மேலும் அறிய

Valentine's Day 2025: சேலத்தில் இருந்து ஒரே நாளில் காதலர்கள் சென்று வர நச்சுன்னு 4 ஸ்பாட்

காதலர் தினத்தன்று காதலர்கள் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலா தலங்கள் இதுதான்.

உலகம் முழுவதும் காதலர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சேலத்தில் உள்ள காதலர்கள் எளிதில் சென்றடைய கூடிய சுற்றுலா தளங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். 

ஏற்காடு: 

சேலம் மாவட்டத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் மலைப்பிரதேசமாக அமைந்துள்ளது ஏற்காடு. ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காடு தமிழகத்தில் உள்ள குளிர் பிரதேசங்களில் ஒன்றாகும். ஏற்காட்டில் உள்ள படகு இல்லம், கிளியூர் நீர் வீழ்ச்சி, அண்ணா பூங்கா, மான் பூங்கா, லேடிஸ் சீட் காட்சி முனை, ஜென்ஸ் சீட் காட்சி முனை, சேர்வராயன் மலை, மஞ்சகுட்டை காட்சி முனை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் செல்லும் இடமாக அமைந்துள்ளது. இது மட்டுமின்றி கடந்த சில நாட்களாக ஏற்காட்டில் கட்டும் பனி நிலவி வருவதால் ரம்யமான சூழல் நிலவி வருகிறது. 

Valentine's Day 2025: சேலத்தில் இருந்து ஒரே நாளில் காதலர்கள் சென்று வர நச்சுன்னு 4 ஸ்பாட்

குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா: 

சேலம் மாநகரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா. இங்கு மான், வெள்ளை மயில், மயில், நாரை கொக்கு, மலைப் பாம்புகள், முதலைகள், நரி, வெளிநாட்டுக் குரங்கு வகைகள், ஆமை, பறவைகள் என பல உயிரினங்கள் உள்ளது. ஏற்காடு அடிவாரத்தில் அமைந்துள்ளதால் எப்போதும் வன உயிரியல் பூங்கா குளிர்ந்த நிலையில் இருக்கும். இதனால் அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். குறிப்பாக சேலம் மக்கள் அதிக அளவில் வார இறுதி நாட்களில் வன உயிரியல் பூங்காவிற்கு குடும்பத்துடன் சென்று விடுமுறை நாளை மகிழ்ச்சியுடன் கொண்டா குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா அருமையான சுற்றுலா தளம் ஆகும். குறிப்பாக இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக வனத்துறை சார்பில் மினி பஸ் ஏற்பாடு செய்யப்பட்டு கோரிமேடு பகுதியில் இருந்து அரை மணி நேரத்திற்கு ஒருமுறை இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Valentine's Day 2025: சேலத்தில் இருந்து ஒரே நாளில் காதலர்கள் சென்று வர நச்சுன்னு 4 ஸ்பாட்

மேட்டூர் அணை:

சேலத்தில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேட்டூர் அணை சேலம் மாவட்டத்தில் சிறப்புமிக்க சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இங்கு மேட்டூர் அணை மிக பிரம்மாண்டமாக காட்சியளித்து வருகிறது. காவேரி ஆற்றின் குறிக்க கட்டப்பட்டுள்ள மேட்டூர் அணையில் பரிசல் சவாரி, பூங்கா உள்ளிட்டவைகள் உள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்து மீன் பிடித்து காவிரி கரையோரம் சமைத்து சாப்பிடும் வசதியும் உள்ளது. இதனால் காதலர் தினத்தை கொண்டாடும் காதலர்களுக்கு மேட்டூர் அணை சிறந்த இடமாக அமைந்துள்ளது.

