி என்பவர் இயக்கி வந்தார். ஏற்காட்டில் இருந்து புறப்பட்ட தனியார் பேருந்து மாலை 5:40 மணிக்கு மலைப்பாதையில் இறங்கிக் கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து 13 வது கொண்டை ஊசி வளைவில் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து பனிரெண்டாவது கொண்டை ஊசி வளைவு தாண்டி, பதினோராவது கொண்டை ஊசி வளைவின் அருகில் விபத்துக்குள்ளானது. விபத்தை நேரில் பார்த்தவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு குழுவினர் மற்றும் மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

5 பேர் பலி:

இந்த விபத்தில் முனீஸ்வரன் என்ற 11 வயது சிறுவன் உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதிக காயங்களுடன் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட சந்தோஷ் பிரபாகரன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், பேருந்தில் பயணித்து விபத்துக்குள்ளான 65 பேர் உடனடியாக மலைப்பாதையில் வந்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகளின் கார், வேன்கள் மூலமாக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டனர். 

Yercaud Bus Accident: ஏற்காடு பேருந்து விபத்து - பேருந்து ஓட்டுநர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

விபத்திற்கான காரணம்:

அதிக அளவிலான பயணிகளை ஏற்றியதாலும், அதிவேகத்தில் இயக்கப்பட்டதாலும் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதாக கூறப்படுகிறது. குறிப்பாக மலைப்பாதைகளில் செல்லும் பேருந்துகளில் பாதுகாப்பிற்காக ஒரு கதவுகள் மட்டுமே இருக்கும். மேலும், சாதாரண பேருந்தை விட மலைகளில் செல்லும் பேருந்துகளில் சீட் குறைவாகவே இருப்பது வழக்கம். இதேபோன்று மலைப்பாதையில் இயக்கப்படும் பேருந்துகளில் நின்று கொண்டு பொதுமக்கள் பயணிக்க அனுமதிக்க கூடாது என பல்வேறு விதிமுறைகள் இருந்தும், அதிக அளவிலான பயணிகளை ஏற்றுக் கொண்டு அதிவேகமாக வளைவில் வந்ததால் ஸ்டேரிங் ராடு உடைந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

கூடுதல் பேருந்து தேவை:

சேலத்தில் இருந்து பல்வேறு தொழிலாளிகள் தினம் தோறும் காலையில் ஏற்காடு சென்று மாலை வீடு திரும்புவது வழக்கம். கோடை விடுமுறை தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. இருப்பினும் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் பேருந்து பயணம் செய்கின்றனர். வேறு வழியின்றி அரசு மற்றும் தனியார் பேருந்துகள் குறிப்பிட்ட அளவைவிட பயணிகளை அதிகமாக ஏற்றி செல்கின்றனர் என பொதுமக்கள் குற்றம் சான்றுகின்றனர். 

வழக்கு பதிவு:

ஓட்டுனர் மணி படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து ஏற்காடு காவல்நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் பேருந்து ஓட்டுனர் மணியின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டு அவர் மீது ஏற்காடு போலீசார் அதிவேகமாக பேருந்தை ஓட்டியது, அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்துதல் உள்ளிட்ட ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஓட்டுனர் மணி குணமானதும் அவரை கைது செய்யவும் ஏற்காடு காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

சேலத்தை உலுக்கிய சம்பவம்: ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற 6 பெண்கள்!
சேலத்தை உலுக்கிய சம்பவம்: ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற 6 பெண்கள்
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!
30% டிஸ்கவுண்ட்! சேலத்தில் களைகட்டும் தீபாவளி ஷாப்பிங்! புதிய பட்டு ரகங்கள் என்னென்ன இருக்கு?
30% டிஸ்கவுண்ட்! சேலத்தில் களைகட்டும் தீபாவளி ஷாப்பிங்! புதிய பட்டு ரகங்கள் என்னென்ன இருக்கு?
ஏற்காட்டில் அலைமோதும் சுற்றுலா பயணிகள்: தொடர் விடுமுறையால் களைகட்டிய கொண்டாட்டம்!
ஏற்காட்டில் அலைமோதும் சுற்றுலா பயணிகள்: தொடர் விடுமுறையால் களைகட்டிய கொண்டாட்டம்!

வீடியோ

மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
TN Govt: பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு.. டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு.. டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
TN Govt: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
VOC Port: நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
Gold Rate Today : மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.? இதோ இன்றைய விலை நிலவரம்
மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.? இதோ இன்றைய விலை நிலவரம்
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
Embed widget