மேலும் அறிய

அமலாக்கத்துறை சம்மன் விவகாரம்; சாதி பெயரை குறிப்பிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை

கருப்பு பணம் பரிமாற்றம் தொடர்பாக நேரில் ஆஜராகும் படியும், சாதியை குறிப்பிட்டு சம்மன் அனுப்பியதாகவும் இதன் பின்னணியில் உள்ள பாஜக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் புகார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன் பாளையம் அடுத்துள்ள செங்கேணிகுட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் முதியோர்களான கிருஷ்ணன் (71), கண்ணையன் (75). சகோதரர்களான இவர்களுக்கு கடந்த ஜூன் மாதம் அமலக்கத்துறையில் இருந்து கருப்பு பணம், பரிமாற்றம் தொடர்பாக நேரில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பி உள்ளனர். அதில் முதியவர்களின் சாதியை குறிப்பிட்டு சம்மன் அனுப்பி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த முதியோர்களான கிருஷ்ணன் மற்றும் கண்ணயன் ஆகியோர் வழக்கறிஞர்களுடன் சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வங்கிக் கணக்கு, ஆதார் உள்ளிட்ட ஆவணங்களோடு ஆஜராகினர். அப்போது அதன் அடிப்படையில் இவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது என வழக்கறிஞர்கள் தரப்பில் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள் அலட்சியமாக பதில் அளித்ததோடு, மீண்டும் அமலாக்கத் துறை அலுவலகத்தில் முதியோர்களை ஆஜராகும் படி தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் வழக்கறிஞர்களை மிரட்டும் தொனியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் பேசியதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து முதியோர் தரப்பில் இருந்த வழக்கறிஞர் செல்லதுரை தரப்பினர் டிஜிபி அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது புகார் அளித்தனர்.

அமலாக்கத்துறை சம்மன் விவகாரம்; சாதி பெயரை குறிப்பிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை

இதுகுறித்து பேட்டியளித்த கண்ணன், அமலாக்கத்துறை சாதியின் பெயரை குறிப்பிட்டு சம்மன் அனுப்பியதால் அதை இரண்டு நாட்கள் வரை வாங்காமல் பிறகு பெற்றுக் கொண்டேன். அதில் சொத்து அதிகமாக உள்ளதாகவும், கருப்பு பணம் வைத்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. விசாரணைக்கு வரவில்லை என்றால் கைது செய்யப்படுவீர்கள் என கூறியதால் குறிப்பிட்ட நேரத்தில் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு சென்றோம். எங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை உட்பட பல்வேறு ஆவணங்களை அமலாக்கத் துறையினரிடம் ஒப்படைத்தோம். அதன்பின் அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றொரு நாள் வருமாறு கூறினர். அதற்கு எங்களால் வர முடியாது நீங்கள் வேண்டுமென்றால் எங்களது வீட்டிற்கு வந்து பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினோம். பாஜகவை சேர்ந்த குணசேகரன் என்பவர் வேண்டுமென்றே திட்டமிட்டு எங்களை பழிவாங்கும் நோக்கத்தோடு சாதி பயன்படுத்தி சம்மன் அனுப்பிய அதிகாரி மீதும் குணசேகரன் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளதாக கூறினார். 

அமலாக்கத்துறை சம்மன் விவகாரம்; சாதி பெயரை குறிப்பிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை

இது தொடர்பாக விசாரித்தபோது கிருஷ்ணன் மற்றும் கண்ணையன் இருவரின் வங்கி கணக்கில் 500 ரூபாய் பணம் மட்டுமே வைப்புத் தொகையாக உள்ளது. இருப்பினும் அமலாக்கத்துறை அனுப்பி உள்ள கருப்பு பணம் பரிமாற்றம் போன்று எந்த பணம் பரிமாற்றமும் இவர்கள் இருவரும் மேற்கொள்ளவில்லை. மேலும் கடந்த சில நாட்களாக இவர்களிடம் உள்ள நிலத்தை பாஜக நிர்வாகி ஆக்கிரமிக்க முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. அமலாக்கத்துறை அனுப்பி உள்ள சம்மன் பாஜக நிர்வாகிகள் தூண்டுதல் பெயரில் வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும், சாதியை குறிப்பிட்டு தபால் அனுப்பிய அமலாக்கத்துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். விவசாயிகள் கருப்பு பணம் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருப்பது சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் 'ஏஎஸ்டி' (ASD) பட்டியல் வெளியீடு: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!
புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் 'ஏஎஸ்டி' (ASD) பட்டியல் வெளியீடு: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!
கபீர் புரஸ்கார் விருது: 2026-ல் சமூக நல்லிணக்கத்திற்காக காத்திருக்கும் வாய்ப்பு! விண்ணப்பிக்க டிசம்பர் 15 கடைசி தேதி
கபீர் புரஸ்கார் விருது: 2026-ல் சமூக நல்லிணக்கத்திற்காக காத்திருக்கும் வாய்ப்பு! விண்ணப்பிக்க டிசம்பர் 15 கடைசி தேதி
திருச்சியில் துப்பாக்கிச் சூடு: பிரபல கொள்ளையன் கைது! கோவை போலீசாருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு!
திருச்சியில் துப்பாக்கிச் சூடு: பிரபல கொள்ளையன் கைது! கோவை போலீசாருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Embed widget