மேலும் அறிய

முதல்வரின் அறிக்கையை பின்பற்றாத திமுகவினர் - தருமபுரியில் இடையூறாக இருந்த விளம்பர பதாகை

தருமபுரியில் மின்கம்பத்தை ஒட்டி திமுகவினர் விளம்பர பதாகை வைத்ததால், கம்பத்தின் மீது ஏற முடியாமல், ஜேசிபி உதவியுடன் மின் கம்பத்தில் ஏறி பணி செய்த மின் ஊழியர்.

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்த தினத்தை இன்று திமுக தொண்டர்கள் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில்,  தமிழக முதலமைச்சர் தனது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து, விளம்பர பதாகைகள் வைப்பது,  ஆடம்பரம் செய்ய வேண்டாம், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம்.  ஏழை, எளியோர், ஆதரவற்றோர், வயது முதிர்ந்தவர்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்குங்கள் என அறிக்கை விடுத்து இருந்தார். ஆனாலும் தருமபுரி மாவட்ட திமுகவினர், தருமபுரி நகரம், அரூர் நகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திமுக தொண்டர்கள் முதலமைச்சரின் மீது கொண்ட அதீத பற்றால் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து பதாகைகளை வைத்துள்ளனர். மேலும் தருமபுரி நகர பகுதியில் நெசவாளர் காலனி அருகே வாழ்த்து பதாகையை மின்கம்பத்தில் கட்டியுள்ளனர். 

முதல்வரின் அறிக்கையை பின்பற்றாத திமுகவினர் - தருமபுரியில் இடையூறாக இருந்த விளம்பர பதாகை
 
இந்நிலையில் நெசவாளர் காலனி அருகே உள்ள திருமண மண்டபம் தற்பொழுது இடிக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த திருமண மண்டபத்திற்கு செல்கின்ற மின் இணைப்பை துண்டிப்பதற்காக, மின் ஊழியர்கள் வந்தனர். ஆனால் மின்கம்பத்தில் ஏற முடியாத அளவிற்கு விளம்பர பதாகை கட்டப்பட்டிருந்தால், மின் ஊழியர்களால் மின் இணைப்பை துண்டிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
 
இதனை தொடர்ந்து அருகில் கட்டிட இடிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஜேசிபி இயந்திரத்தை அழைத்து வந்து, ஜேசிபி எந்திரத்தின் உதவியுடன் மின் ஊழியர் மின் கம்பத்தில் ஏறி மின் இணைப்பைத் துண்டித்தார். இதனால் ஜேசிபி நீண்ட நேரமாக மின் கம்பத்தின் அருகிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் தனது பிறந்த நாளை பேனர் வைத்து ஆடம்பரம் செய்ய வேண்டாம், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என முதலமைச்சர் திமுக தொண்டர்களுக்கு அறிக்கை விடுத்தும், தருமபுரி திமுகவினர், அவர் மீது கொண்ட அதீத பற்றால் பல்வேறு இடங்களில் களில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பதாகைகள் வைத்துள்ளனர்.

முதல்வரின் அறிக்கையை பின்பற்றாத திமுகவினர் - தருமபுரியில் இடையூறாக இருந்த விளம்பர பதாகை
 
மேலும், மின்கம்பத்தில் வாழ்த்து பதாகை கட்டி, மின் ஊழியர்கள் பணி செய்ய இடையூறு ஏற்படுத்தி, முதலமைச்சரின் அறிக்கையை திமுகவினர் காற்றில் பறக்க விட்டுள்ளனர். தருமபுரியில் திமுகவினர் வைத்த விளம்பர பதாகையால் மின்கம்பத்தில் ஏற முடியாமல் ஜேசிபி உதவியுடன் பணியை செய்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

அரசியல் களத்தில் ஆச்சரியம்! தவெக பட்ஜெட்டை பாராட்டித் தள்ளிய இடதுசாரி தலைவர் முத்தரசன்!
அரசியல் களத்தில் ஆச்சரியம்! தவெக பட்ஜெட்டை பாராட்டித் தள்ளிய இடதுசாரி தலைவர் முத்தரசன்!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
"ராகுல் கிட்ட மேகதாது பத்தி ஏன் பேசல?" - விஜய்யைக் கேள்வி கேட்டு வெளுத்த இயக்குநர் கெளதமன்
எல்லாமே தளபதி மேஜிக்தான்! சேலத்து வண்டி வேடிக்கையில் கெத்து காட்டிய அமெரிக்க விஜய் ரசிகர்!
எல்லாமே தளபதி மேஜிக்தான்! சேலத்து வண்டி வேடிக்கையில் கெத்து காட்டிய அமெரிக்க விஜய் ரசிகர்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Embed widget