மேலும் அறிய
Advertisement
தருமபுரி: அரூர் அருகே கூடுதல் விலைக்கு மதுவிற்றதால் மேற்பார்வையாளர் சஸ்பெண்ட்
’’அனைத்து அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகளிலும் அதிகபட்ச விலையை விட கூடுதல் கூடுதலாக விற்பனை செய்யப்படும் பட்சத்தில் துறை ரீதியான நடவடிக்கை கடுமையாக இருக்கும்’’
தருமபுரி மாவட்டத்தில் 96 அரசு மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு கடைகளிலும் ஒரு மேற்பார்வையாளர், விற்பனையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகளில், மது பாட்டில்களின் மீது, அதிகபட்ச விலையை விட கூடுதலாக விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து அரசு மதுக் கடைகளில் அதிகபட்ச விலையை விட, கூடுதல் பணம் வசூல் செய்தால் அவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் அரசு மதுபான கடைகளில் மாவட்ட மேலாளர்கள், முதுநிலை மண்டல மேலாளர்கள் திடீர் திடீரென ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த சிக்களூரில் உள்ள அரசு மதுபான சில்லரை விற்பனை கடையில், சேலம் முதுநிலை மண்டல மேலாளர் ஏ.ராஜ்குமார் திடீரென ஆய்வு செய்தார். அப்பொழுது அரசு மதுபான சில்லரை விற்பனை கடையில் மது வாங்க வருபவர்களிடம் அதிகபட்ச விலையை விட கூடுதலாக பணம் வசூல் செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சேலம் முதுநிலை மண்டல மேலாளர் ஏ.ராஜ்குமார் விசாரணை நடத்தினார். அப்பொழுது மதுக்கடையின் மேற்பார்வையாளர் காசிநாதன், அதிகபட்ச விலையை விட கூடுதலாக பணம் வசூல் செய்ததும், சிக்களூர் கடையில் போதிய விற்பனையாளர்கள் இருந்தும், அருகில் உள்ள கடையில் இருந்த விற்பனையாளர் பாஸ்கர் என்பவரை அழைத்து வந்து மது விற்பனையில் கூடுதலாக பணம் வசூலித்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அதிகபட்ச விலையை விட, கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்ததும், போதிய விற்பனையாளர்கள் பணியிலிருந்தும் அருகில் உள்ள கடையில் பணியாற்றும் விற்பனையாளரை வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்த காரணத்திற்காக, கடையின் மேற்பார்வையாளர் காசிநாதன், விற்பனையாளர் பாஸ்கர் இருவரையும் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டு, இருவரையும் தற்காலிக பணிநீக்கம் செய்து சேலம் முதுநிலை மண்டல மேலாளர் ஏ.ராஜ்குமார் உத்தரவிட்டார்.
மேலும் அனைத்து அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகளிலும் அதிகபட்ச விலையை விட கூடுதல் கூடுதலாக விற்பனை செய்யக்கூடாது. அவ்வாறு கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யப்படும் பட்சத்தில் துறை ரீதியான நடவடிக்கை கடுமையாக இருக்கும். அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகளுடன் இணைந்த அரசு உத்தரவின் பேரில் மூடப்பட்டுள்ள மதுக்கூடங்களை திறந்து, மது அருந்த அனுமதிப்பதோ அல்லது தின்பண்டங்களை விற்பனை செய்யவோ கூடாது. மதுபான சில்லரை விற்பனைக் கடைகளில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என்றும் மதுபான கடை ஊழியர்களை சேலம் முதுநிலை மண்டல மேலாளர் ஏ.ராஜ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
மதுரை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion