மேலும் அறிய

ஆத்தூர் விபத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களை சேலம் மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து ஆறுதல்

சென்னையில் இருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து, நள்ளிரவில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வந்து கொண்டிருந்தபோது ஆம்னி பேருந்தும், காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

ஆத்தூரில் லீ பஜார் பகுதியில் உயிரிழந்த உறவினரின் 30 ஆம் நாள் துக்க நிகழ்ச்சிக்காக வந்தவர்கள் இரவு நேரத்தில் டீ அருந்துவதற்காக தேசிய நெடுஞ்சாலை பக்கம் ஆம்னி வேனில் அனைவரும் வந்துள்ளனர். சென்னையில் இருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து நள்ளிரவில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வந்து கொண்டிருந்தபோது ஆம்னி பேருந்து, காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்டனர். இதில் 11 வயது சிறுமி தன்சிகா மருத்துவமனையில் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ஐந்து பேருக்கும் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

ஆத்தூர் விபத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களை சேலம் மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து ஆறுதல்

உயிரிழந்தவர்களின் பெயர் விபரம்.

1. சரண்யா (வயது 23 )

 கணவர் பெயர் சுதாகர். முல்லைவாடி ஆத்தூர் .

2. சுகன்யா (வயது 27)

 கணவர் பெயர் சந்தோஷ் 

புதிய கல்லா நத்தம் ரோடு முல்லைவாடி ,ஆத்தூர்,

3. சந்தியா (வயது 23 ) 

தகப்பனார் பெயர் மயில் வாகனம்.

4. ரம்யா (வயது 25)

த.பெ .ஆனந்தன் ,

குமாரமங்கலம் போக்கம்பாளையம் திருச்செங்கோடு வட்டம் நாமக்கல் மாவட்டம்.

 5. ராஜேஷ் (வயது29)

  தகப்பனார் பெயர் ஆனந்தன் குமாரபாளையம் போக்கம்பாளையம் திருச்செங்கோடு வட்டம் நாமக்கல் மாவட்டம் .

6. தன்ஷிகா (வயது 11)

தகப்பனார் பெயர் சந்தோஷ் முல்லைவாடி, ஆத்தூர்.

இவர்களைத் தவிர மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் பெயர் விவரம்.

1. பெரியண்ணன் (வயது 38) தகப்பனார் பெயர் பெரியசாமி

2. புவனேஸ்வரி (வயது 17) தகப்பனார் பெயர் ஹரி மூர்த்தி

3. கிருஷ்ணவேணி (வயது 45) கணவர் பெயர் செல்வராஜ்

4. உதயகுமார் (வயது 17) தகப்பனார் பெயர் சிவக்குமார்

5. சுதா (வயது 35 ) கணவர் பெயர் மயில்சாமி

ஆத்தூர் விபத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களை சேலம் மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து ஆறுதல்

