மேலும் அறிய

'தமிழகத்தில் பாஜக வெற்றி பெற முடியாது ' - நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார்

அண்ணாமலை தலைமையேற்ற பிறகு பாஜக தருமபுரி மாவட்டத்தில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்து, டெபாசிட் இழந்துள்ளது.

தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பாஜக தலைவர் அண்ணாமலை செய்த விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு பதில் அளித்தார். 
 
நான் ஒருவர் வீட்டில் சூடம் ஏற்றியது பற்றி பேசவில்லை. மதசார்பற்ற  நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்பது பேரறிஞர் அண்ணா சொல்லி இருக்கிறார். ஒரு அரசு என்பது அனைவருக்குமான அரசாங்கமாக இருக்க வேண்டும். நான் என் கொள்கை பிடிப்பில் வலுவாக இருந்து வருகிறேன். அண்ணாமலை கர்நாடகாவில் இருக்கும் பொழுது நான் ஒரு பெருமைக்குரிய கன்னடியன் என்று பேசிவிட்டு, தமிழ்நாட்டில் மாற்றி பேசுகிறார். நான் என்னுடைய கொள்கையில் பிடிப்போடு இருக்கிறேன். மதசார்பற்ற அரசு என்பது மதச்சார்பற்ற அரசாங்கமாக இருக்க வேண்டும். வீட்டில் சூடத்தை ஏற்றும் இடத்திற்கு நான் செல்லவில்லை. ஆனால் ரோட்டில் மதத்தை கொண்டு வரும்போது நான் எனது ஆட்சபனையை தெரிவிக்கிறேன்.
 
பெரியார் சாதித்தது என்னவென்றால், தமிழகத்தில் ஒரு சாதிக் கட்சித் தலைவர்கள் கூட, பெயருக்கு பின்னால் சாதியை குறிப்பிடுவதில்லை. இது மூன்று தலைமுறையாக தமிழகத்தில் இருந்து வருகிறது. இது மற்ற மாநிலங்களில் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் பெரியார் சாதித்துக் காட்டியுள்ளார் என்பதை நாடாளுமன்றத்தில் கூட பேசி வருகிறேன். என் தாத்தாவின் பெயருக்கு பின்னால் சாதி அடையாளம் இருந்தது. ஆனால் என் அப்பா, நான்,  அடுத்தது எனது மகன் எங்களது பெயர்களுக்கு பின்னாடி சாதி அடையாளங்கள் இல்லை. இதைத்தான் மற்ற மாநிலங்களிலும் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறோம். அதேபோல் மற்ற தலைவர்களை சொல்லும்போது கூட சாதிப் பெயர்களை குறிப்பிடாமல் தான் சொல்கிறோம். மனிதர்களை மனிதர்களாக பார்ப்போம். அவர்களது மனித தன்மையை மட்டும் பார்ப்போம் என வலியுறுத்தி வருகிறோம்.
பாஜக தருமபுரியில் 14 வார்டுகளில் போட்டியிட்டு டெபாசிட் இழந்துள்ளார்கள். ஒரு கட்சியின் வளர்ச்சி என்பது அந்த கட்சி தேர்தலில் பெற்ற வெற்றியை வைத்து தான் நிர்ணயிக்கும். அண்ணாமலை தலைமையேற்ற பிறகு பாஜக தருமபுரி மாவட்டத்தில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்து, டெபாசிட் இழந்துள்ளது.
 
பாஜகவிற்கு நான் ஒரு சேலஞ்சாக சொல்கிறேன்.  பிரதமர் வேட்பாளராக உள்ள நரேந்திரா தமிழ்நாட்டில் போட்டியிடுவதாக செய்தி வழியாக தெரிந்து கொண்டேன். இதை வரவேற்கிறேன். பாஜக தலைவர் அண்ணாமலையை தருமபுரியில் வந்து போட்டியிடட்டும்.  திமுக வேட்பாளர் யாராக இருந்தாலும், பாஜகவை எளிமையாக தோற்கடிப்போம். மேலும் ஒரு சேலஞ்சாக சொல்கிறேன். பிரதமர் வேட்பாளர் நரேந்திரா தமிழகத்தில் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் சரி, தருமபுரி தொகுதியில் போட்டியிட்டாலும் சரி,  அவரை திமுக தோற்கடிக்கும் என்பதை சேலஞ்சாக சொல்கிறேன் எனத் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
"ராகுல் கிட்ட மேகதாது பத்தி ஏன் பேசல?" - விஜய்யைக் கேள்வி கேட்டு வெளுத்த இயக்குநர் கெளதமன்
எல்லாமே தளபதி மேஜிக்தான்! சேலத்து வண்டி வேடிக்கையில் கெத்து காட்டிய அமெரிக்க விஜய் ரசிகர்!
எல்லாமே தளபதி மேஜிக்தான்! சேலத்து வண்டி வேடிக்கையில் கெத்து காட்டிய அமெரிக்க விஜய் ரசிகர்!
சரசரவென உயரும் மேட்டூர் அணை? ஒரே நாளில் நீர்வரத்து அதிரடி உயர்வு... லேட்டஸ்ட் நிலவரம் இதோ!
சரசரவென உயரும் மேட்டூர் அணை? ஒரே நாளில் நீர்வரத்து அதிரடி உயர்வு... லேட்டஸ்ட் நிலவரம் இதோ!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget