மேலும் அறிய

மேட்டூர் அணையின் நீர்வரத்து திடீர் சரிவு... வினாடிக்கு 318 கன அடியாக குறைந்தது

மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பருவமழை காலம் முடிவடைந்தது, அதன் காரணமாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்த வருகிறது. தமிழ்நாடு முழுவதும் குருவை சம்பா சாகுபடி அறுவடைக்கு தயாராக இருப்பதால், டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 317 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 329 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 318 கன அடியாக குறைந்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்வரத்து திடீர் சரிவு... வினாடிக்கு 318 கன அடியாக குறைந்தது

நீர்மட்டம்:

அணையின் நீர்மட்டம் 110.06 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 78.49 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 91வது ஆண்டாக கடந்த ஜூலை 28 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணை வரலாற்றில் ஒரே ஆண்டில் மூன்று முறை அணை நிரம்பியது இதுவே முதல் முறையாகும்.

இதன் மூலம் சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக பாசன வசதி பெற்றது. மேட்டூர் அணையின் நீர் திறப்பினால் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் நடைபெற்றது. இதனால் குருவை, சம்பா சாகுபடி செய்துள்ள டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் 16 கண் மதகுகள் மூலமாக 2,500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வந்த நீர் தற்போது நிறுத்தப்பட்டது.

கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்ட வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையின் நீர்வரத்து திடீர் சரிவு... வினாடிக்கு 318 கன அடியாக குறைந்தது

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 92.97 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 17.78 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 167 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 4,338 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 50.38 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 11.38 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 151 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 2,150 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்கக் கடலில் கலக்கிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
5364
Active
4724
Recovered
55
Deaths
Last Updated: Fri 6 June, 2025 at 11:10 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Thanjavur Toll Gate: தமிழ்நாட்டில் இருக்குறதே தாங்கலை..! இப்ப புதுசா ஒரு டோல்கேட்டா, ட்ரிப்புக்கு ரூ.105 கட்டணமாம்..
Thanjavur Toll Gate: தமிழ்நாட்டில் இருக்குறதே தாங்கலை..! இப்ப புதுசா ஒரு டோல்கேட்டா, ட்ரிப்புக்கு ரூ.105 கட்டணமாம்..
45kg Gold in Ramar Temple: அடேயப்பா.! அயோத்தி ராமர் கோயில்ல ரூ.50 கோடிக்கு தங்கம் இருக்கு; என்ன செஞ்சிருக்காங்க தெரியுமா.?
அடேயப்பா.! அயோத்தி ராமர் கோயில்ல ரூ.50 கோடிக்கு தங்கம் இருக்கு; என்ன செஞ்சிருக்காங்க தெரியுமா.?
Russia Hits Ukraine: ரஷ்யாவின் ட்ரோன் தாண்டவம்; சின்னாபின்னமாகும் உக்ரைன் - தாக்குதலுக்கு உள்ளான தலைநகர்
ரஷ்யாவின் ட்ரோன் தாண்டவம்; சின்னாபின்னமாகும் உக்ரைன் - தாக்குதலுக்கு உள்ளான தலைநகர்
Modi Invited to G7: ஜி7 உச்சிமாநாட்டிற்கு அழைக்கப்பட்ட மோடி - தவிடுபொடியான எதிர்க்கட்சிகளின் ஏளனம்
ஜி7 உச்சிமாநாட்டிற்கு அழைக்கப்பட்ட மோடி - தவிடுபொடியான எதிர்க்கட்சிகளின் ஏளனம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vaniyambadi | ”வேலைக்கு கூப்டா வரமாட்டியா ***” வார்டு உறுப்பினரின் கணவர் ஆபாச பேச்சுVelmurugan Controversy |Annamalai | நயினார் vs அண்ணாமலை ஒரே ஒரு வீடியோ ஆட்டத்தை முடித்த அண்ணாமலை!MK Alagiri vs Moorthy : ’’தம்பி எனக்காக இதை செய் !’’ஸ்டாலினிடம் கேட்ட அழகிரி கலக்கத்தில் மூர்த்தி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thanjavur Toll Gate: தமிழ்நாட்டில் இருக்குறதே தாங்கலை..! இப்ப புதுசா ஒரு டோல்கேட்டா, ட்ரிப்புக்கு ரூ.105 கட்டணமாம்..
Thanjavur Toll Gate: தமிழ்நாட்டில் இருக்குறதே தாங்கலை..! இப்ப புதுசா ஒரு டோல்கேட்டா, ட்ரிப்புக்கு ரூ.105 கட்டணமாம்..
45kg Gold in Ramar Temple: அடேயப்பா.! அயோத்தி ராமர் கோயில்ல ரூ.50 கோடிக்கு தங்கம் இருக்கு; என்ன செஞ்சிருக்காங்க தெரியுமா.?
அடேயப்பா.! அயோத்தி ராமர் கோயில்ல ரூ.50 கோடிக்கு தங்கம் இருக்கு; என்ன செஞ்சிருக்காங்க தெரியுமா.?
Russia Hits Ukraine: ரஷ்யாவின் ட்ரோன் தாண்டவம்; சின்னாபின்னமாகும் உக்ரைன் - தாக்குதலுக்கு உள்ளான தலைநகர்
ரஷ்யாவின் ட்ரோன் தாண்டவம்; சின்னாபின்னமாகும் உக்ரைன் - தாக்குதலுக்கு உள்ளான தலைநகர்
Modi Invited to G7: ஜி7 உச்சிமாநாட்டிற்கு அழைக்கப்பட்ட மோடி - தவிடுபொடியான எதிர்க்கட்சிகளின் ஏளனம்
ஜி7 உச்சிமாநாட்டிற்கு அழைக்கப்பட்ட மோடி - தவிடுபொடியான எதிர்க்கட்சிகளின் ஏளனம்
Gold Rate Reduced: பரவால்லையே.! தங்கம் ஒரே நாள்ல இவ்ளோ குறைஞ்சுருக்கா.? இன்றைய விலை என்னன்னு பாருங்க
பரவால்லையே.! தங்கம் ஒரே நாள்ல இவ்ளோ குறைஞ்சுருக்கா.? இன்றைய விலை என்னன்னு பாருங்க
Govt Employees Salary: ஆத்தி.. 50,000 அரசு ஊழியர்களுக்கு 6 மாதங்கள் சம்பளம் இல்லை - போலி ஊழியர்கள், என்ன நடக்குது?
Govt Employees Salary: ஆத்தி.. 50,000 அரசு ஊழியர்களுக்கு 6 மாதங்கள் சம்பளம் இல்லை - போலி ஊழியர்கள், என்ன நடக்குது?
RBI Gold Loan: பிரச்னை ஓவர், தாராளமான நகைக்கடன், 85% வரை அள்ளிக் கொடுக்க ஆர்பிஐ அனுமதி - பொதுமக்கள் ஹாப்பி
RBI Gold Loan: பிரச்னை ஓவர், தாராளமான நகைக்கடன், 85% வரை அள்ளிக் கொடுக்க ஆர்பிஐ அனுமதி - பொதுமக்கள் ஹாப்பி
Kia First Affordable EV: மலிவு விலை எஸ்யுவி சந்தையை புரட்டி போட தயாரான கியா- லெவல் 2 ADAS, அட்டகாசமான புது கார்
Kia First Affordable EV: மலிவு விலை எஸ்யுவி சந்தையை புரட்டி போட தயாரான கியா- லெவல் 2 ADAS, அட்டகாசமான புது கார்
Embed widget