மேலும் அறிய

திமுக ஆட்சிக்கு வந்து 54 ஆண்டுகள் ஆகிறது - பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேட்டி

’’ஜெய் பீம் படம் வன்னியர் பட்டியல் சமூக மக்களிடையே மோதலை ஏற்படுத்த வேண்டும். சாதிய மோதல்களை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ளது’’

தருமபுரியில் பாரதிய ஜனதா கட்சியினருக்கான பயிற்சிப் பட்டறை நிகழ்ச்சி மூன்று நாட்கள் நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேச, கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச். ராஜா கலந்து கொண்டு பேசினார். இதனை தொடர்ந்து  செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா, "கடந்த 25 நாட்களுக்கு மேலாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகள் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்களும் விவசாயிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எதிர்க்கட்சித் தலைவராக தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் இருந்தபோது வெள்ள பாதிப்பால் ஒரு ஏக்கர் விவசாய நிலத்திற்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் தற்போது முதலமைச்சர் ஆக உள்ள ஸ்டாலின் ஒரு ஹெக்டருக்கு 20 ஆயிரம் மட்டுமே அறிவித்துள்ளார். பாஜக தொடர்ந்து வெள்ள பாதிப்பால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் தமிழக அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறது. 
 
திமுக ஆட்சிக்கு வந்து 54 ஆண்டுகள் ஆகிறது - பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேட்டி
 
வெள்ள நீரால் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் பாதிப்பு அடைந்து இருந்தால், அவர்களுக்கு நிவாரணமாக ரூபாய் 5 ஆயிரம் வழங்க வேண்டும்.  அரசியல், பொதுவாழ்வு, தனிமனிதம் இவை அனைத்திலுமே ஒழுக்கம் தேவை. சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நீர் வழி பாதைகளை ஆக்கிரமித்து அரசு கட்டிடங்கள், நீதிமன்றக் கட்டடங்கள் மற்றும் தனியார் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது.தமிழகத்தில் நீர்நிலைகள் பாதுகாப்பு குறித்த ஒழுக்க நெறி முறைகளை வகுக்க வேண்டும். தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு முடிவு கட்டாமல் இதுபோன்ற நெறி முறைகளை வகுக்க முடியாது. கடந்த ஆறு மாதத்தில் கழிவுநீர் கால்வாய்களை கூட சரி செய்ய முடியவில்லை. திமுக ஆட்சிக்கு வந்து ஆறுமாதம் ஆகவில்லை, 54 ஆண்டுகள் ஆகிறது. இந்த ஆட்சியாளர்கள் தவறுகளைத் திருத்திக் கொண்டு, நல்ல முறையில் மக்கள் பணியாற்ற வேண்டும்.
 
ஜெய் பீம் படம் வன்னியர் பட்டியல் சமூக மக்களிடையே மோதலை ஏற்படுத்த வேண்டும். சாதிய மோதல்களை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ளது. ஏன் படத்தில் அக்னி குண்டத்தில் வைக்க வேண்டும், லட்சுமி படத்தை ஏன் வைக்க வேண்டும், ஜெய்பீம் படத்தில் சரஸ்வதி படத்தை எடுக்கவில்லை என்றால், இது மிகப்பெரிய பிரச்சாரமாக தமிழகம் முழுவதும் எடுத்துச் செல்லப்படும். பாஜகவின் கல்வெட்டுகளில் நயினார் நாகேந்திரன் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் என்ற பதிவிட்டிருப்பது,பாஜக  சட்டமன்ற கட்சித் தலைவர் என்பது இதை பெரிதுபடுத்த வேண்டாம். ஏனென்றால் இன்று எதிர் கட்சியாக மிக உயர்ந்த குரல் கொடுத்து வருகிறது பாஜக. அதனால் யாராவது இதை செய்திருக்கலாம். இதனை பெரிதுபடுத்த வேண்டாம் என தெரிவித்தார்.
 
மேலும் வாரிசு அரசியல் குறித்து ஆர்.எஸ்.பாரதி கருத்துக்கு பதிலளித்து, ஆர்.எஸ்.பாரதி ஊடக நண்பர்களை தரக்குறைவாக பேசியவர். ஆர்.எஸ்.பாரதி மிகவும் படுகேவலம் ஆனவர் என ஹெச்.ராஜா பதிலளித்தார். மேலும் நீலகிரி ஆட்சியராக இருந்த இன்னசண்ட் திவ்யா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு, யானை வழித்தட பிரச்சினையில் மாவட்ட ஆட்சியர் ராஜினாமா செய்யும் வகையில் நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது என்பது எனது புரிதல் என்றார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் -  புது அறிவிப்பு இதோ
ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் - புது அறிவிப்பு இதோ
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Embed widget