Valentine's Day 2025: சேலத்தில் இருந்து ஒரே நாளில் காதலர்கள் சென்று வர நச்சுன்னு 4 ஸ்பாட்

முத்துமலை முருகன் கோவில்: 

சேலத்தில் இருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஏத்தாப்பூர் பகுதியில் முத்து மலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உலகின் மிக உயர முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு முருகன் சிலை 146 அடியில் மிகப் பிரம்மாண்டமாக காட்சியளித்து பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகிறார். குறிப்பாக இந்த கோயிலில் விசேஷ நாட்களில் மூலஸ்தானத்தில் உள்ள முருகர் வள்ளி தெய்வானை இணைந்து தங்க கவசத்தில் காட்சியளித்து வருகிறார். மேலும், இந்த கோயிலில் மாலை தங்கத்தேர் பவனி உலா நடைபெறுவது சிறப்புக்குரிய ஒன்றாகும். முத்துமலை முருகன் கோவிலுக்கு காதலர்கள் சென்று முருகரை தரிசிக்கலாம். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cuddalore Train Accident: கடலூர் கோர விபத்து; தவறு செய்தது கேட்கீப்பரா? வேன் ஓட்டுனரா? உயிர் பிழைத்த மாணவன் பேட்டி

TN Business Environment: தமிழ்நாடுன்னாலே ஃபயரு தான் - ஒட்டுமொத்த இந்தியாவிலும் நம்பர் ஒன் - எதில் தெரியுமா?

Cuddalore Train Accident: சோகத்தின் உச்சம்.. பள்ளி வேனில் பயணித்த அக்கா, தம்பி மரணம் - இரக்கம் இல்லையா இறைவா?

திமுகவின் துணை அமைப்பா டிஎன்பிஎஸ்சி? முட்டு கொடுப்பதை ஐடி விங் பார்க்கட்டும்- கொந்தளித்த அன்புமணி!

ABP Premium

வீடியோ

BJP தேசிய தலைவராகும் தமிழ்பெண்! வானதி OR நிர்மலாவுக்கு ஜாக்பார்ட்!மோடியின் கணக்கு என்ன?
கொத்தாக விலகிய தொண்டர்கள் அதிமுகவில் இணைந்த பாமகவினர்! அதிர்ச்சியில் அன்புமணி ராமதாஸ்
Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cuddalore Train Accident: கடலூர் கோர விபத்து; தவறு செய்தது கேட்கீப்பரா? வேன் ஓட்டுனரா? உயிர் பிழைத்த மாணவன் பேட்டி
Cuddalore Train Accident: கடலூர் கோர விபத்து; தவறு செய்தது கேட்கீப்பரா? வேன் ஓட்டுனரா? உயிர் பிழைத்த மாணவன் பேட்டி
TN Business Environment: தமிழ்நாடுன்னாலே ஃபயரு தான் - ஒட்டுமொத்த இந்தியாவிலும் நம்பர் ஒன் - எதில் தெரியுமா?
TN Business Environment: தமிழ்நாடுன்னாலே ஃபயரு தான் - ஒட்டுமொத்த இந்தியாவிலும் நம்பர் ஒன் - எதில் தெரியுமா?
Cuddalore Train Accident: சோகத்தின் உச்சம்.. பள்ளி வேனில் பயணித்த அக்கா, தம்பி மரணம் - இரக்கம் இல்லையா இறைவா?
Cuddalore Train Accident: சோகத்தின் உச்சம்.. பள்ளி வேனில் பயணித்த அக்கா, தம்பி மரணம் - இரக்கம் இல்லையா இறைவா?
திமுகவின் துணை அமைப்பா டிஎன்பிஎஸ்சி? முட்டு கொடுப்பதை ஐடி விங் பார்க்கட்டும்- கொந்தளித்த அன்புமணி!
திமுகவின் துணை அமைப்பா டிஎன்பிஎஸ்சி? முட்டு கொடுப்பதை ஐடி விங் பார்க்கட்டும்- கொந்தளித்த அன்புமணி!
கிண்டியில் துப்பாக்கியால் மிரட்டல் விடுத்த நபர்... நடந்தது என்ன?

Cuddalore Train Accident: கடலூர் ரயில் - வேன் விபத்து; மாணவர்கள் மரணத்திற்கு காரணம் கேட்கீப்பரா? ஓட்டுனரா?

Salem Power Shutdown: மக்களே உஷார்... சேலத்தில் நாளை (09.07.2025) எங்கெல்லாம் பவர் கட் - முழு விவரம் இதோ

Cuddalore Train Accident: ரயில் மீது மோதிய பள்ளி வேன்.. கடலூர் செம்மங்குப்பத்தில் நடந்தது என்ன? உயிரைப் பறித்தது யார்?

Embed widget