மேலும் அறிய

Gym Owner Death: அதிர்ச்சி... அதிக நேரம் உடற்பயிற்சி... ஜிம் உரிமையாளருக்கு நேர்ந்த கதி

நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்தாலும், உயர் ரத்த அழுத்தம் இருந்ததால் தனது மகன் உயிரிழந்தார் என தாய் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

சேலம் மாநகர் கோட்டை வெங்கடசாமி தெருவை சேர்ந்தவர் மகமூத் திமுக நிர்வாகி. இவரது மகன் முகதீர் முகமது, தாது மகன் பாய் குட்டை பகுதியில் உதிரிபாக கடை வைத்திருந்தார். இவர், குகை ஆற்றோர வடக்கு தெருவில் ஜிம் ஒன்றையும் நடத்தி வந்தார். தினசரி ஜிம்மில் பயிற்சி எடுக்கும் இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் தனது ஜிம்மிற்கு சென்றார். அங்கு உடற்பயிற்சியில் ஈடுபட்ட அவர் நீராவி குளியல் போட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் இரவு 10:30 மணி ஆகியும் முகதீர் முகமது வீடு திரும்பாததால் அவரது தாய் அவருக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவர் போன் எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அவரது ஜிம்மிற்கு வந்து பார்த்துள்ளனர். அப்போது அங்குள்ள நீராவி குளியல் அறையில் அவர் மயங்க அவர் மயங்கி விழுந்து கிடப்பது தெரிந்தது. அந்த நீராவி குளியல் அறை முழுவதும் கண்ணாடி கொண்டு அமைக்கப்பட்டிருந்தது. அந்த கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றபோது காதில் ரத்தம் வந்த நிலையில் அவர் கிடந்தார். 

Gym Owner Death: அதிர்ச்சி... அதிக நேரம் உடற்பயிற்சி... ஜிம் உரிமையாளருக்கு நேர்ந்த கதி

அவரை மீட்டு உடனடியாக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்து பார்த்தபோது அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடலை குடும்பத்தினர் வீட்டுக்கு கொண்டு வந்தனர். இதுபற்றி செவ்வாய்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், உதவி கமிஷனர் ஹரிசங்கரி, இன்ஸ்பெக்டர் தேவராஜ் மற்றும் போலீசார், முகதீர் முகமதின் ஜிம்மிற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதுபற்றி போலீசார் கூறுகையில், முகதீர் முகமதுக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்துள்ளது. அவர் அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது என்றனர். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக முகதீர் முகமதின் தாயிடம் கேட்டபோது, ஞாயிற்றுக்கிழமை ஜிம்முக்கு செல்ல வேண்டாம் என்று பலமுறை கூறியும், என் பேச்சைக் கேட்காமல் சென்றார். நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்து போன் செய்தேன். ஆனால் எடுக்காததால் அவரது தம்பியை அனுப்பி பார்க்கச் சொன்னபோது குளியல் அறையில் மயங்கி விழுந்ததாக தகவல் வந்தது. உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம் அவர்கள் உயிரிழந்ததாக தெரிவித்தனர். நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்தாலும், உயர் ரத்த அழுத்தம் இருந்ததால் தனது மகன் உயிரிழந்தார் என கண்ணீர் மல்க தெரிவித்தார். 

தலைப்பு செய்திகள்

சரசரவென உயரும் மேட்டூர் அணை? ஒரே நாளில் நீர்வரத்து அதிரடி உயர்வு... லேட்டஸ்ட் நிலவரம் இதோ!
சரசரவென உயரும் மேட்டூர் அணை? ஒரே நாளில் நீர்வரத்து அதிரடி உயர்வு... லேட்டஸ்ட் நிலவரம் இதோ!
மேகதாது அணை: 'சட்டத்திற்கு புறம்பானது' - சௌமியா அன்புமணி சாடல்
மேகதாது அணை: 'சட்டத்திற்கு புறம்பானது' - சௌமியா அன்புமணி சாடல்
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
மேகதாது அணை கட்டினால் டெல்டா பாலைவனமாகும்: எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை
மேகதாது அணை கட்டினால் டெல்டா பாலைவனமாகும்: எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget