வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள கிருஷ்ணகிரியில் 2544 பொறுப்பாளர்கள் - பீலாராஜேஷ் பேட்டி
’’கேஆர்பி அணை அதன் முழு கொள்ளளவை எட்டி உள்ள நிலையில் மழை அதிகரிக்கும் பட்சத்தில் உபரிநீர் திறக்க வாய்ப்பு உள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை நடவடிக்கையாக அறிவுரைகள் வழங்க பட்டுள்ளது’’
கிருஷ்ணகிரி மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன் ஏற்பாடுகள் மற்றும் தயார் நிலை குறித்து ஆய்வு கூட்டம் ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக அரசின் முதன்மை செயலாளர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான பீலா ராஜேஷ் பங்கேற்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வு கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் எதிர் வரக்கூடிய வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் எடுக்கப்பட்டுள்ள பணிகள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
கூச்ச சுபாவம் To ஆட்கொல்லி.. காடும் மனிதனும்.. இயற்கை சொல்லும் புலிகளின் கதை..! #ManEater #Tiger
செய்தியாளர்களிடம் பேசிய கண்காணிப்பு அலுவலர் பீலா ராஜேஷ்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது அதனடிப்படையில் மாவட்டத்தில் 35 இடங்கள் தாழ்வான பகுதிகள் என கண்டறியப்பட்டுள்ளது. 47 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது, 2544 முதல் பணி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 158 பாம்பு பிடிக்கும் வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். அரசின் சார்பில் மழைநீர் வடிகால் தூய்மை பணி மாவட்டத்தில் 90% சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள 10 சதவீதம் பணிகள் ஒரு வாரத்திற்குள் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், கேஆர்பி அணை அதன் முழு கொள்ளளவை எட்டி உள்ள நிலையில் மழை அதிகரிக்கும் பட்சத்தில் உபரிநீர் திறக்க வாய்ப்பு உள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை நடவடிக்கையாக அறிவுரைகள் வழங்க பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்றும் தேவையான அளவிற்கு மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக நீர்நிலைகளில் பொதுமக்கள் சிறுவர்கள் ஆற்றில் குளிக்கவோ குளத்தில் இறங்க கூடாது என தெரிவிக்கும் வகையில் நீர்நிலைகள் உள்ள இடங்களில் அறிவிப்பு பலகைகள் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நெடுஞ்சாலை துறை மூலமாக மரங்கள் விழும் பட்சத்தில் அதனை உடனடியாக அகற்ற தேவையான அளவிற்கு பணியாளர்களும் ஜேசிபி வாகனமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மின் இணைப்புகள் பாதிக்கப்பட்டால் உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் கிராமப்புறங்களில் உள்ள சுகாதார மையங்களில் செவிலியர்கள் முழு பணியில் ஈடுபட அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்தார். கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி திட்ட அலுவலர் தேன்மொழி சுகாதாரத்துறை இணை இயக்குனர் கோவிந்தன் ஓசூர் சார் ஆட்சியர் மற்றும் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்