மேலும் அறிய

பெங்களூருவின் கழிவுகள் காவிரியில் கலப்பதை தடுக்க வேண்டும் - மத்திய அமைச்சரிடம் மேட்டூர் எம்எல்ஏ கோரிக்கை

பெங்களூருவின் கழிவுகள் காவிரியில் கலப்பதால் நீர் வளம் பாதிக்கிறது. அந்த கழிவுகள் காவிரியில் கலப்பதை நிரந்தரமாக தடுக்க வேண்டும்

இரண்டு நாள் சுற்றுப்பயறுமாக சேலம் வருகை தந்த மத்திய இணை அமைச்சர் பிஸ்வேஸ்வர் டிடு கடந்த 11 ஆம் தேதி வந்தார். அவருக்கு சேலம் மாநகர எல்லையில் தமிழக பாஜக சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஏற்காடு சென்று அங்குள்ள கிராம மக்களிடம் அவர்கள் பிரச்சனை குறைத்துக் கொண்டிருந்தார். பின்னர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நீர்வளத்துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த கண்காட்சியைத் திறந்து வைத்து, ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டார். அதன்பின் இரண்டாம் நாளான நேற்று ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்டுள்ளது சேலம் பழைய பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அங்கிருந்து மத்திய மலைவாழ் மக்கள் மேம்பாடு மற்றும் நீர்வளத்துறை இணை அமைச்சர் பிஸ்வேஸ்வர் டிடு மேட்டூர் சென்றார். மேட்டூர் நீர்த் தேக்க பகுதியான திப்பம்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள உபரிநீர் நீரேற்று திட்ட பணிகளை பார்வையிட்டார். பணிகளின் நிலவரம் பயனடையும் மக்கள் எண்ணிக்கை குறித்தும் கேட்டறிந்தார்.

பெங்களூருவின் கழிவுகள் காவிரியில் கலப்பதை தடுக்க வேண்டும் - மத்திய அமைச்சரிடம்  மேட்டூர் எம்எல்ஏ கோரிக்கை

பின்னர் நிரம்பிய நிலையில் உள்ள மேட்டூர் அணையை பார்வையிட்டார். அணையின் வலது கரை இடது கரை ஆய்வு சுரங்கம் ஆகியவற்றையும் பார்வையிட்டார். மேட்டூர் அணை நீர்வரத்து நீர் திறப்பு நீர் இருப்பு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது மத்திய இணை அமைச்சரிடம் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் மேட்டூர் அணை அமைந்துள்ள மேட்டூர் சட்டமன்றத் தொகுதி பாசனத்திற்கு காவிரி நீரை வழங்க வேண்டும் என்றும் ஆண்டுக்கு ஒரு டி எம் சி தண்ணீரை வழங்கினால் இப்பகுதி வளம் பெறும் என்றும் தெரிவித்தார். இதுகுறித்த விவரங்களை ஆய்வு செய்து அறிக்கை தருமாறு பணித்துறை அதிகாரிகளுக்கு மத்திய அமைச்சர் அறிவுறுத்தினார். 

பெங்களூருவின் கழிவுகள் காவிரியில் கலப்பதை தடுக்க வேண்டும் - மத்திய அமைச்சரிடம்  மேட்டூர் எம்எல்ஏ கோரிக்கை

மேலும் மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளி கோவை பெங்களூர் மட்டுமே உள்ளது சேலம் மாவட்டத்திலும் அமைத்திட வேண்டும் என்றும், மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் மேம்பாட்டு திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்கி அவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்க வேண்டும் என்றும், மேட்டூரில் இருந்து சேலம் வழியாக சென்னை எக்மோர் செல்லும் பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்றும் கூறினார். பெங்களூரின் கழிவுகள் காவிரியில் கலப்பதால் நீர் வலம் பாதிக்கிறது அந்த கழிவுகள் காவிரியில் கலப்பதை நிரந்தரமாக தடுக்க வேண்டும், மேட்டூர் அணையில் இருந்து தரங்கம்பாடி வரை காவிரியில் இரு கறைகளையும் பலப்படுத்தி கழிவுகளை கலப்பதை தடுத்து தூய்மையான காவிரியை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சரிடம் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் கோரிக்கை விடுத்தார். பின்னர் சேலத்தில் இருந்து கோவை விமான நிலையம் சென்றடைந்தார்.

அப்போது, பா.ஜ.க மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம், சேலம் மாவட்ட தலைவர் சுதீர் முருகன், மாவட்டத் துணைத் தலைவர் பிரபாகரன், மாநில செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இந்நிகழ்ச்சியில் மேட்டூர் சார் ஆட்சியர் வீர் பிரதாப்சிங், நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் அன்பழகன், நீர் வளத்துறை மேட்டூர் செயற்பொறியாளர் சிவ குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
"அச்சத்தில் மக்கள்" புதிய பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்.. ரயில்வே அமைச்சருக்கு பறந்த கடிகம்!
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்?  -  அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்? - அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Father Crying : ’’FOOTBOARD அடிக்காதீங்க பா'’காலில் விழுந்து கதறிய தந்தை தேம்பி அழுத மாணவர்கள்BJP Councillor : ’’உதயநிதி பிறந்தநாளுக்கா?’’ SWEET கொடுத்த பாஜக கவுன்சிலர்!திமுக கவுன்சிலர் THUGLIFEKarur Drunken Girl | ”மூடிட்டு போங்க டி...” போலீஸை மிரட்டிய பெண் மதுபோதையில் ATROCITY! | MK Stalinவிஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
"அச்சத்தில் மக்கள்" புதிய பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்.. ரயில்வே அமைச்சருக்கு பறந்த கடிகம்!
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்?  -  அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்? - அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?
Fengal Cyclone Update: ’’வரும்.. ஆனா வராது..’’ ஃபெங்கல் புயலாக கரையை கடக்காது; என்ன காரணம் தெரியுமா?
Fengal Cyclone Update: ’’வரும்.. ஆனா வராது..’’ ஃபெங்கல் புயலாக கரையை கடக்காது; என்ன காரணம் தெரியுமா?
Embed widget