மேலும் அறிய

Mettur Dam: தொடர் மழை... 100 அடியை கடந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம்

மேட்டூர் அணையின் நீர்வரத்து 17,586 கன அடியில் இருந்து 29,850 கன அடியாக அதிகரிப்பு.

கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி, காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கர்நாடகா மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 18,094 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 17,586 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 29,850 கன அடியாக அதிகரித்துள்ளது.

Mettur Dam: தொடர் மழை... 100 அடியை கடந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம்

நீர்மட்டம்:

அணையின் நீர் மட்டம் 100.01 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 64.85 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 91 வது ஆண்டாக கடந்த ஜூலை 28 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக பாசன வசதி பெறும். மேட்டூர் அணையின் நீர் திறப்பினால் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் குருவை, சம்பா சாகுபடி செய்துள்ள டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 7,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் 16 கண் மதகுகள் மூலமாக 2,500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வந்த நீர் தற்போது நிறுத்தப்பட்டது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 600 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 8,100 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

Mettur Dam: தொடர் மழை... 100 அடியை கடந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம்

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 124.8 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 49.45 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 65 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 19.51 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 1,000 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்கக் கடலில் கலக்கிறது. 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Actor Rajesh Passed Away: ”அந்த 7 நாட்கள்” நடிகர் ராஜேஷ் காலமானர் - மரணத்திற்கான காரணம் என்ன?
Actor Rajesh Passed Away: ”அந்த 7 நாட்கள்” நடிகர் ராஜேஷ் காலமானர் - மரணத்திற்கான காரணம் என்ன?
இனி அலைய வேண்டாம்... அரசு சேவைகளை இனி ஈசியாக பெறலாம்.. இன்று தொடங்கும் எளிமை ஆளுமை திட்டம்
இனி அலைய வேண்டாம்... அரசு சேவைகளை இனி ஈசியாக பெறலாம்.. இன்று தொடங்கும் எளிமை ஆளுமை திட்டம்
IPL 2025 Playoff RCB: எலிமினேட்டர் இல்லை, கண்டம் ஓவர்? கோலியின் 18 வருட காத்திருப்பு, குவாலிஃபையரில் அசத்துமா ஆர்சிபி?
IPL 2025 Playoff RCB: எலிமினேட்டர் இல்லை, கண்டம் ஓவர்? கோலியின் 18 வருட காத்திருப்பு, குவாலிஃபையரில் அசத்துமா ஆர்சிபி?
Ooty-Gudalur Road: நிலச்சரிவு அபாயம்.. ஊட்டி-கூடலூர் சாலையில் போக்குவரத்து மாற்றம்
Ooty-Gudalur Road: நிலச்சரிவு அபாயம்.. ஊட்டி-கூடலூர் சாலையில் போக்குவரத்து மாற்றம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவுஅமைச்சரை தடுத்து நிறுத்திய நபர் அதிர்ந்த கோவி. செழியன் மயிலாடுதுறையில் பரபரப்பு | Govi Chezhiaanமாமன் மச்சான் தகராறு மச்சானை கொன்ற மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிய CCTV காட்சி | Jolarpettai Murder | Family Fightநெருங்கும் பீகார் தேர்தல் பாஜகவுக்கு சவால் விடும் INDIA 4 மாநிலங்களில் இடைத்தேர்தல் | Bihar Election

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Rajesh Passed Away: ”அந்த 7 நாட்கள்” நடிகர் ராஜேஷ் காலமானர் - மரணத்திற்கான காரணம் என்ன?
Actor Rajesh Passed Away: ”அந்த 7 நாட்கள்” நடிகர் ராஜேஷ் காலமானர் - மரணத்திற்கான காரணம் என்ன?
இனி அலைய வேண்டாம்... அரசு சேவைகளை இனி ஈசியாக பெறலாம்.. இன்று தொடங்கும் எளிமை ஆளுமை திட்டம்
இனி அலைய வேண்டாம்... அரசு சேவைகளை இனி ஈசியாக பெறலாம்.. இன்று தொடங்கும் எளிமை ஆளுமை திட்டம்
IPL 2025 Playoff RCB: எலிமினேட்டர் இல்லை, கண்டம் ஓவர்? கோலியின் 18 வருட காத்திருப்பு, குவாலிஃபையரில் அசத்துமா ஆர்சிபி?
IPL 2025 Playoff RCB: எலிமினேட்டர் இல்லை, கண்டம் ஓவர்? கோலியின் 18 வருட காத்திருப்பு, குவாலிஃபையரில் அசத்துமா ஆர்சிபி?
Ooty-Gudalur Road: நிலச்சரிவு அபாயம்.. ஊட்டி-கூடலூர் சாலையில் போக்குவரத்து மாற்றம்
Ooty-Gudalur Road: நிலச்சரிவு அபாயம்.. ஊட்டி-கூடலூர் சாலையில் போக்குவரத்து மாற்றம்
PBKS Vs RCB: பஞ்சாபிற்கு இரண்டாவது? பெங்களூருவிற்கு நான்காவது? இன்று ஃபைனலுக்கு முந்தப்போவது யார்?
PBKS Vs RCB: பஞ்சாபிற்கு இரண்டாவது? பெங்களூருவிற்கு நான்காவது? இன்று ஃபைனலுக்கு முந்தப்போவது யார்?
Gautam Gambhir:
Gautam Gambhir: "நான் காரணமில்லை!” டெஸ்ட் அணியில் இடம்பெறாத ஸ்ரேயாஸ் .. அஜித் அகர்கரை மறைமுகமாக கைகாட்டிய கம்பீர்
ஆபத்தில் மகன், நெஞ்சை தொற்றிய பயம், திடீரென வந்த இருட்டு - கணவனை காப்பாற்றாத மனைவியின் பக்தி
ஆபத்தில் மகன், நெஞ்சை தொற்றிய பயம், திடீரென வந்த இருட்டு - கணவனை காப்பாற்றாத மனைவியின் பக்தி
TN weather Reoprt:  5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், சென்னையில் கனமழை? வானிலை மையம் எச்சரிக்கை
TN weather Reoprt: 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், சென்னையில் கனமழை? வானிலை மையம் எச்சரிக்கை
Embed widget