மேலும் அறிய

மேட்டூர் அணையின் நீர்வரத்து சற்று குறைந்தது... வினாடிக்கு 817 கன அடியாக சரிவு

மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பருவமழை காலம் முடிவடைந்தது, அதன் காரணமாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்த வருகிறது. தமிழ்நாடு முழுவதும் குருவை சம்பா சாகுபடி அறுவடைக்கு தயாராக இருப்பதால், டெல்டா பாசனத்திற்கு நீர்வரத்துத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 284 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 829 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 817 கன அடியாக குறைந்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்வரத்து சற்று குறைந்தது... வினாடிக்கு 817 கன அடியாக சரிவு

நீர்மட்டம்:

அணையின் நீர்மட்டம் 109.77 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 78.08 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 91வது ஆண்டாக கடந்த ஜூலை 28 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணை வரலாற்றில் ஒரே ஆண்டில் மூன்று முறை அணை நிரம்பியது இதுவே முதல் முறையாகும்.

இதன் மூலம் சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக பாசன வசதி பெற்றது. மேட்டூர் அணையின் நீர் திறப்பினால் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் நடைபெற்றது. இதனால் குருவை, சம்பா சாகுபடி செய்துள்ள டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவை மற்றும் டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் 16 கண் மதகுகள் மூலமாக 2,500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வந்த நீர் தற்போது நிறுத்தப்பட்டது.

கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்ட வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையின் நீர்வரத்து சற்று குறைந்தது... வினாடிக்கு 817 கன அடியாக சரிவு

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 92.97 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 17.78 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 167 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 4,338 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 50.38 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 11.38 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 151 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 2,150 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்கக் கடலில் கலக்கிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7131
Active
10976
Recovered
78
Deaths
Last Updated: Fri 13 June, 2025 at 12:16 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Iran Israel Strikes: ”போரை தொடங்கிய இஸ்ரேல்” விடுவதாய் இல்லை என குண்டு மழை பொழிந்த ஈரான் - வீடியோ வைரல்
Iran Israel Strikes: ”போரை தொடங்கிய இஸ்ரேல்” விடுவதாய் இல்லை என குண்டு மழை பொழிந்த ஈரான் - வீடியோ வைரல்
அகமதாபாத்தில் பறிபோன 274 உயிர்கள்.. விமானி பற்றி லீக்கான புது தகவல் - இதுதான் அது
அகமதாபாத்தில் பறிபோன 274 உயிர்கள்.. விமானி பற்றி லீக்கான புது தகவல் - இதுதான் அது
EPS DMK: எடப்பாடி மிது திமுக ப்ரூட்டல் அட்டாக் - புது பட்டப்பெயர், எல்லாமே புஸ்வானங்கள் தான் என சாடல்
EPS DMK: எடப்பாடி மிது திமுக ப்ரூட்டல் அட்டாக் - புது பட்டப்பெயர், எல்லாமே புஸ்வானங்கள் தான் என சாடல்
Meghalaya Honemoon Murder: 3 முறை எஸ்கேப் ஆன கணவன் - காதலனோடு பக்கா ஸ்கெட்ச், போட்டு தள்ளிய மனைவி
Meghalaya Honemoon Murder: 3 முறை எஸ்கேப் ஆன கணவன் - காதலனோடு பக்கா ஸ்கெட்ச், போட்டு தள்ளிய மனைவி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”நமக்கு எதுக்கு அதிக சீட்” வார்னிங் கொடுத்த அமித்ஷா! EPS-ஐ வைத்து மோடியின் ப்ளான்பூட்டியிருந்த வீட்டில் தீ விபத்து சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு பகீர் கிளப்பும் காட்சி Coimbatore Cylinder Blastசாப்பிட்டபடி பஸ் ஒட்டிய DRIVER பீதியில் உறைந்த பயணிகள்! ஆம்னி நிறுவனம் அதிரடி! | Careless Driving

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Israel Strikes: ”போரை தொடங்கிய இஸ்ரேல்” விடுவதாய் இல்லை என குண்டு மழை பொழிந்த ஈரான் - வீடியோ வைரல்
Iran Israel Strikes: ”போரை தொடங்கிய இஸ்ரேல்” விடுவதாய் இல்லை என குண்டு மழை பொழிந்த ஈரான் - வீடியோ வைரல்
அகமதாபாத்தில் பறிபோன 274 உயிர்கள்.. விமானி பற்றி லீக்கான புது தகவல் - இதுதான் அது
அகமதாபாத்தில் பறிபோன 274 உயிர்கள்.. விமானி பற்றி லீக்கான புது தகவல் - இதுதான் அது
EPS DMK: எடப்பாடி மிது திமுக ப்ரூட்டல் அட்டாக் - புது பட்டப்பெயர், எல்லாமே புஸ்வானங்கள் தான் என சாடல்
EPS DMK: எடப்பாடி மிது திமுக ப்ரூட்டல் அட்டாக் - புது பட்டப்பெயர், எல்லாமே புஸ்வானங்கள் தான் என சாடல்
Meghalaya Honemoon Murder: 3 முறை எஸ்கேப் ஆன கணவன் - காதலனோடு பக்கா ஸ்கெட்ச், போட்டு தள்ளிய மனைவி
Meghalaya Honemoon Murder: 3 முறை எஸ்கேப் ஆன கணவன் - காதலனோடு பக்கா ஸ்கெட்ச், போட்டு தள்ளிய மனைவி
WTC Final SA vs AUS: ஜெயிச்சுடுயா பவுமா? வெறும் 69 ரன்கள்.. கறையை துடைக்குமா தென்னாப்பிரிக்கா?
WTC Final SA vs AUS: ஜெயிச்சுடுயா பவுமா? வெறும் 69 ரன்கள்.. கறையை துடைக்குமா தென்னாப்பிரிக்கா?
கலாநிதி மாறனின் 4000 கோடி சொத்துக்கு ஒரே வாரிசு... காவ்யாவின் காதலர் இந்த பிரபலமா? பயில்வான் போட்ட புது குண்டு!
கலாநிதி மாறனின் 4000 கோடி சொத்துக்கு ஒரே வாரிசு... காவ்யாவின் காதலர் இந்த பிரபலமா? பயில்வான் போட்ட புது குண்டு!
மொய் விருந்தில் வெற்றி பெறுவாளா தமிழ்செல்வி ?  பரபரக்கும் திருப்பங்களுடன் விஜய் டிவியின்  சின்ன மருமகள் நெடுந்தொடர் !! 
மொய் விருந்தில் வெற்றி பெறுவாளா தமிழ்செல்வி ?  பரபரக்கும் திருப்பங்களுடன் விஜய் டிவியின்  சின்ன மருமகள் நெடுந்தொடர் !! 
EPS Vs Stalin: நான் உண்மையான விவசாயியா.? நீங்க உண்மையான விவசாயியா.? ஸ்டாலினுக்கு இபிஎஸ் சரமாரி கேள்வி
நான் உண்மையான விவசாயியா.? நீங்க உண்மையான விவசாயியா.? ஸ்டாலினுக்கு இபிஎஸ் சரமாரி கேள்வி
Embed widget