மேலும் அறிய

மேட்டூர் அணையின் நீர் வரத்து 3,260 கன அடியில் இருந்து 3,017 கன அடியாக குறைவு!

மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 12,400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

கர்நாடகா மாநிலத்தில் பெய்து வந்த மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியது. தற்போது காவிரி கரையோர பகுதிகளில் மழை குறைந்து வருவதால், அங்கிருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது குறையத் தொடங்கியது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 3,165 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 3,260 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 3,017 கன அடியாக குறைந்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர் வரத்து 3,260 கன அடியில் இருந்து 3,017 கன அடியாக குறைவு!

அணையின் நீர் மட்டம் 115.45 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 86.39 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 89 வது ஆண்டாக மே 24 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை மே மாதத்தில் திறக்கப்படுவது இதுவே முதல் முறை. இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 16.5 லட்சம் ஏக்கர் பாசனம் பெறும். மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்பட்டு வந்த 5,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது நிறுத்தப்பட்டுள்ளது. அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக 12,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து உபரி நீர் 2,500 கன அடி 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது நிறுத்தப்பட்டது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 400 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையில் இருந்து மொத்தம் வினாடிக்கு 12,400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையின் நீர் வரத்து 3,260 கன அடியில் இருந்து 3,017 கன அடியாக குறைவு!

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 118.72 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 41.44 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,233 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 1,189 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 52.58 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 12.46 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 414 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 531 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

களைகட்டும் தவெக 2ம் ஆண்டு விழா; பாஜக, திமுக-விற்கு எதிராக பேனர்கள்! என்ன பேசுவார் விஜய்?
களைகட்டும் தவெக 2ம் ஆண்டு விழா; பாஜக, திமுக-விற்கு எதிராக பேனர்கள்! என்ன பேசுவார் விஜய்?
Su Venkatesan : 500 ரூபாய் விவகாரம்   ”காலில் குத்தும் முள்ளைதான் பிடுங்குவோம்...”  எச்.ராஜாவுக்கு சு.வெங்கடேசன் பதிலடி
Su Venkatesan : 500 ரூபாய் விவகாரம் ”காலில் குத்தும் முள்ளைதான் பிடுங்குவோம்...” எச்.ராஜாவுக்கு சு.வெங்கடேசன் பதிலடி
Bus Accident : அடுத்தடுத்து மோதிய ஆம்னி பேருந்துகள்.. அதிகாலையில் நிகழ்ந்த பயங்கர விபத்து! பயணிகள் நிலை என்ன?
Bus Accident : அடுத்தடுத்து மோதிய ஆம்னி பேருந்துகள்.. அதிகாலையில் நிகழ்ந்த பயங்கர விபத்து! பயணிகள் நிலை என்ன?
அமித்ஷாவுடன் ஒரே மேடையில் ஏறும் துணை முதலமைச்சர்.. பாதுகாப்பு வளையத்தில் கோயம்புத்தூர்
அமித்ஷாவுடன் ஒரே மேடையில் ஏறும் துணை முதலமைச்சர்.. பாதுகாப்பு வளையத்தில் கோயம்புத்தூர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
களைகட்டும் தவெக 2ம் ஆண்டு விழா; பாஜக, திமுக-விற்கு எதிராக பேனர்கள்! என்ன பேசுவார் விஜய்?
களைகட்டும் தவெக 2ம் ஆண்டு விழா; பாஜக, திமுக-விற்கு எதிராக பேனர்கள்! என்ன பேசுவார் விஜய்?
Su Venkatesan : 500 ரூபாய் விவகாரம்   ”காலில் குத்தும் முள்ளைதான் பிடுங்குவோம்...”  எச்.ராஜாவுக்கு சு.வெங்கடேசன் பதிலடி
Su Venkatesan : 500 ரூபாய் விவகாரம் ”காலில் குத்தும் முள்ளைதான் பிடுங்குவோம்...” எச்.ராஜாவுக்கு சு.வெங்கடேசன் பதிலடி
Bus Accident : அடுத்தடுத்து மோதிய ஆம்னி பேருந்துகள்.. அதிகாலையில் நிகழ்ந்த பயங்கர விபத்து! பயணிகள் நிலை என்ன?
Bus Accident : அடுத்தடுத்து மோதிய ஆம்னி பேருந்துகள்.. அதிகாலையில் நிகழ்ந்த பயங்கர விபத்து! பயணிகள் நிலை என்ன?
அமித்ஷாவுடன் ஒரே மேடையில் ஏறும் துணை முதலமைச்சர்.. பாதுகாப்பு வளையத்தில் கோயம்புத்தூர்
அமித்ஷாவுடன் ஒரே மேடையில் ஏறும் துணை முதலமைச்சர்.. பாதுகாப்பு வளையத்தில் கோயம்புத்தூர்
"ரூ 5,000 கொடுக்கிறோம்.. நம்பி ஓட்டு போடுங்க" முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அதிரடி!
Good Bad Ugly Teaser: தெறிக்குதே.. அஜித்தின் குட் பேட் அக்லி டீசர் எப்போ ரிலீஸ் தெரியுமா?
Good Bad Ugly Teaser: தெறிக்குதே.. அஜித்தின் குட் பேட் அக்லி டீசர் எப்போ ரிலீஸ் தெரியுமா?
Mayiladuthurai Power Shutdown (26.02.2025): மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை - இதுல உங்க ஊர் இருக்கா பாருங்க?
Mayiladuthurai Power Shutdown (26.02.2025): மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை - இதுல உங்க ஊர் இருக்கா பாருங்க?
"இன்குலாப் ஜிந்தாபாத்" 7ஆவது மாடியில் இருந்து குதித்த நபர்.. தலைமை செயலகத்தில் பரபரப்பு!
Embed widget