மேலும் அறிய

தக்காளி விலை ஏற்றத்தால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை - குமுறும் தக்காளி விவசாயிகள்

’’உழைப்பு, முதலீடு எதுவும் இல்லாமல், வியாபாரிகளும், இடைத்தரகர்களும் அதிக லாபம் பெறுகின்றனர். இன்றைய நாளில் ஆப்பிள் விலையை முந்துகிறது தக்காளி, ஆனாலும் எங்களுக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை’’

தருமபுரி மாவட்டத்தில் தொடர் மழையால் தக்காளி விளைச்சல் பாதிப்பு வரத்து குறைவால், தக்காளி விலை உயர்ந்து கிலோ ரூ.80-க்கு விற்பனை-ஆப்பிளை முந்தும் தக்காளி ஆனாலும் இலாபம் எங்களுக்கு இல்லை தருமபுரி விவசாயிகள் வேதனை.
தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். இங்கு விளை விக்கப்படும் தக்காளியை விவசாயிகள், பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டில் நாள்தோறும் சுமார் 100 டன் வரை  விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டில் இருந்து சென்னை, பெங்களூர், ஓசூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தக்காளி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
 
தக்காளி விலை ஏற்றத்தால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை - குமுறும் தக்காளி விவசாயிகள்
 
தருமபுரி மாவட்டத்தில் இருந்து, பல்வேறு பகுதிகளுக்கு தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் தக்காளி விலை சரிந்து கிலோ 10 ரூபாய்க்கும், 25 கிலோ எடை கொண்ட பெட்டி 250 ரூபாய்க்கும் விற்பனையானது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழையால், தருமபுரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வந்தது. இதனால் தக்காளி விளைச்சல் கடுமையாக  பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தக்காளி வெளியூர்களுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. தொடர்ந்து மழை பொழிவு இருப்பதால், தக்காளி மகசூல் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் உள்ளூர் மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் தக்காளி விலை  கிலோ 50 ரூபாய்க்கு விற்பன நிலையில், தற்போது மேலும் உயர்ந்து கிலோ 80 ரூபாய் வரை விற்பனை ஆகிறது.
 
தக்காளி விலை ஏற்றத்தால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை - குமுறும் தக்காளி விவசாயிகள்
 
மேலும் வெளி மார்கெட்டில் கிலோ  100 வரை விற்பனை ஆகிறது. தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக தக்காளி நல்ல விலை விற்பதால், விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்த வருகின்றனர். ஆனால் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் வியாபாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் 120 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர். மேலும் தருமபுரியில் இருந்து சென்னை போன்ற பெருநகரங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இடங்களில் கிலோ 150 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதில் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு பராமரிப்பு, ஆள் கூலி போக, குறைந்த வருமானம் கிடைக்கிறது. ஆனால் உழைப்பு, முதலீடு எதுவும் இல்லாமல், வியாபாரிகளும், இடைத்தரகர்களும் அதிக லாபம் பெறுகின்றனர். இன்றைய நாளில் ஆப்பிள் விலையை முந்துகிறது தக்காளி, ஆனாலும் எங்களுக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை என தருமபுரி மாவட்ட விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!

TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?

CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!

’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!

ABP Premium

வீடியோ

”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?

Breaking News LIVE : ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்

Watch Video: பெட்ரோல் பங்க்.. வெடித்து சிதறிய சிஎன்ஜி டேங்கர் - பயங்கர தீ விபத்தில் பலர் உயிரிழப்பு? வீடியோ வைரல்..!

Supreme Court: கணவர்களிடம் பணம் பறிக்காதிங்க..! திருமணம் பிசினஸா? பெண்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

Embed widget