மேலும் அறிய

இனிமேல் உறவினர்கள் காத்திருக்க தேவையில்ல.. மத்திய சிறை கைதிகளை பார்ப்பதற்கு புதிய நடைமுறை

சிறைக்கு வரும் கைதிகளின் உறவினர்கள் சிறைத்துறை அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முன் அனுமதி பெற்று எளிதில் பார்க்க முடியும்.

தமிழ்நாட்டில் சென்னை புழல், கோவை, மதுரை, சேலம், கடலூர், திருச்சி, பாளையங்கோட்டை, வேலூர் உள்பட 9 இடங்களில் மத்திய சிறைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை உறவினர்கள் வாரத்தில் 5 நாட்கள் பார்க்கலாம். 3 நாட்கள் விசாரணை கைதிகளையும், மற்ற 2 நாட்கள் தண்டனை மற்றும் குண்டர் தடுப்பு சட்ட கைதிகளையும் பார்க்க அனுமதிக்கப்பட்டு வருகிறது.

இனிமேல் உறவினர்கள் காத்திருக்க தேவையில்ல.. மத்திய சிறை கைதிகளை பார்ப்பதற்கு புதிய நடைமுறை

ஒரு கைதியை பார்க்க 3 பேருக்கு அனுமதி மட்டும் அளிக்கப்படுகிறது. பார்க்கவரும் உறவினர்கள் ஆதார் கார்டு அல்லது ரேஷன் கார்டு உள்ளிட்ட அடையாள அட்டைகளை கட்டாயம் கொண்டு வர வேண்டும். அதை வைத்து பார்க்க வருவோரின் புகைப்படங்களும் உடனடியாக எடுக்கப்பட்ட பிறகே கைதிகளை பார்க்க அனுமதி வழங்கப்படுகிறது.

சென்னை புழல் சிறைக்கு கைதிகளை பார்க்க தினமும் 600 பேர் வருகின்றனர். கோவை சிறையில் 300 பேரும், சேலம் சிறைக்கு 150 பேரும் வருகிறார்கள். அவர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் உருவாகிறது. சிலர் தங்களது குழந்தைகளை அழைத்தும் வருகின்றனர். இதனை தவிர்க்கும் வகையில், சென்னை புழல் 2 சிறையில் புதிய நடைமுறையான புக்கிங் வசதி அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்காக தொலைபேசி எண் ஒன்றை அறிவித்துள்ளனர். அந்த எண்ணுக்கு கைதியை எப்போது பார்க்க வருகிறோம், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர். எந்த வழக்கில் கைதாகியுள்ளார் என்ற விவரத்தை தெரிவிக்க வேண்டும். அதனை சிறை வார்டர்கள் பதிவு செய்து கொள்வார்கள். உடனடியாக எத்தனை மணிக்கு வரவேண்டும் என்ற விவரம் தெரிவிக்கப்படும். கைதியை சிறையில் சந்திக்க வரும் உறவினர்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள நேரத்திற்கு அரை மணி நேரம் முன்பாக சிறைக்கு வரவேண்டும். வந்த பிறகு அவர்களின் புகைப்படம் எடுக்கும் பணிகள் நடக்கும். இதன் மூலம் பல மணி நேரம் காத்துக்கிடப்பது தவிர்க்கப்படும். குறிப்பிட்ட நேரத்தில் வரும்போது, எந்தவித கூட்ட நெரிசலும் இல்லாமல் பார்த்து செல்கிறார்கள். இந்த முறை கைதிகளின் உறவினர்களுக்கு எளியதாக இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இனிமேல் உறவினர்கள் காத்திருக்க தேவையில்ல.. மத்திய சிறை கைதிகளை பார்ப்பதற்கு புதிய நடைமுறை

இந்த முறையை அனைத்து மத்திய சிறைகளிலும் கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்காக ஒவ்வொரு மத்திய சிறையில் இருந்தும் 3 வார்டன்கள் சென்னை புழல் 2 சிறைக்கு சென்றுள்ளனர். செயல்படுத்தப்படும் வழி முறைகளை தெரிந்த பிறகு அனைத்து மத்திய சிறையில் இந்த புக்கிங் முறை அமலுக்கு வரும்.

இது குறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில், "ஒவ்வொரு மத்திய சிறையில் இருக்கும் கைதிகளை பார்க்க உறவினர்கள் நீண்ட நேரம் காத்துக்கிடக்கிறார்கள். இவர்களில் சிலர் குழந்தைகளை எடுத்து வந்து காத்திருக்கும் சூழல் இருந்து வருகிறது. சில இடங்களில் கூட்ட நெரிசலும் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு போன்மூலம் புக்கிக் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பயனுள்ளதாக இருப்பதால் அனைத்து சிறைகளிலும் விரைவில் புக்கிங் வசதி கொண்டுவரப்படும்," என்று கூறினார்.

மேலும் சேலம் மத்திய சிறையில் கைதிகளை பார்க்க வரும் உறவினர்கள் முன்பதிவு செய்து பார்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் சில நாட்களுக்குள் இந்த முறை நடைமுறைக்கு வரும் என சிறைத்துறை அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”உள்ள விட மாட்டோம்” கோயில் நிர்வாகம் பகீர்! இளையராஜா- ஜீயர் சர்ச்சைவிடாப்பிடியாக இருந்த பாஜக! சிக்கலில் ஏக்நாத் ஷிண்டே! மீண்டும் உடையும் சிவசேனா”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
Aadhav Arjuna: தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
"முட்டாள்த்தனமா பேசாதீங்க.. இந்துக்களுக்கு அடி விழுது" பாஜகவை வறுத்தெடுத்த பிரியங்கா!
Embed widget