வீரப்பனை பிடிக்க வீட்டில் இருப்பவர்களை அடித்து அழைத்து சென்றனர் - வேதனையை சொன்ன உறவினர்கள்
வீட்டில் இருப்பவர்களை அடித்து வீரப்பனை பிடிப்பதற்காக அழைத்து சென்றனர். ஆனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முறையாக நிவாரணம் வழங்காததால் விரைந்து நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை.

வீரப்பனின் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் போது, கடந்த 1993 ஆம் ஆண்டு வீரப்பன் கன்னிவெடி தாக்குதல் நடத்தினர். அப்போது காவல்துறையினரால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு முறையான நிவாரணம் வழங்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். குறிப்பாக காவல்துறை அதிகாரியாக இருந்த கோபால் கிருஷ்ணன் என்பவர் கூலி வேலைக்கு சென்ற பொதுமக்களை அழைத்து சென்றனர். அப்பொழுது வீரப்பனை பிடிக்கலாம் என்று அழைத்துச் சென்ற நிலையில் சந்தனகடத்தல் வீரப்பனால் குண்டு வெடிவைத்து கொன்று விட்டதாகவும், பல பேர் வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது உயிரிழந்தாக தெரிவித்தனர். மேலும் இறந்தவர்கள் உடலை காவல்துறையினர் சாலையிலேயே வீசிவிட்டு சென்றுவிட்டதாக கூறினார். மேலும் நிவாரணம் வழங்குவதாக கூறிவிட்டு சென்ற நிலையில் பாதிக்கப்பட்ட பலருக்கு இதுவரை வழங்கவில்லை என்றனர்.
32 ஆண்டுகளாக நிவாரணத்திற்காக அலைந்து கொண்டு வரும் நிலையில் வழங்கவில்லை என்று வேதனை தெரிவித்தனர். ஆனால் அந்த தேடுதல் வேட்டையில் இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்வதற்கு அப்பொழுது ஒரு லட்சம் மட்டுமே நிவாரணம் வழங்கியதாக தெரிவித்தனர். கூலித் தொழில் செய்து தான் வாழ்க்கை நடத்தி வந்த நிலையில் தனது கணவரை காவல்துறை உயர் அதிகாரி கோபாலகிருஷ்ணன் அழைத்துச் சென்று ஒரு வருடமாக வைத்து இருந்த நிலையில் இறுதியாக கண்ணிவெடியில் சிக்கி இறந்த தனது கணவரை மூட்டையாக தான் கொண்டு வந்து போட்டதாக பாதிக்கப்பட்ட தெரிவித்தனர். வீட்டில் இருப்பவர்களை அடித்து வீரப்பனை பிடிப்பதற்காக அழைத்து சென்றனர் என்றும் கூறினர். ஆனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முறையாக நிவாரணம் வழங்காததால் விரைந்து நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

