மேலும் அறிய

Nurses Protest: முதல்வருக்கு தந்தி அனுப்பி போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள்

பொங்கல் பண்டிகையை செவிலியர்கள் மகிழ்ச்சியோடு கொண்டாட அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என செவிலியர்கள் கோரிக்கை.

தமிழகத்தில் கடந்த 2020 மார்ச் மாதம் கொரோனா நோய் தொற்று பரவத் தொடங்கியது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலமாகவும், அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பிலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர். மாதம் ரூ.14 ஆயிரம் ஊதியத்தில் பணியமர்த்தப்பட்ட அவர்களுக்கு, ஒவ்வொரு 6 மாத இடைவெளியில் பணி நீட்டிப்பு செய்யும் ஆணை வழங்கப்பட்டது. இந்நிலையில், எம்ஆர்பி மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,472 செவிலியர்களுக்கு கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி பணி நீட்டிப்பு ஒப்பந்தம் முடிந்த நிலையில், மீண்டும் நீட்டிப்பு செய்யப்படவில்லை. அவர்களை பணியில் இருந்து விடுவிப்பதற்கான அரசாணை டிசம்பர் 31 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த அரசாணையை எதிர்த்து தமிழகம் முழுவதும் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Nurses Protest: முதல்வருக்கு தந்தி அனுப்பி போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள்

அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு நிரந்தர பணி வழங்கிட வலியுறுத்தி கடந்த 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு வரை கலையாமல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இந்த நிலையில் நேற்று பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 200 மேற்பட்ட செவிலியர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சாலையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் தமிழக அரசை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களிடம் வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுவர்த்தினி பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏட்டப்படாததால் செவிலியர்கள் போராட்டம் தொடர்ந்தது. அன்று இரவு கைது செய்யப்பட்ட 150 க்கும் மேற்பட்ட செவிலியர்களை தனியார் மண்டபத்தில் இருந்து அதிகாலை 3 மணி அளவில் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை அவரவர் ஊர்களுக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். மேலும் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட 130 செவிலியர்கள் மீது சேலம் டவுன் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Nurses Protest: முதல்வருக்கு தந்தி அனுப்பி போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள்

இந்த நிலையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்கள் சேலம் மத்திய தபால் நிலையத்திலிருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தனித்தனியே தந்தி அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டினார். அதில், கொரோனா காலங்களில் தங்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றிய எங்களுக்கு அரசு கருணை காட்ட வேண்டும் என்றும், எம்ஆர்பி மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,472 செவிலியர்களுக்கு உடனடியாக பணியாளையை வழங்க வேண்டும் என குறிப்பிட்ட இருந்தது.

இதுகுறித்து பேசிய செவிலியர்கள், "இந்த ஆண்டு தொடங்கிய நாள் முதல் தங்களது வீட்டை மறந்து, குழந்தைகளை மறந்து போராடி வருகிறோம். உரிய தேர்வுகளை நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட எங்களை வீட்டிற்கு அனுப்புவது நியாயம் இல்லை. புத்தாண்டு எங்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. வருகின்ற பொங்கலுக்குள் எங்களுக்கான உரிய பணி ஆணையை அரசு வழங்கிட வேண்டும். பொங்கல் பண்டிகையை செவிலியர்கள் மகிழ்ச்சியோடு கொண்டாட அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என  கோரிக்கை வைத்தனர்.

