மேலும் அறிய

"பெரியாருக்கு எந்தக் கடவுள் மீதும், எந்த மதத்தின் மீதும் கோபம் இல்லை" - அமைச்சர் பொன்முடி

50 ஆண்டுகளுக்கு முன்பு, பள்ளி மற்றும் வகுப்பறையில் ஒரேயொரு பெண் பயின்ற நிலையில், இன்றைக்கு அறை முழுவதும் கல்வி பயில்கின்றனர்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 25 வது ஆண்டு நிறைவுநாள் வெள்ளிவிழா மற்றும் தந்தை பெரியார் பிறந்த நாள்-சமூகநீதி நாள் நடைபெற்றது. இதில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் அப்பாவு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அப்போது மாணவர்கள் இடையே உரையாற்றிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, வரலாற்றை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். அரசியல் கலப்பில்லாத முப்பெரும் விழா. ஈரோட்டை போல சேலமும் பெரியார் மண்தான். பெரிய பாராட்டுக்குரிய நிகழ்வு. பெண்கள் அதிக அளவில் உயர்கல்வி கற்பது பெரியார் செய்த சாதனை. பெரியாருக்கு எந்தக் கடவுள் மீதும் எந்த மதத்தின் மீதும் கோபம் இல்லை. எல்லோரும் சமமாக நடத்த வேண்டும் என்றுதான் பெரியார் சொன்னார். 50 ஆண்டுகளுக்கு முன்பு, பள்ளி மற்றும் வகுப்பறையில் ஒரேயொரு பெண் பயின்ற நிலையில், இன்றைக்கு அறை முழுவதும் கல்வி பயில்கின்றனர். அந்த அளவிற்கு மகளிருக்கான வாய்ப்பை உருவாக்கித்தந்தது திராவிட மாடல் ஆட்சியின் சாதனை. அதன் தொடர்ச்சியாக முதல்வர் ஸ்டாலின் அரசுப் பணிகளில் 50 சதவீத வாய்ப்பினை பெண்களுக்கு வழங்கியுள்ளார்.

 

சமூக நீதி பாடம் பள்ளிகளுக்கு மட்டுமல்ல. கல்லூரிகளிலும் பாடமாக கொண்டு வர வேண்டும். குழந்தைத் திருமணம் கூடாது என்ற நடைமுறையை கொண்டு வந்தது நீதிக் கட்சிதான். பெண்களுக்கு கல்வி வாய்ப்பை கொண்டு வந்ததுதான் சமூக நீதி. திராவிட மாடல் ஆட்சி. பெண்களுக்கு மட்டுமல்ல. தாழ்த்தப்பட்டவர்கள் வீதிகளில் நடக்கவும், கோவிலுக்கு செல்லவும் தடை விதித்த நிலை மாறியதும் திராவிட மாடல் ஆட்சியில்தான். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்று கொண்டு வந்தது திராவிட மாடல் ஆட்சி. நாங்கள் அனைவரும் இந்துக்கள்தான். இந்து மதத்திற்கு எதிரானவர்கள் இல்லை. அனைவரும் சமமாக நடத்தப்படவேண்டும். ஜாதிய அடிப்படையில் வேறுபாட்டுடன் நடத்துவதையே எதிர்க்கிறோம். ஒரிஜனலாக இந்த மண்ணுக்கு சொந்தக்காரர்கள் திராவிடர்கள்தான். ஜாதிய வேறுபாடுகள் மாற்றம் கண்டதற்கு பெரியார், அண்ணா, கலைஞர் மற்றும் இன்றைய முதல்வர் ஸ்டாலின்தான் காரணம். சமூக சமத்துவத்தை உறுதி செய்துள்ளோம். சமூக நீதி நாள் அதற்காகத்தான் கொண்டாடப்படுகிறது. அடித்தளத்து மக்கள் தொடர்ச்சியாக போராடியதால்தான் சமத்துவம் கிடைத்தது. சமூக நீதி மற்றும் சமத்துவம் இரண்டும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அனைத்து சமுதாயத்தினருக்கும் உரிய இட ஒதுக்கீட்டை வழங்கியது சமூக நீதியாக உள்ளது. மத்திய அரசுப் பணிகளில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை கலைஞர்தான் பெற்று தந்தார். தமிழகத்தின் சமூக நீதி வரலாற்றை மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும். பிறருக்கு சொல்லித் தரும் நிலையில் இருக்கிறீர்கள். சமூக நீதி என்பதை அடிப்படையாகக் கொண்டு செயல்பட வேண்டும். அனைத்து சமுதாயத்தினரும் முன்னேற பாடுபட வேண்டும். ஒரே நாடு ஒரே மொழி ஒரே மதம், ஒரே ஜாதி ஒரே சாப்பாடு என சொல்கிறார்கள். சாப்பாடு ஒன்றாக இருக்க வேண்டும் என்பதை எப்படி ஏற்க முடியும். இது இந்த நாட்டிற்கு சரியாக வராது. வேற்றுமையில் ஒற்றுமை காண்பது நம்முடைய நாட்டின் பெருமை. பல்வேறு தரப்பினர் இருக்கும் நாட்டில் ஒரே அடைமொழியில் மாற்ற முடியாது. ஒரே மொழி என்கிற சூழ்நிலையை உருவாக்க முயல்கின்றனர். இருமொழி கொள்கையை அண்ணா கொண்டு வந்தார். பொறியியல் கல்லூரிகளில் தமிழ் கொண்டு வரப்பட்டுள்ளது. அனைத்து கல்லூரிகளிலும் முதல் மற்றும் 2-ம் ஆண்டுகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் பயிற்றுவிக்கப்படுகிறது. இதை மூன்று மொழியாக்க பார்க்கின்றனர். இருமொழிகளை பயில்வதே கடினம். மூன்றாவது மொழியை எப்படி பயில முடியும். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கில வழிக் கல்வி மட்டுமே உயர்கல்வி பாடங்கள் இருந்தது. தமிழ்வழியில் பள்ளி பாடங்களை பயின்றவர்கள் ஆங்கிலத்தில் கற்க மிகவும் சிரமப்பட்டனர்.  தமிழ் நம் தாய்மொழி என்பதால் படிக்க வேண்டும். ஆங்கிலம் என்பது பன்னாட்டு தொடர்பிற்காக படிக்க வேண்டும். தமிழ் ஆங்கிலம் தெரிந்தால் மும்பை போனாலும் சரி அமெரிக்கா போனாலும் பிழைத்து கொள்ளலாம்.

 

தமிழ்நாட்டிற்கு தனி கல்விக் கொள்கைக்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. மொழிக் கொள்கை மற்றும் கல்வித் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறது. வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். படிப்பு மட்டுமே போதாது. சமுதாயம் பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் நான் முதல்வன் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு முதல்கட்டமாக பயிற்சி அளிக்கப்பட்டது. 2007-ம் பொறியியல் கல்வி நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. நுழைவுத் தேர்வில் எவ்வளவு கஷ்டம் என்பது தெரியும். நுழைவு தேர்விற்கு முன்பு 25 ஆயிரம் பேரும், ரத்து செய்யப்பட்ட பிறகு 77 ஆயிரம் பேர் கிராமப்பகுதிகளில் இருந்து பயிலும் நிலை உருவானது.

மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது.  பொறியியல் கல்விக்கே வேண்டாம் என்று சொல்லி விட்டோம். மருத்துவக் கல்விக்கு நீட் வேண்டாம் என்று தொடர்ந்து சொல்லி  வருகிறோம். பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்றுதான் தமிழக அரசு கல்வி கொள்கையில் திட்டம் வகுத்து வருகிறது. மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையில் 3-ம் வகுப்பு, 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கல்வி கற்பது பாதிக்கப்படும். தொழிலுக்கேற்ப கல்வி கொண்டு வர வேண்டும் என்பதை மாற்றியதுதான் திராவிட மாடல் ஆட்சி. அனைத்து ஜாதியினர், அனைத்து மதத்தினரும் ஒன்றுதான். எல்லோரும் மனிதர்கள் என்ற உணர்வோடு இருக்க வேண்டும் என்பதற்காக சமூக நீதி நாள் கடைப்பிடிக்க படுகிறது.  மாணவிகள் பெற்றோரிடம் பணம் கேட்ட காலம் போய், மகளிடம் பெற்றோர் பணம் கேட்கும் அளவிற்கு திராவிட மாடல் ஆட்சியில் புதுமைப் பெண் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று கூறினார்.

தலைப்பு செய்திகள்

ஒரு மாதத்தில் 26 குடும்பங்களின் நிம்மதி போச்சு! ஹெல்மெட் அணியாவிட்டால் காத்திருக்கும் பேராபத்து!
ஒரு மாதத்தில் 26 குடும்பங்களின் நிம்மதி போச்சு! ஹெல்மெட் அணியாவிட்டால் காத்திருக்கும் பேராபத்து!
இரவு நேரப் பசியா? 24 மணி நேரமும் இயங்கும் ‘ரயில் கோச் ரெஸ்டாரன்ட்’ - எங்கு தெரியுமா?
இரவு நேரப் பசியா? 24 மணி நேரமும் இயங்கும் ‘ரயில் கோச் ரெஸ்டாரன்ட்’ - எங்கு தெரியுமா?
சேலத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு விமான சேவை தொடர்வதை நீட்டிக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
சேலத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு விமான சேவை தொடர்வதை நீட்டிக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
அரசியல் களத்தில் ஆச்சரியம்! தவெக பட்ஜெட்டை பாராட்டித் தள்ளிய இடதுசாரி தலைவர் முத்தரசன்!
அரசியல் களத்தில் ஆச்சரியம்! தவெக பட்ஜெட்டை பாராட்டித் தள்ளிய இடதுசாரி தலைவர் முத்தரசன்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
Chennai Bengaluru Bullet Train: 350 கி.மீ SPEED... வெறும் 1.13 மணி நேரம்.! சென்னை- பெங்களூர்- அமராவதி வழியாக புல்லட் ரயில்.! அசத்தல் PLAN
350 கி.மீ SPEED... வெறும் 1.13 மணி நேரம்.! சென்னை- பெங்களூர்- அமராவதி வழியாக புல்லட் ரயில்.! அசத்தல் PLAN
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
Embed widget