மேலும் அறிய

Mettur Dam: மேட்டூர் அணையின் நீர்வரத்து 33,148 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 3,100 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி, காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கர்நாடகா மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 29,307 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 31,575 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 33,148 கன அடியாக அதிகரித்துள்ளது.

Mettur Dam: மேட்டூர் அணையின் நீர்வரத்து 33,148 கன அடியாக அதிகரிப்பு

நீர்மட்டம்:

அணையின் நீர் மட்டம் 104.76 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 71.14 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 91 வது ஆண்டாக கடந்த ஜூலை 28 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக பாசன வசதி பெறும். மேட்டூர் அணையின் நீர் திறப்பினால் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் குருவை, சம்பா சாகுபடி செய்துள்ள டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 2,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் 16 கண் மதகுகள் மூலமாக 2,500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வந்த நீர் தற்போது நிறுத்தப்பட்டது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 600 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 3,100 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

Mettur Dam: மேட்டூர் அணையின் நீர்வரத்து 33,148 கன அடியாக அதிகரிப்பு

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 124.8 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 49.45 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 65 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 19.51 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 1,000 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்கக் கடலில் கலக்கிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சொத்துல ஒரு பங்குகூட எனக்குத் தரல" ஜெகன்மோகனுக்கு எதிராக ஷர்மிளா பகிரங்க குற்றச்சாட்டு!
மதுரையில் கனமழை..  பல இடங்களில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்த மழைநீர்
மதுரையில் கனமழை.. பல இடங்களில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்த மழைநீர்
Breaking News LIVE 26th OCT 2024: வெள்ளக்காடாய் காட்சி தரும் மதுரை! தென்மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு !
Breaking News LIVE 26th OCT 2024: வெள்ளக்காடாய் காட்சி தரும் மதுரை! தென்மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு !
India Squad BGT: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் - ரோகித் தலைமயிலான இந்திய அணி அறிவிப்பு
India Squad BGT: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் - ரோகித் தலைமயிலான இந்திய அணி அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Woman Attacked Telugu Actor| ”திருட்டு பயலே உன்ன விடமாட்ட”வில்லன் நடிகருக்கு அடி!ஆந்திர பெண் ஆவேசம்!Vijay Maanadu : 100 அடி உயரத்தில் கொடி உச்சியில் வைக்கப்பட்ட கலசம்கெத்து காட்டும் விஜய்Udhayanidhi : தமிழ்த்தாய் வாழ்த்தை தவறாக பாடிய அரசு ஊழியர்கள்! உதயநிதி நிகழ்ச்சியில் சர்ச்சை!TVK Vijay Letter | ’’2026-ல் வெற்றி நிச்சயம்த.வெ.க மாநாடுக்கு தயாரா?’’தொண்டர்களுக்கு விஜய் கடிதம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சொத்துல ஒரு பங்குகூட எனக்குத் தரல" ஜெகன்மோகனுக்கு எதிராக ஷர்மிளா பகிரங்க குற்றச்சாட்டு!
மதுரையில் கனமழை..  பல இடங்களில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்த மழைநீர்
மதுரையில் கனமழை.. பல இடங்களில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்த மழைநீர்
Breaking News LIVE 26th OCT 2024: வெள்ளக்காடாய் காட்சி தரும் மதுரை! தென்மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு !
Breaking News LIVE 26th OCT 2024: வெள்ளக்காடாய் காட்சி தரும் மதுரை! தென்மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு !
India Squad BGT: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் - ரோகித் தலைமயிலான இந்திய அணி அறிவிப்பு
India Squad BGT: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் - ரோகித் தலைமயிலான இந்திய அணி அறிவிப்பு
TN Rain Alert: மதுரையில் கொட்டித் தீர்த்த கனமழை, பள்ளிகளுக்கு விடுமுறை, 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை நிலவரம்
TN Rain Alert: மதுரையில் கொட்டித் தீர்த்த கனமழை, பள்ளிகளுக்கு விடுமுறை, 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை நிலவரம்
Kaithi 2:
Kaithi 2: "டில்லி சீக்கிரமா வரப்போறான்" விரைவில் கைதி 2 ஆரம்பம்! லோகேஷ் கனகராஜ் தந்த அப்டேட்!
சிக்கும் பாஜகவின் நயினார் நாகேந்திரன்? ரூ.4 கோடி விவகாரம், ”தேர்தலுக்காக கைமாறிய 20 கிலோ தங்கம்”
சிக்கும் பாஜகவின் நயினார் நாகேந்திரன்? ரூ.4 கோடி விவகாரம், ”தேர்தலுக்காக கைமாறிய 20 கிலோ தங்கம்”
Israel Attacks Iran: ஈரான் மீதான பதில் தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் - ராணுவ நிலைகள் குறிவைப்பு
Israel Attacks Iran: ஈரான் மீதான பதில் தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் - ராணுவ நிலைகள் குறிவைப்பு
Embed widget