மேலும் அறிய

தூய்மை பணியாளர்கள் ஆற்றில் இறங்கி போராட்டம் - சேலம் மேயரிடம் கடும் வாக்குவாதம்

நீதிமன்ற உத்தரவையும் அரசு ஆணையையும் பின்பற்றாமல் மாநகராட்சி அதிகாரிகள் தூய்மை பணியாளர்களை வஞ்சிப்பதாக கூறி மேயரிடம் கடும் வாக்குவாதம்.

சேலம் மாநகராட்சியில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் தங்கள் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி நேற்று சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள திருமணிமுத்தாற்றில் இறங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக தனது கோரிக்கை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி அவர் கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் படிப்பறிவற்ற பட்டியலின மக்கள் அரசு பணி பெற்ற நிலையில், டி பிரிவு மற்றும் நான்காம் நிலை பணியிடங்களை ரத்து செய்யக்கூடாது. உள்ளாட்சிகளில் ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் சுய உதவி குழுக்கள் மூலம் நியமனம் செய்த அனைத்து தூய்மை தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 

தூய்மை பணியாளர்கள் ஆற்றில் இறங்கி போராட்டம் - சேலம் மேயரிடம் கடும் வாக்குவாதம்

அனைத்து தூய்மை தொழிலாளர்களுக்கும் வார விடுமுறை அளிக்கப்பட வேண்டும். ஆயுள் காப்பீடு விடுமுறை நாட்களில் வேலை செய்தால் இரட்டிப்பு சம்பளம் ஆகியவற்றை வழங்க வேண்டும். சேலம் மாநகராட்சியில் தூய்மை தொழிலாளர்களின் விருப்பத்திற்கு மாறாக அதிகாரிகள் தன்னிச்சையாக செய்த பணியிட மாற்றங்களை ரத்து செய்ய வேண்டும். கூட்டுறவு கடன் மற்றும் பி.எஃப் ஆகியவற்றில் நடைபெற்ற அனைத்து முறைகேடுகள் மீதும் உரிய விசாரணை நடத்த வேண்டும். மோசடி செய்த நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மாதவிலக்கு காலங்களில் பெண் தொழிலாளர் மீது கடுமையான பணிகளை திணிக்க கூடாது. என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சேலம் பழைய பேருந்து நிலையம் எங்கே உள்ளது அருகே உள்ள திருமணிமுத்தாறு தண்ணீரில் இறங்கி 100க்கும் மேற்பட்ட தூய்மைப் பெண் மற்றும் ஆண் பணியாளர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தூய்மை பணியாளர்கள் ஆற்றில் இறங்கி போராட்டம் - சேலம் மேயரிடம் கடும் வாக்குவாதம்

இதுகுறித்து தூய்மை பணியாளர்கள் கூறுகையில், “சேலம் மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களாக பணியாற்றி வரும் தங்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படுவது இல்லை. தினசரி ஊதியம் என்பது மிகவும் குறைவாக உள்ளது. பலமுறை அதிகாரிகளுக்கு இது தொடர்பாக மனு அனுப்பியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இன்று சேலம் மாநகராட்சி அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள திருமணிமுத்தாற்றில் இறங்கி தங்களது போராட்டத்தை நடத்தி வருகிறோம். அதுமட்டுமின்றி வாரம் தோறும் பணியாற்றும் எங்களுக்கு வாரத்திற்கு ஒரு நாள் வார விடுமுறை மாநகராட்சி சார்பில் வழங்கப்பட வேண்டும். கூட்டுறவு கடன் மற்றும் பி.எஃப் ஆகியவற்றில் நடைபெற்ற அனைத்து முறைகேடுகள் மீதும் உரிய விசாரணை நடத்த வேண்டும். உள்ளாட்சிகளில் ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் சுய உதவி குழுக்கள் மூலம் நியமனம் செய்த அனைத்து தூய்மை தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்” என்று கூறினார்.

இந்த நிலையில் தற்போது வரை சம்மந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை அழைத்து பேசி பிரச்சினைக்கு தீர்வு காணாததால் ஆற்றில் இறங்கி போராட்டம் செய்து வந்த தூய்மை பணியாளர்கள், சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் மற்றும் துணை ஆணையாளர் அசோக்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தைக்கு வந்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் நீதிமன்ற உத்தரவையும் அரசு ஆணையையும் பின்பற்றாமல் மாநகராட்சி அதிகாரிகள் தூய்மை பணியாளர்களை வஞ்சிப்பதாக கூறி மேயரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி மேயரை முற்றுகையிட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

G V Prakash - Saindhavi: ஆம் நாங்கள் பிரிந்து விட்டோம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி!
G V Prakash - Saindhavi: ஆம் நாங்கள் பிரிந்து விட்டோம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி!
IPL 2024 GT vs KKR: வருண பகவான் போட்ட ஸ்கெட்ச்; பறிபோன GT-இன் ப்ளே ஆஃப் வாய்ப்பு; முதல் இடத்தை உறுதி செய்த KKR!
IPL 2024 GT vs KKR: வருண பகவான் போட்ட ஸ்கெட்ச்; பறிபோன GT-இன் ப்ளே ஆஃப் வாய்ப்பு; முதல் இடத்தை உறுதி செய்த KKR!
Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Savukku Shankar | Arvind Kejriwal Master Plan | ”டெல்லிக்கு கிளம்புங்க உதய்”பறந்து வந்த அழைப்பு..Rahul Gandhi Marriage | ராகுலுக்கு டும்..டும்..டும்..அக்கா பிரியங்கா ஹேப்பி!  MARRIAGE UPDATEVaaname Ellai | மாறும் LIFESTYLE : PHYSIOTHERAPHY படிப்புக்கு பெருகும் வேலைவாய்ப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
G V Prakash - Saindhavi: ஆம் நாங்கள் பிரிந்து விட்டோம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி!
G V Prakash - Saindhavi: ஆம் நாங்கள் பிரிந்து விட்டோம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி!
IPL 2024 GT vs KKR: வருண பகவான் போட்ட ஸ்கெட்ச்; பறிபோன GT-இன் ப்ளே ஆஃப் வாய்ப்பு; முதல் இடத்தை உறுதி செய்த KKR!
IPL 2024 GT vs KKR: வருண பகவான் போட்ட ஸ்கெட்ச்; பறிபோன GT-இன் ப்ளே ஆஃப் வாய்ப்பு; முதல் இடத்தை உறுதி செய்த KKR!
Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
Watch Video: இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
Watch video : கண்ணாடியில் உன் மூஞ்சியை பார்!  ஹீரோவாக ஆசைப்பட்ட நகுலுக்கு கிடைத்த முதல் கமெண்ட்..
கண்ணாடியில் உன் மூஞ்சியை பார்!  ஹீரோவாக ஆசைப்பட்ட நகுலுக்கு கிடைத்த முதல் கமெண்ட்..
En Kalloori Kanavu : என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? முழு விவரம் இதோ!
என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? விவரம்
Embed widget