மேலும் அறிய
Advertisement
தருமபுரி: கூட்டுறவு கடன் சங்கத்தில் 43 லட்சம் முறைகேடு - 4 பேரை கைது செய்த வணிக குற்ற புலனாய்வுத்துறை
விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கடன் தொகையினை வழங்காமல் மோசடி செய்த சம்பவம் விவசாயிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த மருதிப்பட்டி கிராமத்தில், கீழ்மொரப்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு செய்ல்பட்டு வருகிறது. இந்த கடன் சங்கத்தில் கடந்த 2014 முதல் 2019 வரை சங்க தலைவராக இருந்த அதிமுக வைசேர்ந்த பார்த்தீபன் மற்றும் செயலராக இருந்த பொன்னுசாமி, கருணாநிதி, சிவலிங்கம் ஆகியோர் இணைந்து, கடந்த 2015-16 ஆம் ஆண்டு அரசு வழங்கும் பயிர் கடன், விவசாய கடன், நகை கடன் உள்ளிட்ட கடன்களை வழங்க ஆவணங்களை விவசாயிகளிடம் பெற்றுள்ளனர். இதில் பல விவசாயிகளின் பெயரில் கடன் வழங்கியதாக பதிவு செய்துவிட்டு, நான்கு பணத்தை எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆண்டு தணிக்கையின் போது, சங்க கணக்கில், பணம் செலுத்தாத விவசாயிகளிடம் விசாரணை செய்தபோது, கடன் வாங்கிவில்லை என தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து விசாரணை செய்ததில், கடன் சங்கத்தின் செயலர், ஊழியர்கள் இணைந்து 43 லட்சம் மோசடி செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து முறைகேடு செய்துள்ளார்கள் மீது நடவடிக்கை எடுக்க, கூட்டுறவு சங்க துணை பதிவாளர் தருமபுரி மாவட்ட வணிக குற்ற புலணாய்வு பிரிவினருக்கு புகார் அளித்தார்.
இந்த புகாரை பெற்றுக் கொண்ட வணிக குற்ற புலணாய்வு பிரிவினர் இது தொடர்பாக தொடர்ந்து, கடந்த ஆறு மாதங்களாக ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் கடன் வழங்காமல் கடன் வழங்கியதாக 43,31,472 ரூபாயை முறைகேடு செய்தது, வணிகவியல் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து முறைகேடு செய்த அப்போது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவராக இருந்த அதிமுகவை சேர்ந்த கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் பார்த்திபன், சங்க செயலாராக பணியாற்றிய பொன்னுசாமி (தற்போது காரிமங்கலம் அடுத்த பொம்மஹள்ளியில் பணியாற்றுகிறார்), எழுத்தர்கள் (பணி ஓய்வு மெற்றவர்கள்) சிவலிங்கம், கருணாநிதி ஆகிய நான்கு பேரை, வணிகவியல் குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்து விசாரணை செய்கின்றனர். தொடர்ந்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கடன் தொகையினை வழங்காமல் மோசடி செய்த சம்பவம் விவசாயிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதேளுபோன்று பல தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள் பெயரில் பல இலட்சம் மோசடி நடந்திருப்பதாகவும், முழுமையாக விசாரிக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion