மேலும் அறிய

Crime: மனநலம் குன்றிய குழந்தைகள் மையம்.. குழந்தைகளை அடித்து துன்புறுத்திய கொடூரர்கள் கைது!

மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தையை தாக்கிய CCTV காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் தளவாய்பட்டி பகுதியை சேர்ந்த அகிலா இவர் ரெட்டியூரில் உள்ள அரசு மருத்துவமனை செவிலியராக பணியாற்றி வருகின்றார். இவரது 9 வயது குழந்தையை (Special Child) வீட்டில் பராமரிக்க யாரும் இல்லாததால் அழகாபுரம் பகுதியில் இயங்கிவரும் பிரகாசம் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான பயிற்சி பள்ளியில் குழந்தையை சேர்த்துள்ளார். இந்த நிலையில் அங்கு பாலாஜி, அந்தோணி எஸ்டர், திருப்பதி ஆகிய மூன்று பேர் பிசியோதெரபிஸ்டாக பணிபுரிந்து வருகின்றனர். செவிலியர் அகிலாவின் குழந்தையை கடந்த 5 ஆம் தேதி குச்சியால் தாக்கியதாகவும் தாக்கியதில் குழந்தையின் கை, கால்களில் வீக்கம் ஏற்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் குழந்தை மனநல பாதிக்கப்பட்ட குழந்தை என்பதால் சொல்ல தெரியவில்லை என்பதல் அகிலா நேரடியாக பிரகாசம் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான பயிற்சி பள்ளிக்கு சென்று அங்கு உள்ள வீடியோ பார்த்தபொழுது குழந்தையை தாக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அகிலா தாக்கிய வீடியோ ஆதாரத்துடன் அழகாபுரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். 

Crime: மனநலம் குன்றிய குழந்தைகள் மையம்.. குழந்தைகளை அடித்து துன்புறுத்திய கொடூரர்கள் கைது!

இதனை அடுத்து அழகாபுரம் காவல்துறையினர் பிரகாசம் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான பயிற்சி பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து அதனையும் விசாரணைக்காக எடுத்துச் சென்றனர். இந்த புகார் தொடர்பாக பிரகாசம் மல்டி Rehabilitation centre பிசியோ தெரபிஸ்ட் பயிற்சியாளர்கள் நங்கவள்ளி பகுதியை சேர்ந்த பாலாஜி (28), தாதகாப்பட்டி ஜான்பீட்டர் என்பவரின் மனைவி அந்தோணி எஸ்டர் (28), அழகாபுரம் பகுதியை சேர்ந்த திருப்பதி (29) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில் உரிமையாளர் ராசிபுரம் பகுதியை சேர்ந்த பிரகாசத்தை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தையை தாக்கிய CCTV காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சேலத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தாக்கிய விவகாரத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் அனுமதி பெறாமல் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Crime: மனநலம் குன்றிய குழந்தைகள் மையம்.. குழந்தைகளை அடித்து துன்புறுத்திய கொடூரர்கள் கைது!

இதுகுறித்து பதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் கூறுகையில், குழந்தைகளை நல்ல வகையில் பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் இங்கு அனுப்பினோம். ஆனால் இவர்கள் குழந்தையை துன்புறுத்துவது நீண்ட நாட்களாக தெரியவில்லை. சமீப நாட்களாக குழந்தைகள் இங்கு செல்ல மறுத்து வந்தனர். சந்தேகத்தின் பேரில் விசாரித்த போதும் குழந்தைகளை இங்கு துன்புறுத்துவதாக தெரியவந்தது. இது குறித்து கேட்டதற்கு மாற்றுத்திறனாளி குழந்தைகளை சற்று பயமுறுத்தி தான் படிக்க வைக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் இங்கு கடுமையாக குழந்தைகளை அடித்து துன்புறுத்தியது சிசிடிவி காட்சியில் பார்த்தவுடன் மனம் வேதனையாக உள்ளது என்று தெரிவித்தனர்.

தலைப்பு செய்திகள்

சரசரவென உயரும் மேட்டூர் அணை? ஒரே நாளில் நீர்வரத்து அதிரடி உயர்வு... லேட்டஸ்ட் நிலவரம் இதோ!
சரசரவென உயரும் மேட்டூர் அணை? ஒரே நாளில் நீர்வரத்து அதிரடி உயர்வு... லேட்டஸ்ட் நிலவரம் இதோ!
மேகதாது அணை: 'சட்டத்திற்கு புறம்பானது' - சௌமியா அன்புமணி சாடல்
மேகதாது அணை: 'சட்டத்திற்கு புறம்பானது' - சௌமியா அன்புமணி சாடல்
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
மேகதாது அணை கட்டினால் டெல்டா பாலைவனமாகும்: எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை
மேகதாது அணை கட்டினால் டெல்டா பாலைவனமாகும்: எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Embed widget