மேலும் அறிய

Salem to Hyderabad Flight: தொடங்கியது சேலம் - ஹைதராபாத் விமான சேவை - மகிழ்ச்சியில் பயணிகள்

சேலத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் வழியாக சிங்கப்பூர், கொழும்பு, கோலாலம்பூர், அபுதாபி, தோஹா, ஷார்ஜா, குவைத் உள்ளிட்ட 11 நாடுகளுக்கு விமான சேவை.

இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் சேலத்தில் இருந்து ஹைதராபாத்திற்கு விமான சேவையை இன்று தொடங்கியுள்ளது. சேலத்தில் இருந்து காலை 10:40 மணிக்கு புறப்படும் இந்த விமானமானது மதியம் 12:20 க்கு ஹைதராபாத் சென்றடையும். பெங்களூர் - சேலம் - ஹைதராபாத் மற்றும் ஹைதராபாத் - சேலம் - பெங்களூர் வழிகளில் விமானம் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் வழியாக சிங்கப்பூர், கொழும்பு, கோலாலம்பூர், அபுதாபி, தோஹா, ஷார்ஜா, குவைத் உள்ளிட்ட 11 நாடுகளுக்கு விமான சேவைத் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சேலத்தில் இருந்து ஹைதராபாத் வழியாக இந்தியாவின் 30 நகரங்களுக்கும், சேலத்தில் இருந்து பெங்களூரு வழியாக இந்தியாவின் 19 நகரங்களுக்கும் இண்டிகோ நிறுவனம் விமான சேவைத் தொடங்கப்பட்டுள்ளது.

Salem to Hyderabad Flight:  தொடங்கியது சேலம் - ஹைதராபாத் விமான சேவை - மகிழ்ச்சியில் பயணிகள்

இதேபோன்று, உதான் திட்டத்தில் ட்ரூஜெட் நிறுவனம் மூலம் சேலம் - சென்னை விமான சேவை கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் துவங்கி 2021 ஆம் ஆண்டு மே மாதம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து சேலத்தில் இருந்து சென்னைக்கு மீண்டும் விமான சேவை இயக்க வேண்டும் என சேலம் மாவட்ட பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். இதையொட்டி 31 மாதங்களுக்கு பிறகு சேலம் சென்னை விமான சேவை நேற்று துவங்கியது. சென்னையில் இருந்து சேலம் வந்த முதல் இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் கோவா கவர்னர் ஸ்ரீதரன் பிள்ளை, திரைப்பட நடிகை நமீதா, அவரது கணவர் உள்பட 43 பேர் சேலம் வந்தனர். அவர்களுக்கு சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்சியர் கார்மேகம் மற்றும் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் மலர் மற்றும் இனிப்பு கொடுத்து வரவேற்றனர். பின்னர் சேலத்தில் இருந்து மீண்டும் சென்னை திரும்பிய விமானத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு உள்பட 64 பயணிகள் சென்றனர். தொடர்ந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் காலை 11:30 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் புறப்பட்டு 12.30 மணிக்கு சேலம் வந்தடையும் எனவும் அதே விமானம் சேலத்தில் இருந்து 12:50க்கு புறப்பட்டு 1:45 மணிக்கு சென்னை சென்றடையும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், "சேலம் என்பது தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களை இணைக்கும் மாவட்டமாக உள்ளது. தென்னிந்தியா என்று சொல்லக்கூடிய ஆந்திரா, கேரளா, கர்நாடகா என வெளி மாநிலங்களையும் இணைக்கும் சேலம் மாவட்டமாக உள்ளது. தொழிலாளர்கள் தொழில் நிறுவனங்கள் என அனைத்தும் மிகப்பெரிய அளவிற்கு வளர்ந்துள்ளது. மேலும் சேலத்தில் இருந்து சிங்கப்பூர் அபுதாபி உள்ளிட்ட நாடுகளுக்கும் இனைக்கும் விமான சேவையை இண்டிகோ நிறுவனம் தர உள்ளது. இந்தியாவில் இருக்கக்கூடிய பாம்பே டெல்லி உள்ளிட்ட விமான சேவைகளை இணைக்கும் விமான நிலையமாக சேலம் விமான நிலையம் உள்ளது. மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சேலம் முதல் சீரடி மற்றும் திருப்பதி செல்வதற்கான விமான சேவை ஒரு மாதத்திற்குள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட மத்திய போக்குவரத்து துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளது. அவரும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருப்பதாக" கூறினார்.

Salem to Hyderabad Flight:  தொடங்கியது சேலம் - ஹைதராபாத் விமான சேவை - மகிழ்ச்சியில் பயணிகள்

மேலும், "சேலம் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது மிகவும் பின்தங்கிய மாவட்டமாக இருந்தது. அதனை கருத்தில் கொண்டு முன்னாள் முதல்வர் கலைஞர் பல்வேறு நிறுவனங்கள், மருத்துவமனை, ரயில்வே கோட்டம், பல்கலைக்கழகம் என அனைத்தையும் கொண்டு வந்து பின்தங்கிய சேலம் மாவட்டத்தை மற்ற மாவட்டங்கள் பொறாமைப்படும் அளவிற்கு கொண்டு வந்தவர் கலைஞர் என யாரும் மறந்திருக்க மாட்டார்கள். எனவே சேலம் விமான நிலையத்திற்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் விமான நிலையம் என பெயர் சூட்டுவது பொருத்தமாக இருக்கும். இதனை வருகின்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

NEET Re-Exam Result: வெடித்த கருணை மதிப்பெண் சர்ச்சை - நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது
NEET Re-Exam Result: வெடித்த கருணை மதிப்பெண் சர்ச்சை - நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Breaking News LIVE: கருணை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட நீட் மறு தேர்வு முடிவுகள் வெளியீடு
Breaking News LIVE: கருணை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட நீட் மறு தேர்வு முடிவுகள் வெளியீடு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Puducherry Police Exam | ’’வாழ்க்கையே போச்சு’’கண்ணீர் விட்டு அழுத பெண்கள்..தேர்வுக்கு அனுமதி மறுப்புDhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET Re-Exam Result: வெடித்த கருணை மதிப்பெண் சர்ச்சை - நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது
NEET Re-Exam Result: வெடித்த கருணை மதிப்பெண் சர்ச்சை - நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Breaking News LIVE: கருணை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட நீட் மறு தேர்வு முடிவுகள் வெளியீடு
Breaking News LIVE: கருணை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட நீட் மறு தேர்வு முடிவுகள் வெளியீடு
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Embed widget