மேலும் அறிய
Advertisement
மழை காரணமாக கிலோ 50 ரூபாய்க்கு தக்காளி விற்பனை - மகிழ்ச்சியில் தருமபுரி விவசாயிகள்
’’தக்காளி விளையும் இடமான தருமபுரியில் கிலோ 50 ரூபாய்க்கு தக்காளி விற்கப்படும் நிலையில் சென்னையில் கிலோ 100 ரூபாய்க்கு தக்காளி விற்பனை’’
தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். இங்கு விளை விக்கப்படும் தக்காளியை விவசாயிகள், பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டில் நாள்தோறும் சுமார் 100 டன் வரை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டில் இருந்து சென்னை, பெங்களூர், ஓசூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தக்காளி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் இருந்து, பல்வேறு பகுதிகளுக்கு தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன் தக்காளி விலை சரிந்து கிலோ 10 ரூபாய்க்கும், 25 கிலோ எடை கொண்ட பெட்டி 250 என விற்பனையானது. இதனால் அறுவடை செய்யும் கூலி கூட கிடைக்கவில்லை என விவசாயிகள், தக்காளியை கீழே கொட்டினர். மேலும் ஒருசில விவசாயிகள் தக்காளியை அறுவடை செய்யாமல், கால்நடைகளுக்கு தீவனமாக, கால்நடைகளை கட்டி மேய்த்து வந்தனர். இதனால் போதிய வருவாய் கிடைக்காமல் மிகுந்த வேதனையடைந்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது தருமபுரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது. மேலும் தக்காளி வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தொடர்ந்து மழை பொழிவு இருப்பதால், தக்காளி மகசூல் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் உள்ளூர் மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் தக்காளி விலை கிலோ 30 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், தற்போது மேலும் உயர்ந்து கிலோ 50 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதில் 25 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி 1250 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தையில் கிலோ 50 முதல் 55 வரையிலும், வெளி மார்கெட்டில் கிலோ 60 ரூபாய் வரை விற்பனையாகிறது.
தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக தக்காளி நல்ல விலை விற்பதால், விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்த வருகின்றனர். ஆனால் தொடர் மழையால் சென்னையில் வரத்து குறைவால் தக்காளி கிலோ 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் விளையும் இடத்தில் கிலோ 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆனால் சென்னையில் 100- ரூபாய்க்கு விற்பனையாகிறது என தருமபுரி தக்காளி விவசாயிகள் மிகுந்த கவலை தெரிவிக்கின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion