மேலும் அறிய
Advertisement
இலவச வீட்டு மனை பட்டா தொடர்பாக ஆட்சியரை முற்றுகையிட்ட மக்கள் - தருமபுரியில் பரபரப்பு
மாவட்ட ஆட்சியரை நேரில் சந்திக்க வேண்டும் என தெரிவித்த போது கீழே வைக்கப்பட்டுள்ள பெட்டியில் மனுவை போட்டுவிட்டு செல்லுங்கள் என கூறியுள்ளனர்.
பென்னாகரம் அருகே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், இலவச வீட்டு மனை பட்டா வழங்காமல், வேறு யாருக்கும் பட்டா வழங்க கூடாது என நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டதால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது .
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த மஞ்சநாய்க்கனஹள்ளி ஊராட்சியில் நரசிபுரம் காலனி, சின்ன மடை காலனி, பெரியமடை காலனி, ஆகிய பகுதிகளில் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஆனால் போதிய இட வசதி இல்லாததால், பல ஆண்டுகளாக ஒரே வீட்டில் இரண்டு, மூன்று குடும்பங்களாக குடியிருந்து வருகின்றனர். தினசரி கூலி வேலைக்கு சென்று பிழைப்பை நடத்தி வரும் இவர்களால் சொந்த இடத்தை வாங்கி வீடு கட்ட முடியவில்லை. இதனால் இங்குள்ள பட்டியல் இன மக்களுக்கு பல வருடமாக தங்களுக்கு குடியிருப்பதற்கு அரசு சார்பில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் மனு வழங்கியுள்ளனர். வந்த நிலையில் வீட்டுமனை பட்டா வழங்குவதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மஞ்சநாயக்கனஅள்ளி ஊராட்சியிலேயே ஐந்தாவது மைல் என்ற இடத்தில் அரசுக்கு சொந்தமான பொறம்போக்கு 9 ஏக்கர் நிலப்பரப்பில் ஒதுக்கப்பட்டுள்ளனர். ஆனால் பல ஆண்டுகள் ஆகியும் இந்த பகுதியில் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்து வந்துள்ளது. தொடர்ந்து இந்த கிராம மக்கள் வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்து வந்த நிலையில் தற்பொழுது பட்டா கொடுப்பதாக அதற்கான பணிகள் நடைபெறுவதாக உறுதி அளித்துள்ளனர்.
ஆனால், இந்த இடத்தில் மூன்று கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்காமல் தற்பொழுது வேறு சிலருக்கு பட்டா வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சடைந்த கிராம மக்கள் தங்களுக்கு வழங்கிவிட்டு மற்றவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்பொழுது கிராம மக்களை மாவட்ட ஆட்சியரை பார்க்க விடாமல் காவல்துறையினர் கூட்டம் முடிந்ததாக சொல்லி திருப்பி அனுப்பியுள்ளனர். மேலும் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்திக்க வேண்டும் என தெரிவித்த போது கீழே வைக்கப்பட்டுள்ள பெட்டியில் மனுவை போட்டுவிட்டு செல்லுங்கள் என கூறி உள்ளனர். ஆனால் மாவட்ட ஆட்சியரை பார்க்காமல் செல்ல மாட்டோம் என கிராம மக்கள் திரண்டு நின்றனர்.
அப்போது மாவட்ட ஆட்சியர் உணவு இடைவேளைக்காக அலுவலகத்தை விட்டு வெளியேறும்போது நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் கோரிக்கை குறித்து முற்றுகையிட்டனர். அப்பொழுது மாவட்ட ஆட்சித் தலைவர் பட்டா யாருக்கும் வழங்க ாமல் நிறுத்தி வைக்கப்படும் முதலில் மஞ்ச நாயக்கனளி ஊராட்சியைச் சார்ந்த கிராம மக்களுக்கு வழங்கிவிட்டு அதன் பிறகு மற்றவர்களுக்கு பட்டா வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
கல்வி
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion