மேலும் அறிய

Aadi Festival: பூச்சாட்டுகள் நிகழ்ச்சியுடன் தொடங்கியது சேலம் மாவட்டத்தின் ஆடி பண்டிகை.. பக்தியுடன் திரண்ட மக்கள்..

சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

சேலம் மாவட்டத்தில் ஆடி பண்டிகை என்பது மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால் ஆடி மாதம் பண்டிகையானது முற்றிலும் நிறுத்தப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்து இருப்பதால் சேலம் மக்கள் மகிழ்ச்சியோடு ஆடி மாதத்தை வரவேற்று கொண்டாடி வருகின்றனர்.

Aadi Festival: பூச்சாட்டுகள் நிகழ்ச்சியுடன் தொடங்கியது சேலம் மாவட்டத்தின் ஆடி பண்டிகை.. பக்தியுடன் திரண்ட மக்கள்..

இன்று சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில்களில் அம்மனுக்கு பூச்சாட்டுகள் விழா மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. பூச்சாட்டுகள் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். இதன்பின் வருகின்ற 8 ஆம் தேதி இரவு சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் 10 ஆம் தேதியிலிருந்து விழாவில் முக்கிய நிகழ்வாக பொங்கல் வைத்தல் மாவிளக்கு எடுத்தல் மற்றும் பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தும் நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. தொடர்ந்து 16 ஆம் தேதி அன்று பால்குட ஊர்வலம் மற்றும் மகா அபிஷேகத்துடன் விழா நிறைவு பெறும்.

இந்த மாதம் முழுவதும் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் திருக்கோவில்களிலும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படும். ஆடி முதல் நாள் என்பதால் சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. குகை, அம்மாபேட்டை, செவ்வாய்பேட்டையில் உள்ள அம்மன் திருக்கோவில்களிலும் சிறப்பான அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து 22 நாட்கள் நடைபெறும் ஆடி பண்டிகை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Aadi Festival: பூச்சாட்டுகள் நிகழ்ச்சியுடன் தொடங்கியது சேலம் மாவட்டத்தின் ஆடி பண்டிகை.. பக்தியுடன் திரண்ட மக்கள்..

இதைத் தொடர்ந்து ஆடி இரண்டாம் வாரம் கம்பளி நடுவது, மூன்றாம் வாரம் பூ கரகம் எடுப்பது, அலகு குத்துதல், பொங்கல் வைப்பது, வண்டி வேடிக்கை போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பண்டிகை ரத்து செய்யப்பட்டது. கொரோனா நோய் தொற்று குறைந்து வருவதால் இந்த ஆண்டு மாரியம்மன் பண்டிகை கொண்டாட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் சேலம் மாவட்டம் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில்களில் பசம்பாவிதங்களை தடுக்க கோவில்களில் சிசிடிவி பொருத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். பாதுகாப்பு பணியில் 1000 கணக்கான காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் ஆடி 18 ஆம் நாள் என்பதால் காவிரி ஆற்றில் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை பிரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது காவேரி ஆற்றல் பொதுமக்கள் இறங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி காவிரி ஆற்றில் இறங்கும் முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

தலைப்பு செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் கொலையின் பின்னணியில் யார்? யார்? இருந்தார்கள்? - ப.பா.மோகன் வெளியிட்ட பகீர் தகவல்!
ஆம்ஸ்ட்ராங் கொலையின் பின்னணியில் யார்? யார்? இருந்தார்கள்? - ப.பா.மோகன் வெளியிட்ட பகீர் தகவல்!
செம வாசம்! சேலத்தில் ஆடிப் பிறப்பையொட்டி தேங்காய் சுட்ட மக்கள்! இதன் பின்னணியில் இருக்கும் ரகசியம் என்ன?
செம வாசம்! சேலத்தில் ஆடிப் பிறப்பையொட்டி தேங்காய் சுட்ட மக்கள்! இதன் பின்னணியில் இருக்கும் ரகசியம் என்ன?
மேட்டூர் அருகே மெய்சிலிர்க்க வைக்கும் வரலாற்று பொக்கிஷம்! காவிரி கரையில் பூமிக்கு அடியில் 3,600 ஆண்டுகால மர்மம் உடைந்தது!
மேட்டூர் அருகே மெய்சிலிர்க்க வைக்கும் வரலாற்று பொக்கிஷம்! காவிரி கரையில் பூமிக்கு அடியில் 3,600 ஆண்டுகால மர்மம் உடைந்தது!
பாமகவில் மீண்டும் பூகம்பம்; ராமதாஸ் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறார்? - போட்டுடைத்த பாமக முன்னாள் எம்.எல்.ஏ
பாமகவில் மீண்டும் பூகம்பம்; ராமதாஸ் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறார்? - போட்டுடைத்த பாமக முன்னாள் எம்.எல்.ஏ

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK MLA: காலையிலேயே திமுக எம்.எல்.ஏவை தூக்கிய போலீசார் - கைதுக்கான காரணம் என்ன? தூத்துக்குடியில் பரபரப்பு
காலையிலேயே திமுக எம்.எல்.ஏவை தூக்கிய போலீசார் - கைதுக்கான காரணம் என்ன? தூத்துக்குடியில் பரபரப்பு
Rohit Sharma: லார்ட்ஸில் சதமடித்து சரித்தரம் படைத்த ரோகித் சர்மா..! ஓய்வு குறித்து விளக்கம் சொன்ன கேப்டன் கில்
லார்ட்ஸில் சதமடித்து சரித்தரம் படைத்த ரோகித் சர்மா..! ஓய்வு குறித்து விளக்கம் சொன்ன கேப்டன் கில்
FIFA Argentina Vs Spain: ஸ்பெயின் சாம்பியன்.. கால்பந்து உலகக் கோப்பை - ஒவ்வொரு அணிக்கான பரிசுத்தொகை, யாருக்கு? எவ்வளவு?
ஸ்பெயின் சாம்பியன்.. கால்பந்து உலகக் கோப்பை - ஒவ்வொரு அணிக்கான பரிசுத்தொகை, யாருக்கு? எவ்வளவு?
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Embed widget