தலைப்பு செய்திகள்

மேட்டூர் அருகே மெய்சிலிர்க்க வைக்கும் வரலாற்று பொக்கிஷம்! காவிரி கரையில் பூமிக்கு அடியில் 3,600 ஆண்டுகால மர்மம் உடைந்தது!
மேட்டூர் அருகே மெய்சிலிர்க்க வைக்கும் வரலாற்று பொக்கிஷம்! காவிரி கரையில் பூமிக்கு அடியில் 3,600 ஆண்டுகால மர்மம் உடைந்தது!
பாமகவில் மீண்டும் பூகம்பம்; ராமதாஸ் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறார்? - போட்டுடைத்த பாமக முன்னாள் எம்.எல்.ஏ
பாமகவில் மீண்டும் பூகம்பம்; ராமதாஸ் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறார்? - போட்டுடைத்த பாமக முன்னாள் எம்.எல்.ஏ
'இஎஸ்ஐ, பிஎஃப் கேட்கக்கூடாது’ ரூ.100 பத்திரத்தில் எழுதி வாங்கிக் கொள்ளும் கொத்தடிமை முறை - தூய்மை பணியாளர்களுக்கு நடக்கும் கொடுமை
'இஎஸ்ஐ, பிஎஃப் கேட்கக்கூடாது’ ரூ.100 பத்திரத்தில் எழுதி வாங்கிக் கொள்ளும் கொத்தடிமை முறை - தூய்மை பணியாளர்களுக்கு நடக்கும் கொடுமை
பெண்களுக்கு குட் நியூஸ் வருமா? தனியார் பஸ்களிலும் இலவச பயணம் வேணும்! வலுக்கும் புதிய கோரிக்கை
பெண்களுக்கு குட் நியூஸ் வருமா? தனியார் பஸ்களிலும் இலவச பயணம் வேணும்! வலுக்கும் புதிய கோரிக்கை

வீடியோ

G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் போட்ட ரகசிய திட்டம்.. பிளான் போட்டு சுக்கு நூறாக உடைத்த இபிஎஸ்.? ஆர்.பி.உதயகுமார் சொன்ன ஷாக் தகவல்
விஜய் போட்ட ரகசிய திட்டம்.. பிளான் போட்டு சுக்கு நூறாக உடைத்த இபிஎஸ்.? ஆர்.பி.உதயகுமார் சொன்ன ஷாக் தகவல்
TET 2026: ஆசிரியர் தகுதித் தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு- காண்பது எப்படி? ஆட்சேபிக்க கடைசி வாய்ப்பு!
TET 2026: ஆசிரியர் தகுதித் தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு- காண்பது எப்படி? ஆட்சேபிக்க கடைசி வாய்ப்பு!
Medical Admissions Reservation : மாணவர்களுக்கு குஷி.! மருத்துவ உள் இட ஒதுக்கீடு 10 % அதிகரிக்கப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மாணவர்களுக்கு குஷி.! மருத்துவ உள் இட ஒதுக்கீடு 10 % அதிகரிக்கப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
ரூ.80 ஆயிரம் தள்ளுபடி! குறையும் விலை- மாருதி பிரெஸ்ஸா புது மாடலுக்கு முன்னே குவியும் ஆஃபர்கள்
ரூ.80 ஆயிரம் தள்ளுபடி! குறையும் விலை- மாருதி பிரெஸ்ஸா புது மாடலுக்கு முன்னே குவியும் ஆஃபர்கள்
CM Vijay: லிஸ்ட் போட்ட யூட்யூபர்..! தூக்கி அடிக்கப்பட்ட IAS அதிகாரிகள் - திமுக அதிகாரிகளா? ஊழல் பேர்வழிகளா?
லிஸ்ட் போட்ட யூட்யூபர்..! தூக்கி அடிக்கப்பட்ட IAS அதிகாரிகள் - திமுக அதிகாரிகளா? ஊழல் பேர்வழிகளா?
சம்பவ இடத்திற்கு சென்ற கனிமொழி - ”சட்டசபையில பொய் சொல்லல, யாரையும் காப்பாற்ற துடிக்கல” TVK பதிலடி
சம்பவ இடத்திற்கு சென்ற கனிமொழி - ”சட்டசபையில பொய் சொல்லல, யாரையும் காப்பாற்ற துடிக்கல” TVK பதிலடி
Cheapest Strong Hybrid: நாட்டின் மலிவான, வலுவான ஹைப்ரிட் கார் - 28KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங் - EMI விவரங்கள்
நாட்டின் மலிவான, வலுவான ஹைப்ரிட் கார் - 28KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங் - EMI விவரங்கள்
CM Vijay: சொன்னதை செய்த விஜய்.. லஞ்சம் வாங்கிய தவெக நிர்வாகி அதிரடி கைது.. கட்சியில் இருந்து நீக்கம்!
CM Vijay: சொன்னதை செய்த விஜய்.. லஞ்சம் வாங்கிய தவெக நிர்வாகி அதிரடி கைது.. கட்சியில் இருந்து நீக்கம்!
Embed widget