மேலும் அறிய

சேலத்தில் கனமழை... கோடை வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல்.. மகிழ்ச்சியில் மக்கள்

சேலம் மாவட்டத்திற்கு வருகின்ற ஐந்தாம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மஞ்சள் நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வேலூர், சேலம், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெயிலின் அளவு 100 டிகிரியை தாண்டி பதிவாகிறது. அதோடு வெப்ப காற்றும் வீசி வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில், வளிமண்டலம் மேல் சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவை, சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மாநகர பகுதியில் கனமழை:

இந்த நிலையில், இன்று காலை முதல் சேலம் மாநகர பகுதியில் மிதமான சாரல் மழை பெய்தது. குறிப்பாக சேலம் புதிய பேருந்து நிலையம், ஐந்து ரோடு, ஜங்ஷன், அஸ்தம்பட்டி, பழைய பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அம்மாப்பேட்டை, நான்கு ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இது நண்பகல் ஒரு மணி அளவில் கனமழையாக செய்ய தொடங்கியது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் சேலம் மாநகரப் பகுதி முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் உருவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சேலத்தில் கனமழை... கோடை வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல்.. மகிழ்ச்சியில் மக்கள்

ஏற்காட்டில் மரம் சாய்ந்தது:

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நேற்று இரவு முதல் சாரல் மழை பெய்து வந்தது. தொடர்ந்து இன்று அதிகாலை முதல் கனமழை பெய்தது. இந்த கனமழை காரணமாக சேலம் ஏற்காடு பிரதான மலை பாதையில் ஏழாவது கொண்டை ஊசி வளைவிற்கு மேல் சாலையில் ஓரம் இருந்த ராட்சத மரம் ஒன்று சாலையில் விழுந்தது. அதிகாலை நேரம் என்பதால் சாலையில் எந்த வாகனமும் செல்லவில்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சேலம் ஏற்காடு பிரதான சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, மரத்தை சாலையில் இருந்து அப்புறப்படுத்தும் பணியில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி:

கோடை விடுமுறை தொடங்கி உள்ளதால் சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகிறது. குறிப்பாக, தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகளின் வரத்தை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில், ஏற்காட்டில் கனமழை பெய்து வருவதால் கடும் பணி நிலவி வருகிறது. இதனால் ஏற்காடு வந்த சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சேலத்தில் கனமழை... கோடை வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல்.. மகிழ்ச்சியில் மக்கள்

ஆத்தூரில் கனமழை:

இதேபோன்று சேலம் மாவட்டம் ஆத்தூரில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் உருவாகியுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மஞ்சள் எச்சரிக்கை:

சேலம் மாவட்டத்திற்கு வருகின்ற ஐந்தாம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மஞ்சள் நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதனால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் உருவாகும் என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தலைப்பு செய்திகள்

சேலத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு விமான சேவை தொடர்வதை நீட்டிக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
சேலத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு விமான சேவை தொடர்வதை நீட்டிக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
அரசியல் களத்தில் ஆச்சரியம்! தவெக பட்ஜெட்டை பாராட்டித் தள்ளிய இடதுசாரி தலைவர் முத்தரசன்!
அரசியல் களத்தில் ஆச்சரியம்! தவெக பட்ஜெட்டை பாராட்டித் தள்ளிய இடதுசாரி தலைவர் முத்தரசன்!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
"ராகுல் கிட்ட மேகதாது பத்தி ஏன் பேசல?" - விஜய்யைக் கேள்வி கேட்டு வெளுத்த இயக்குநர் கெளதமன்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Embed widget