மேலும் அறிய
Advertisement
தருமபுரியில் குந்தியம்மன் கோயில் திருவிழா - 34 ஆண்டுகளுக்கு பிறகு தாய்வீட்டுக்கு வந்த தருமராஜா
தருமராஜா சிலையை வெளியே கொண்டு வந்தால் அதிக செலவாகும் என்பால் கடந்த 34 ஆண்டுகளாக தருமராஜா சிலையை தாய் வீடான குந்தியமான் கோயிலுக்கு கொண்டு வராமல் இருந்தனர்
வரலாற்று சிறப்புமிக்க தருமபுரி மாவட்டத்தில் மகாபராத்தில் வரும் பஞ்சபாண்டவர்கள் வாழ்ந்ததாக, அவர்களுக்கு கோயில் கட்டி வழிபாடு செய்து அவர்களை குலதெய்வமாகவே நினைத்து வணங்கப்பட்டு வருகின்றனர். அதே போல் தருமபுரி மாவட்டம், கடத்தூர் அடுத்த போசிநாயக்கனஅள்ளி கிராமத்தில் மகாபராதத்தில் வரும் பஞ்சபாண்டவர்களின் தாயார் குந்தியம்மாவுக்கு கோயில் கட்டி 5 கிராம மக்கள் வழிபாடு செய்கின்றனர். அதே போல் இந்த கிராமத்தையொட்டி 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நடூர் கிராமத்தில் பஞ்சபாண்டவர்களுக்கு என தனிக்கோயில் உள்ளது. நாட்டில் வறட்சி நீங்கவும், விவசாயம் செழிக்கவும் ஆண்டுதோறும் குந்தியம்மன் இக்கோயில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அப்போது திருவிழாவின் போது போசிநானக்கனஅள்ளி கிராமத்தில் உள்ள தாய் வீடான குந்தியம்மன் கோயிலுக்கு பஞ்சபாண்டர்களை ஊர்வலமாக அழைத்து வந்து வழிப்பட்டு வந்தனர். தொடர்ந்து பஞ்சபாண்டவர்களில் ஒருவரான தருமராஜா சிலைை வெளியே கொண்டு வரும் போது அடிக்கு ஒரு தேங்காய் உடைத்து, தானியாங்களை தானமாக கொடுப்பது வழக்கமாக இருந்தது. தருமராஜா சிலையை வெளியே கொண்டு வந்தால் அதிக செலவாகும் என்பால் கடந்த 34 ஆண்டுகளாக தருமராஜா சிலையை தாய் வீடான குந்தியமான் கோயிலுக்கு கொண்டு வராமல் இருந்தனர்.
இந்நிலையில் குந்தியம்மன் கோயில் திருவிழா கடந்த 11 ஆம் தேதி துவங்கியது. இந்த திருவிழாவில் 5 கிராமங்கள் கலந்து கொண்டு குந்தியம்மனுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் செய்து வாழிபாடு செய்தனர். இதனை அடுத்து வறட்சி நீங்கி நல்ல மழை பொழிய வேண்டியும், வறுமை மற்றும் நோய் தொற்று பரவால் இருக்க தருமராஜா சிலையை தாய் வீட்டிற்கு அழைத்து செல்ல கிராம மக்கள் முடிவு செய்து 34 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தருமராஜா சிலையை கோயிலில் இருந்து வெளியே கொண்டு வந்தனர். அப்போது ஊர் பொதுமக்கள் தருமராஜாவுக்கு பூக்கள் தூவி வரவேற்றனர். பின்னர் தருமபுராஜா சிலையை 5 கிராமங்களுக்கும் ஊர்வலமாக கொண்டு சென்றனர். அப்போது ஒரு அடிக்கு ஒரு தேங்காய் உடைத்து அழைத்து சென்றனர்.
இதனை அடுத்து கிராம மக்கள் தருமராஜாவை வரவேற்று உணவளிக்கும் வகையில் வீடுகளின் முன்பு பச்சை பந்தல் அமைத்து வீட்டில் உள்ள கேழ்வரகு, கம்பு, பருப்பு, அரிசி, பூ, பழம் மற்றும் கூழ், வைத்து தானம் செய்து வரவேற்று பூஜை செய்தனர். மேலும் விவசாயம் செழிக்க விளைநிலங்கள் வழியாக தருமராஜாவை ஊர்வலமாக கொண்டு சென்றனர். அப்போது பக்தர்கள் அம்மன் வேடங்கள் அணிந்து நடமாடி சென்றனர். இந்த திருவிழாவினை காண சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வணங்கினர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
சென்னை
அரசியல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion