மேலும் அறிய

தகர கொட்டகை அமைக்கும்போது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு - உறவினர்கள் சாலை மறியல்

கள்ளசாராயம் அருந்தி உயிரிழந்தவருக்கு பத்து லட்சம் கொடுக்கும் முறையில், குடும்பத்திற்காக பணிக்கு சென்று இறந்தவருக்கு 30 லட்சம் வழங்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை.

சேலம் மாநகர் பள்ளப்பட்டி முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்த தினேஷ். இவர் கடைகளுக்கு தகர கொட்டை அமைக்கும் பணி செய்து வருகிறார். இவருக்கு சந்தியா என்ற மனைவியும், ஒன்றரை வயது பெண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் சேலம் கல்லாங்குத்து தெருவில் உள்ள கடைக்கு மேல் பகுதியில் தகர கொட்டகை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தகர சீட் மின்சார கம்பி மீது மோதியது. இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே தினேஷ் மயக்கம் அடைந்தார். மேலும் தகர சீட் அவர் மீது மோதியதால் காயம் ஏற்பட்டு அதிக அளவில் ரத்தம் வெளியேறியது. இதனை அடுத்து உடன் வேலை செய்தவர்கள் தினேஷை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சேலம் டவுன் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தினேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

தகர கொட்டகை அமைக்கும்போது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு - உறவினர்கள் சாலை மறியல்

இந்த நிலையில் தினேஷின் உறவினர்கள் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை முன்பாக சாலை அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினரிடம் உறவினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கள்ள சாராயம் அருந்தி இறந்தவர்களுக்கு பத்து லட்சம் நிவாரணம் கொடுக்கும் அரசு, குடும்பத்திற்காக உழைக்க சென்று உயிரிழந்தவர் குடும்பத்திற்கு 30 லட்சம் வழங்க வேண்டும் மற்றும் கடையின் உரிமையாளரிடம் முறையான விசாரணையை காவல்துறை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர். அதுவரை சாலை மறியல் போராட்டத்தை கைவிடமாட்டோம் சேர்ந்து உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் உடற்கூறு வாயுவை தாமதம் என்று விரைந்து நடத்த கோரிக்கை கொடுத்துள்ளனர்.

இதேபோன்று கடந்த மே மாதம் சேலம் அம்மாபேட்டையில் உள்ள சௌண்டம்மன் கோயில் தெருவில் அர்த்தனாரி என்பவர் தனது மகனுடன் இணைந்து மளிகை கடை நடத்தி வருகிறார். கடையின் பெயர் பலகை மிகவும் பழுதாகி இருந்ததால் அதனை புதுப்பிக்க மாற்று பேனர் தயார் செய்து அர்த்தநாரி அவரது மகன் தண்டபாணி ஆகியோர் பெயர் பலகையை மாற்ற முயற்சித்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக மின் கம்பியின் மீது பேனர் உரசியதில் மின்சாரம் தாக்கி தந்தை, மகன் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் தந்தையின் கண் முன்னே தண்டபாணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

அரசியல் களத்தில் ஆச்சரியம்! தவெக பட்ஜெட்டை பாராட்டித் தள்ளிய இடதுசாரி தலைவர் முத்தரசன்!
அரசியல் களத்தில் ஆச்சரியம்! தவெக பட்ஜெட்டை பாராட்டித் தள்ளிய இடதுசாரி தலைவர் முத்தரசன்!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
"ராகுல் கிட்ட மேகதாது பத்தி ஏன் பேசல?" - விஜய்யைக் கேள்வி கேட்டு வெளுத்த இயக்குநர் கெளதமன்
எல்லாமே தளபதி மேஜிக்தான்! சேலத்து வண்டி வேடிக்கையில் கெத்து காட்டிய அமெரிக்க விஜய் ரசிகர்!
எல்லாமே தளபதி மேஜிக்தான்! சேலத்து வண்டி வேடிக்கையில் கெத்து காட்டிய அமெரிக்க விஜய் ரசிகர்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget