Salem Power Shutdown: சேலத்தில் நாளை (07.05.2025) எங்கெல்லாம் மின்சாரம் நிறுத்தம் - லிஸ்ட் இதோ
Salem Power Shutdown (07.05.2025): சேலம் மாவட்டம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சேலம் மாவட்டத்தை பொருத்தவரை கடந்த ஒரு வாரமாக வெயிலின் அளவு 100 டிகிரிக்கும் அதிகமாக பதிவாகி உள்ளது. நேற்றைய தினம் சேலம் மாவட்டத்தில் 102 டிகிரி வெயில் பதிவானது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக பகல் நேரங்களில் வெப்ப காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டுவதில் சிக்கல் ஏற்படுகிறது. நேற்று முன்தினம் முதல் அக்னி வெயில் தொடங்கியுள்ள நிலையில், நேற்று இரவு சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது. இருப்பினும் பகல் நேரங்களில் வெப்பத்தின் தாக்கம் மிகவும் அதிக அளவில் உள்ளது.
மேலும் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை தேவையின்றி பொதுமக்கள் வெளியே வர வேண்டாம். குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் அத்தியாவசிய தேவை இன்றி வெளியே வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மதிய நேரங்களில் பொதுமக்கள் குளிர்பானங்களை தவிர்த்து இளநீர், தர்பூசணி, நொங்கு உள்ளிட்ட உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், கோடை காலங்களில் மாதாந்திர பராமரிப்பிற்கான மின்தடையை தமிழ்நாடு மின்சார வாரியம் தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
Salem Power Cut: சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 07-05-2025 கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் 12 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
நாளைய மின்தடை பகுதிகள்:
கொளத்துார், சத்யா நகர் பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:
மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை.
கொளத்துார், சின்னமேட்டூர், லக்கம்பட்டி, நீதிபுரம், கோவிந்தபாடி, காவேரிபுரம், கருங்கல்லுார், சத்யாநகர், கத்திரிப்பட்டி, கோட்டையூர், காரைக்காடு, ஏமனுார், கோரப்பள்ளம், புதுவேலமங்கலம், தானமூர்த்திக்காடு, உக்கம்பருத்திகாடு, சுப்ரமணியபுரம், பண்ணவாடி, சேத்துக்குழி, வெள்ளகரட்டூர், ஒட்டங்காடு, குரும்பனுார், சவேரியார்பாளையம், குள்ளம்பாளையம், பூமனுார், செட்டியூர், பாலமலை மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.
இன்றைய மின்தடை பகுதிகள்:
கந்தம்பட்டி பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:
மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை.
சிவதாபுரம், பனங்காடு, ஆண்டிப்பட்டி, சத்யா நகர், எம்.ஜி.ஆர் நகர், கிழக்கு வட்ட மேல்காடு, கொத்தனூர், கன்னி மாரியம்மன் கோவில், செம்மண்சிட்டு, கணவாய்காடு, பெருமாம்பட்டி, பூச பூசநயக்கனூர், தும்பாதூளிப்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.





