மருத்துவமனையில் உயிரிழந்த சிறுமி தன்ஷிகா உடல் உடற்கூறு ஆய்வு செய்ய சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. படுகாயம் அடைந்து மேலும் 5 பேருக்கு தொடர்ந்து சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்த தகவல் அறிந்த சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் மற்றும் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். அதன்பின் அங்கிருந்து விபத்து நடந்த சேலம் சென்னை நெடுஞ்சாலையில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து குறித்து ஆத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். ஆம்னி பேருந்து மீது கார் மோதிய விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் சேலத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Annamalai, Tamilisai Arrest: டாஸ்மாக் ஊழலை எதிர்த்து பாஜக போராட்டம்.. அண்ணாமலை, தமிழிசை கைது...
டாஸ்மாக் ஊழலை எதிர்த்து பாஜக போராட்டம்.. அண்ணாமலை, தமிழிசை கைது...
BJP Vs EPS Vs Sengottaiyan: சுழன்றடிக்கும் பாஜக.. சுழலில் சிக்கிய இபிஎஸ்.. செங்கோட்டையன் கையில் அதிமுக.?
சுழன்றடிக்கும் பாஜக.. சுழலில் சிக்கிய இபிஎஸ்.. செங்கோட்டையன் கையில் அதிமுக.?
ADMK Resolution on Appavu: அப்பாவுவின் பதவி தப்புமா.? அதிமுக தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு...
அப்பாவுவின் பதவி தப்புமா.? அதிமுக தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு...
EPS Slams MK Stalin: 5 பட்ஜெட்டுமே UTTER FLOP.. சினிமா டயலாக் பேசாதீங்க.. முதல்வரை விமர்சித்த ஈபிஎஸ்
EPS Slams MK Stalin: 5 பட்ஜெட்டுமே UTTER FLOP.. சினிமா டயலாக் பேசாதீங்க.. முதல்வரை விமர்சித்த ஈபிஎஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS Son Jaya Pradeep: ”அதிமுகவின் உண்மை தொண்டன்” செங்கோட்டையனுக்கு ஆதரவு! ஓபிஎஸ் மகன் செக்!Sivagangai Bonded labour : ”தமிழ்நாட்டில் ஓர் ஆடுஜீவிதம்” 20 ஆண்டு கொத்தடிமை! மீட்கப்பட்ட பின்னணி?Airtel Employee: “இந்தியில் தான் பேசுவேன்” வாக்குவாதம் செய்த ஏர்டெல் ஊழியர்! வெடித்த மொழி பிரச்சனைCar Accident CCTV: மின்னல் வேகம்.. பேருந்தில் சிக்கிய கார்! வெளியான சிசிடிவி காட்சி | salem

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai, Tamilisai Arrest: டாஸ்மாக் ஊழலை எதிர்த்து பாஜக போராட்டம்.. அண்ணாமலை, தமிழிசை கைது...
டாஸ்மாக் ஊழலை எதிர்த்து பாஜக போராட்டம்.. அண்ணாமலை, தமிழிசை கைது...
BJP Vs EPS Vs Sengottaiyan: சுழன்றடிக்கும் பாஜக.. சுழலில் சிக்கிய இபிஎஸ்.. செங்கோட்டையன் கையில் அதிமுக.?
சுழன்றடிக்கும் பாஜக.. சுழலில் சிக்கிய இபிஎஸ்.. செங்கோட்டையன் கையில் அதிமுக.?
ADMK Resolution on Appavu: அப்பாவுவின் பதவி தப்புமா.? அதிமுக தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு...
அப்பாவுவின் பதவி தப்புமா.? அதிமுக தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு...
EPS Slams MK Stalin: 5 பட்ஜெட்டுமே UTTER FLOP.. சினிமா டயலாக் பேசாதீங்க.. முதல்வரை விமர்சித்த ஈபிஎஸ்
EPS Slams MK Stalin: 5 பட்ஜெட்டுமே UTTER FLOP.. சினிமா டயலாக் பேசாதீங்க.. முதல்வரை விமர்சித்த ஈபிஎஸ்
Train Cancel: ரயில் பயணிகளின் கனிவான கவனத்திற்கு.. சென்ட்ரலில் இருந்து செல்லும் 23 மின்சார ரயில்கள் ரத்து...
ரயில் பயணிகளின் கனிவான கவனத்திற்கு.. சென்ட்ரலில் இருந்து செல்லும் 23 மின்சார ரயில்கள் ரத்து...
EPS vs Sengottaiyan: பற்ற வைத்த ஓபிஎஸ் மகன்! ஆதரவில் செங்கோட்டையன்.. கடுப்பில் எடப்பாடி
EPS vs Sengottaiyan: பற்ற வைத்த ஓபிஎஸ் மகன்! ஆதரவில் செங்கோட்டையன்.. கடுப்பில் எடப்பாடி
"உயிருடன் எரித்தனர்.. கற்பனை கூட பண்ண முடில" குஜராத் கலவரம் குறித்து பிரதமர் மோடி உருக்கம்!
புதிய அவதாரம் எடுக்கப்போகும் ரவி மோகன்... யோகி பாபுவுடன் போட்டாச்சு கூட்டு...!
புதிய அவதாரம் எடுக்கப்போகும் ரவி மோகன்... யோகி பாபுவுடன் போட்டாச்சு கூட்டு...!
Embed widget