ஜவ்வரிசி கலப்படத்தால் மரவள்ளி கிழங்கு விவசாயிகள் வேதனை - 10 ஆண்டுகளில் 7,000 கோடி இழப்பு
’’கடந்த 10 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு 7000 கோடி இழப்பு’’
சேலம் மாவட்டத்தின் முக்கிய உற்பத்தி தொழில்களில் ஒன்றாக 1950ஆம் ஆண்டு ஜவ்வரிசி உற்பத்தி இருந்து வருகிறது. சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மரவள்ளிக்கிழங்கு விளைச்சல் அதிகமாக இருக்கும் நிலையில் இதனை மூலப்பொருளாக கொண்டு ஜவ்வரிசி தயாரிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஜவ்வரிசி தயாரிப்பு முறைகளில் செய்யப்படும் பல்வேறு ரசாயன கலப்படங்கள் காரணமாக விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர்.
மத்திய அரசு அறிவித்துள்ள 'ஒரு மாவட்டம் ஒரு பயிர்' திட்டத்தில் சேலம் மாவட்டத்திற்கு மரவள்ளிக்கிழங்கு முக்கிய பயிராக இடம்பெற்றுள்ளது. சேலம் மாவட்டத்தில் சுமார் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் மரவள்ளிக்கிழங்கை பயிரிட்டு வருகின்றனர். இங்கு விவசாயம் செய்யப்படும் மரவள்ளிக் கிழங்கிலிருந்து ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு உற்பத்தி செய்யப்படுகின்றன, இவை ஜவ்வரிசி மட்டுமில்லாமல் பல உணவுப் பொருட்களில் மூலப்பொருளாக சேர்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் ஜவ்வரிசி இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. சேலம், தருமபுரி, நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் 300க்கும் மேற்பட்ட ஜவ்வரிசி உற்பத்தி ஆலைகள் இயங்கி வருகின்றனர். இங்கிருந்து 30,000 டன் ஜவ்வரிசி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
1950 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை கைகளால் முழுவதும் தோல் நீக்கப்பட்ட பெரிய மரவள்ளிக்கிழங்குகளை அரைத்து அதில் எவ்விதமான ரசாயன கலப்படங்களும் இல்லாமல் முற்றிலும் இயற்கையான முறையில் ஜவ்வரிசி தயாரிக்கப்பட்டு வந்தது. இதற்கடுத்து 2000 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை ஜவ்வரிசியில் அதிக வெண்மை நிறம் வேண்டும் என்பதற்காக சல்ஃப்யூரிக் அமிலத்தை சிறிய அளவில் கடந்து வந்தனர். அதன்பிறகு ஜவ்வரிசி மேலும் வெண்மையாக்க சோடியம் ஹைப்போ குளோரைடு, ஹைட்ரோ குளோரிக் அமிலம், ஹைட்ரஜன் பெராக்சைட், கால்சியம் ஹைப்போ குளோரைட், ப்ளிச்சிங் பவுடர், சோப் ஆயில் உள்ளிட்ட அமிலங்களும் உயிருக்கு அச்சுறுத்தல் கூடிய மலர்களையும் கொண்டு வெண்மை ஆக்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி, ரேஷன் கடைகளில் விற்கப்படும் அரிசி மற்றும் கால்சியம் பவுடர் போன்ற விலை குறைவாக கிடைக்கும் பொருட்களை கொண்டு ஜவ்வரிசியில் கலப்படம் செய்து வருகின்றனர்.
இதனால் ஜவ்வரிசி தயாரிப்பில் மரவள்ளிக்கிழக்கின் பங்கு 60 சதவீகிதமாக குறைந்த நிலைய்ல்
ரேஷன் அரிசி 20 சதவீகிதமும், கால்சியம் பவுடர் 20 சதவீகிதமும் கலக்கப்படுகிறது. இதனால் ஒரு டன் 8,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த மரவள்ளிக்கிழங்கு தற்போது விலை சரிந்து 5,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மூலப்பொருட்களின் விலை குறைந்ததால் 90 கிலோ கொண்ட ஜவ்வரிசி மூட்டை 5,000 ரூபாயில் இருந்து 3,000 ரூபாயாக சரிந்துள்ளது. மேலும், மரவள்ளிக்கிழங்கு விவசாயிகளுக்கு ஆறு மாதம் விவசாயம் செய்தால் ஒரு டன் மரவள்ளி கிழங்கிற்கு 6,000 வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது 2,000 மட்டுமே கிடைப்பதாக விவசாயிகல் வேதனை தெரிவிக்கின்றனர். சேலம் மாவட்டத்தில் வருடத்திற்கு 10 லட்சம் டன் மரவள்ளிக்கிழங்கு விளையும் நிலையில் இதன் மூலம் ஆண்டொன்றிற்கு 700 கோடி என்ற கணக்கில் கடந்த 10 ஆண்டுகளில் 7000 கோடி விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. ஜவ்வரிசி கலப்படத்திற்கு பயன்படுத்தப்படும் அமிலங்களை மறைமுகமாக கலப்படம் செய்ய முடியாது எனவும், உணவு பாதுகாப்பு துறை விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சேலம் ஸ்டார்ச் மற்றும் சேகோ உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் சார்பில் கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஜவ்வரிசி உற்பத்தியின் போது பிரசர் மோட்டார்களை பயன்படுத்தக்கூடாது, ஜவ்வரிசி உற்பத்தியின்போது ரசாயன உற்பத்தி செய்யக்கூடாது. அழுக்குமாவு, நொருக்குமாவுகளை கொண்டு ஜவ்வரிசியை வெண்மையாக்க கூடாது. உணவுப்பாதுகாப்பு விதிமுறைகளின் படி PH மற்றும் இதர பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். கிழங்குகளின் தோலை நன்கு உரித்த பின்னர்தான் ஜவ்வரிசி தயாரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கி உள்ளனர்.