மேலும் அறிய

Mettur Dam: திடீர் சரிவு... மேட்டூர் அணையின் நீர்வரத்து எவ்வளவு குறைந்தது

மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 1,300 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பருவமழை தொடங்கி உள்ளதால், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் மழை பெய்து வருவதால் டெல்டா பாசத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 32,240 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 25,098 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 14,404 கன அடியாக குறைந்துள்ளது.

Mettur Dam: திடீர் சரிவு... மேட்டூர் அணையின் நீர்வரத்து எவ்வளவு குறைந்தது

நீர்மட்டம்:

அணையின் நீர்மட்டம் 115.32 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 86.20 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 91 வது ஆண்டாக கடந்த ஜூலை 28 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக பாசன வசதி பெறும். மேட்டூர் அணையின் நீர் திறப்பினால் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் குருவை, சம்பா சாகுபடி செய்துள்ள டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் 16 கண் மதகுகள் மூலமாக 2,500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வந்த நீர் தற்போது நிறுத்தப்பட்டது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 1,300 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

Mettur Dam: திடீர் சரிவு... மேட்டூர் அணையின் நீர்வரத்து எவ்வளவு குறைந்தது

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 92.97 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 17.78 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 167 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 4,338 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 50.38 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 11.38 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 151 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 2,150 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்கக் கடலில் கலக்கிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7131
Active
10976
Recovered
78
Deaths
Last Updated: Fri 13 June, 2025 at 12:16 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

NEET UG 2025 Topper: நீட் தேர்வில் முதலிடம் பிடித்த மகேஷ் குமார்; முதல் 100 இடங்களில் தமிழ்நாட்டில் இத்தனை பேர்தானா?
NEET UG 2025 Topper: நீட் தேர்வில் முதலிடம் பிடித்த மகேஷ் குமார்; முதல் 100 இடங்களில் தமிழ்நாட்டில் இத்தனை பேர்தானா?
TN weather Reoprt: இன்றும் விடாத கனமழை - 2 நாட்களுக்கு ரெட் அலெர்ட், 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - வானிலை அறிக்கை
TN weather Reoprt: இன்றும் விடாத கனமழை - 2 நாட்களுக்கு ரெட் அலெர்ட், 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - வானிலை அறிக்கை
NEET UG Result 2025: வெளியான நீட் தேர்வு முடிவுகள்; 4 வழிகளில் காணலாம்!- எப்படி?
NEET UG Result 2025: வெளியான நீட் தேர்வு முடிவுகள்; 4 வழிகளில் காணலாம்!- எப்படி?
”காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லை.. வெட்கமாக இல்லையா?” திமுக அரசை பந்தாடிய ஈபிஎஸ்
”காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லை.. வெட்கமாக இல்லையா?” திமுக அரசை பந்தாடிய ஈபிஎஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anirudh Kavya Maran Marriage : அனிருத்-க்கு திருமணம்?காவ்யா மாறனுடன் காதல்! SECRET உடைத்த பிரபலம்”நமக்கு எதுக்கு அதிக சீட்” வார்னிங் கொடுத்த அமித்ஷா! EPS-ஐ வைத்து மோடியின் ப்ளான்பூட்டியிருந்த வீட்டில் தீ விபத்து சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு பகீர் கிளப்பும் காட்சி Coimbatore Cylinder Blast

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET UG 2025 Topper: நீட் தேர்வில் முதலிடம் பிடித்த மகேஷ் குமார்; முதல் 100 இடங்களில் தமிழ்நாட்டில் இத்தனை பேர்தானா?
NEET UG 2025 Topper: நீட் தேர்வில் முதலிடம் பிடித்த மகேஷ் குமார்; முதல் 100 இடங்களில் தமிழ்நாட்டில் இத்தனை பேர்தானா?
TN weather Reoprt: இன்றும் விடாத கனமழை - 2 நாட்களுக்கு ரெட் அலெர்ட், 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - வானிலை அறிக்கை
TN weather Reoprt: இன்றும் விடாத கனமழை - 2 நாட்களுக்கு ரெட் அலெர்ட், 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - வானிலை அறிக்கை
NEET UG Result 2025: வெளியான நீட் தேர்வு முடிவுகள்; 4 வழிகளில் காணலாம்!- எப்படி?
NEET UG Result 2025: வெளியான நீட் தேர்வு முடிவுகள்; 4 வழிகளில் காணலாம்!- எப்படி?
”காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லை.. வெட்கமாக இல்லையா?” திமுக அரசை பந்தாடிய ஈபிஎஸ்
”காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லை.. வெட்கமாக இல்லையா?” திமுக அரசை பந்தாடிய ஈபிஎஸ்
Anbumani Ramadoss: அன்புமணிக்கு ரூ.100 கிடைக்குமா? ராமதாஸிற்கு சர்ப்ரைஸ் கொடுப்பாரா? பனையூரில் ட்விஸ்ட்
Anbumani Ramadoss: அன்புமணிக்கு ரூ.100 கிடைக்குமா? ராமதாஸிற்கு சர்ப்ரைஸ் கொடுப்பாரா? பனையூரில் ட்விஸ்ட்
Bike Taxi Ban: கர்நாடகாவில் பைக் டாக்சி சேவைக்கு தடை: ஓலா, ஊபர் ஓட்டுநர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு! நீதிமன்றம் அதிரடி
Bike Taxi Ban: கர்நாடகாவில் பைக் டாக்சி சேவைக்கு தடை: ஓலா, ஊபர் ஓட்டுநர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு! நீதிமன்றம் அதிரடி
Iran Israel Strikes: ”போரை தொடங்கிய இஸ்ரேல்” விடுவதாய் இல்லை என குண்டு மழை பொழிந்த ஈரான் - வீடியோ வைரல்
Iran Israel Strikes: ”போரை தொடங்கிய இஸ்ரேல்” விடுவதாய் இல்லை என குண்டு மழை பொழிந்த ஈரான் - வீடியோ வைரல்
Budget Cars: டாக்ஸிலாம் வேண்டாம்.. ரூ.5 லட்சத்துகே சொந்த கார் - 6 ஏர் பேக்குகள், லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ், 7 கலர்
Budget Cars: டாக்ஸிலாம் வேண்டாம்.. ரூ.5 லட்சத்துகே சொந்த கார் - 6 ஏர் பேக்குகள், லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ், 7 கலர்
Embed widget