மேலும் அறிய

Diwali 2023: தருமபுரியில் பலகாரங்கள் தயாரித்து வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் தீவிரம்

தீபாவளிக்கு இன்னும் இரண்டு நாட்கள் இருக்கின்ற நிலையில் தீபாவளி பண்டிகைக்கான இனிப்பு பலகாரங்கள் செய்யும் பணியும், வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தீபாவளி பண்டிகையை ஒட்டி தருமபுரியில் பல்வேறு வகையான பலகாரங்கள் தயாரித்து வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நல்ல வருவாய் கிடைத்ததாக உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
 
தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசு, புத்தாடை, இனிப்பு பலகாரங்கள். இதனால் தீபாவளி பண்டிகை கொண்டாடுபவர்கள் தங்களது வீடுகளில் இனிப்பு பலகாரங்கள் செய்து, பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தொழிற்சாலைகள், பெரிய நிறுவனங்கள் போன்றவற்றில் பணியாற்றுகின்றவர்களுக்கு அந்தந்த நிறுவனங்களில் தீபாவளிக்கு பட்டாசு மற்றும் இனிப்புகளை பரிசாக வழங்கி வருகின்றனர். இதற்காக தனியாக இனிப்புகள் தயாரிப்பதும், பேக்கரிகளில் தீபாவளிக்கு என்று பல்வேறு ரகங்களில் இனிப்புகள் தயாரிக்கும் விற்பனை செய்து வருகின்றனர்.

Diwali 2023: தருமபுரியில் பலகாரங்கள் தயாரித்து வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் தீவிரம்
 
இந்நிலையில் தருமபுரியில் பல்வேறு இடங்களில் தீபாவளி பண்டிகைகளுக்கு விதவிதமான வகையில் இனிப்பு பலகாரங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு இடங்களில் திருமண மண்டபங்களில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இனிப்புகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படுகின்ற இனிப்பு பலகாரங்கள் சேலம், பெங்களூர், ஓசூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சென்னை போன்ற இடங்களில் உள்ள தொழிற்சாலைகள் பெரிய நிறுவனங்கள் போன்றவற்றிற்கு ஆர்டரின் பெயரில் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. தீபாவளிக்கு இன்னும் இரண்டு நாட்கள் இருக்கின்ற நிலையில் தீபாவளி பண்டிகைக்கான இனிப்பு பலகாரங்கள் செய்யும் பணியும், வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Diwali 2023: தருமபுரியில் பலகாரங்கள் தயாரித்து வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் தீவிரம்
 
தருமபுரியில் இருந்து உள்ள ஸ்வீட் கடைகளில் சாதாரண இனிப்பு பலகாரங்கள், நெய் பலகாரங்கள் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இங்கு மைசூர் பாக், பாதுர்ஷா, சோன்பப்படி, லட்டு, நட்ஸ் லட்டு, அல்வா, முந்திரி மற்றும் கேரட் அல்வா, முந்திரி கேக், பாதாம் கேக், குலோப் ஜாமூன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வகையிலான இனிப்புகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் வாடிக்கையாளர்களை கவருகின்ற வகையில், கொய்யா,  வாட்டர் ஆப்பிள், சிறிய துப்பாக்கி தோட்டாக்கள் போன்ற வடிவங்களில் பல வண்ணங்களில் ரசாயனம் இல்லாமல் இனிப்புகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் ஒரு கிலோ இனிப்புகள் 300 ரூபாய் வரையிலும், முந்திரி, நெய் போன்றவற்றில் தயாரிக்கப்படும், ஸ்பெஷல் இனிப்பு பலகாரங்கள் கிலோ 500 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்பொழுது பண்டிகை வருகின்ற நிலையில் பலகாரங்கள் தயாரிப்பதும் அதனை ஆர்டர் கொடுத்த இடங்களுக்கு அனுப்பி வைக்கின்ற பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. மேலும் கடந்த ஆண்டு தீபாவளியை காட்டிலும், இந்த ஆண்டு தீபாவளிக்கு அதிகப்படியான இனிப்புகள் ஆர்டர் கிடைத்துள்ளதாகவும், இந்த தீபாவளி பண்டிகையில் நல்ல வருவாய் கிடைத்திருப்பதாகவும் இனிப்பு உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Embed widget