மேலும் அறிய

Vikramaraja: “தமிழக இளைஞர்கள், பெண்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்" - விக்கிரமராஜா

தமிழகம் முழுவதும் வணிகர்களிடம் அரசு அதிகாரிகள் லஞ்சம் பெறும் பிரச்சினை இருந்து கொண்டுள்ளது. எனவே சட்டவிதிகளை மத்தியஅரசு எளிமைப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரம ராஜா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மே மாதம் 5 ஆம் தேதி ஈரோட்டில் நடைபெற உள்ள வணிகர் சங்கத்தின் 40 வது மாநாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரம ராஜா, “சிலிண்டர் விலை உயர்வை அரசு குறைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது மக்களின் மீது தான் வந்து சேரும். உணவு பாதுகாப்பு சட்டவிதிகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு துறைகளை சேர்ந்த தவறான அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு உள்ளனர். தமிழகம் முழுவதும் அரசு அதிகாரிகள் லஞ்சம் பெறும் பிரச்சினை இருந்து கொண்டுள்ளது. எனவே சட்டவிதிகளை மத்தியஅரசு எளிமைப்படுத்த வேண்டும், ஜிஎஸ்டி வரிவிதிப்பிலும் இடர்பாடுகள் உள்ளது அதையும் எளிமைப்படுத்திட வேண்டும். குறிப்பாக சில சட்டங்களை ஆய்வு செய்வதற்கு அரசு, மாநில அரசுக்கு கட்டாயம் வழிவகை செய்ய வேண்டும்.

Vikramaraja: “தமிழக இளைஞர்கள், பெண்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்

கார்ப்பரேட் கம்பெனிகள் சாமானிய வணிகர்களை ஒட்டுமொத்தமாக துடைத்தெறியும் ஆபத்து நெருங்கிக்கொண்டு இருக்கிறது. அதிலிருந்து காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் தனிசட்டம் இயற்ற வேண்டும். வட மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு தமிழகத்தில் அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக பொய்யான புள்ளி விவரங்களை கொடுத்து வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அச்சுறுத்தி வருகின்றனர். இதற்கெல்லாம் வட மாநில தொழிலாளர்கள் அச்சப்படத் தேவையில்லை, தமிழக முதல்வர் கடுமையான பாதுகாப்பை கொடுத்துக் கொண்டு வருகிறார்கள். வட மாநில தொழிலாளர்கள் அச்சப்பட்டு வெளியேற வேண்டாம். தமிழகத்தின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாமல், சிலவிஷமிகள் பிரச்சினைகளை எழுப்பிக்கொண்டு வருகிறார்கள். அதேபோன்ற நடவடிக்கைகள் இங்கு இல்லை, முழுமையான பாதுகாப்பு வருவதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு உள்ளது. தமிழக தொழிலாளர்கள் பாதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்படவில்லை, வியாபாரிகளை பொறுத்தவரை தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது. வேலைகளுக்கு ஆட்கள் தேவை உள்ளது. 

Vikramaraja: “தமிழக இளைஞர்கள், பெண்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்

வட மாநில தொழிலாளர்களை அனுமதி அளித்து வருகிறோம். இதற்கு முன்பாக கேரள தொழிலாளர்கள் வேலைக்கு வருவது குறைந்துவிட்டது. தற்போது வட மாநில தொழிலாளர்கள் வந்து கொண்டுள்ளனர். இவர்களும் குறைந்துவிட்டால் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுவிடும், எனவே வட மாநில தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்கிறோம். தமிழகத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு புறக்கணிக்கிறோம் என்பது முற்றிலும் தவறானது ஒன்று, வணிகக் கடைகளில் முன்பெல்லாம் வேலைக்கு ஆட்கள் எடுக்கவில்லை என்று தான் பதாகைகள் வைக்கப்பட்டிருக்கும். தற்போதைய எல்லாம் கடைகளிலும் வேலைக்கு ஆட்கள் தேவை என்று பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. தற்போதும் தரமான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு வழங்க தயாராக உள்ளோம். தமிழக இளைஞர்கள், பெண்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும். வடமாநில தொழிலாளர்களுக்கு குறைவான சம்பளம் இல்லை, சரியான அளவு சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறது. உரிய வேலைக்கு உரிய சம்பளம் கட்டாயம் வழங்கப்படும். கார்ப்பரேட் கம்பெனிகள் காலாவதியான பொருட்கள் எவ்வாறு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறித்து யாருக்கும் தெரியாது, கார்ப்பரேட் கம்பெனிகளின் முகத்திரையை தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு விரைவில் கிழித்தெறியும்” என்று கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு பெருமிதம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு பெருமிதம்!
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
வைகுண்ட ஏகாதசி; கரூர் அபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில்  பகல் பத்து நிகழ்ச்சி
வைகுண்ட ஏகாதசி; கரூர் அபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில் பகல் பத்து நிகழ்ச்சி
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
IND vs AUS: ரஞ்சி வீரர்கள் எதுக்கு இருக்காங்க? இனியாவது வாய்ப்புத் தருமா பிசிசிஐ?
IND vs AUS: ரஞ்சி வீரர்கள் எதுக்கு இருக்காங்க? இனியாவது வாய்ப்புத் தருமா பிசிசிஐ?
Embed widget