Salem Power Shutdown: சேலம் மாவட்டத்தில் நாளை எங்கெல்லாம் மின் தடை? - முழு விவரம் உள்ளே
Salem Power Shutdown (15.07.2025): சேலம் மாவட்டத்தில் நாளை எங்கெல்லாம் மின்சாரம் தடை உள்ளது என்பதை கீழே அறிந்து கொள்ளலாம்.

சேலம் மாவட்டம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
பேளூர் துணை மின் நிலையம் பராமரிப்பு
நாளை ஜூலை 15 மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பேளூர் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் வழங்கப்படமாட்டாது.
மின்தடை பகுதிகள்:
குறிச்சி, சின்னமநாயக்கன்பாளையம், புழுதிக்குட்டை, சந்துமலை, பெலாப்பாடி, செக்கடிப்பட்டி, வெள்ளாளப்பட்டி, தாண்டானூர், ரெங்கனூர், கனுக்கானூர், சின்னவேலாம்பட்டி, கோனஞ்செட்டியூர், பெரியகுட்டிமடுவு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாதாந்திர பராமரிப்பு பணிகள்
இந்த துணை மின் நிலையத்தில் இருந்து பல்வேறு கிராமங்களுக்கு மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, குறிப்பிட்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும் என்று மின் வாரியம் தெரிவித்துள்ளது. எனவே, பேளூர் துணை மின் நிலையப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மின் தடையை கருத்தில் கொண்டு அதற்கேற்ப தங்கள் பணிகளை திட்டமிட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.





















